Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

“என் அண்ணனின் முடிவிற்கு அவள்தான் காரணம் என்றால் அவளுக்கு சரியான தண்டனையை நான் தருவேன்”

“அதற்குதான் உன்னை இங்கு அழைத்து வந்தேன். முதலில் இந்த ஸ்பேஸ்ஷிப் பற்றி தெரிந்து கொள்.”

“சொல்லுங்கள் ஸர்”

“இதுபற்றிய விவரங்கள் பாதிதான் தெரியும். இந்த ரிசர்ச் பாதியிலேயே நிண்று விட்டது. இங்கு பணியாற்றிய விஞ்ஞானிகள்கூட இதிலிருந்து விலகி விட்டனர்.. அதாவது அவர்களை தற்காலிகமாக அமைதியாக வேறு பணியை செய்ய வைத்திருக்கிறோம்“

“ஏன்?”

“மிட்டிஸாவிற்கு சந்தேகம் வந்து விட்டது. அவளுக்கு இதுபற்றி தெரியக் கூடாது என்று நினைத்தோம்’

“---?”

“ஓரு சந்தேகம் உள்ளது. அவளுக்கும் ஆண்ட்ரமீடாவினருக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளதோ என்று?

  "எப்படி?"

"சில ரகசிய விவரங்கள்.. க்வார்ட்ஸ் இருப்பை பற்றி நாம் அறிந்தவை அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதேபோல நாம் திட்டமிடும் தாக்குதல்கள் பற்றிய விவரங்களும் லீக் ஆகி விட்டன."

"இப்படி செயவதால் மிட்டிஸாவிற்கு என்ன லாபம்?"

"ஆட்சியை கைபற்ற உதவும் ஒரு தந்திரமாக இருக்கலாம்.  அவளுடைய ஸ்பேஸ் கார்டுகள் ஆர்மி மட்டும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதில்லை. விஸ்ரா விசயத்தை தவிர.." அவர் தொடர்ந்து சில விசயங்களை விளக்கினார்.

ஜெனரல் ஸ்மித் மின்வரோவின் அதிபர். அவரை மக்கள் நம்புகிறார்கள். தன்னலம் இல்லாத நல்ல தலைவர். ஒருவகையில் பார்த்தால் அது குடும்ப ஆட்சிபோல்தான். ராணுவ கட்டமைப்புடன் இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் வழிவழியாக ஸ்மித்தின் முன்னோர்கள்தான் மின்வரோவை ஆட்சி செய்து வருகிறார்கள்.

மின்வரோவினை ஆளும் தகுதி அவர்களுக்குதான் உள்ளதென மக்களும் நம்பினர். அது ஒரு சிறிய கிரகம்தான்.  மக்கள் தொகையும் ஒரு லட்சத்திற்குள்தான் அடங்கும். அதேபோல பொருளாதாரத்தை தூக்கி  நிறுத்தும் இயற்கை சக்திகள் எதுவும் கிடையாது. சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜனும் குடிக்க தேவையான தண்ணீர்ரும் கிடைத்தன. உணவு அது அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. உணவு உற்பத்தியும் வினியோகமும் அரசின் கட்டுபாடுதான். தங்கத்தைவிட அதிக மதிப்பு மிக்க குவார்ட்ஸ் அந்த நாட்டின் பொருளாதாரத்தின் ஜீவ நாடியாக இருந்தது. அதுதான் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கும் காரணமாகவும் ஆனது.

கையிருப்பில் இருக்கும் குவார்ட்ஸை மற்ற கிரகவாசிகளுக்கு  நேர்மையாக தந்து மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். மின்வரோ போன்ற சிறுகோள்கள் சிலவற்றில் வசிக்கும் கிரகவாசிகள் ஒரு கூட்டமைப்பை ஆரம்பித்து ஒருவருக்கொருவர் உதவி கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு எதிரானவர்களாக கருதப்படும் காலக்டிக் பைரேட்ஸ்களும் ஆண்ட்ரமீடா ஏலியன்களும் இந்த கூட்டமைப்பை சேர்ந்த கிரகவாசிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

ஸ்மித்தின் மகளான மிட்டிஸாவிற்கு அடுத்த அதிபராகும் ஆசை வந்து விட்டது. அதற்காக தகுதிகளை வளர்த்துக் கொண்டாலும்… அவளுடைய சுயநல புத்தி பல கிறுக்கு யுக்திகளை செய்ய வைத்தது.

மின்வரோவின் பலவீனம் அவர்களுடைய விண்வெளி தொழில் நுட்பம்தான். அவர்களுடைய விண்கலம் அரை ஒளியாண்டுகள்கூட செல்லாது. அவர்களால் ஆன்ட்ரமீடா ஏலியன்களை எதிர்க்க முடியவில்லை.

அவர்களுக்கு குவார்டஸை தந்து விட்டால் மின்வராவை தாக்க மாட்டார்கள்.

"இதுதான் மிட்டிஸாவின் திட்டமா? ஆனால் அவர்களுடன் இது போன்ற ஒப்பந்தம் செயது கொள்வது எதிரியை நண்மனாக்கிக கொள்ளும் திட்டம்தானே"

"ஆனால் அதற்கு நாம் தரும் விலை அபாயகரமானது. ஆன்ட்ரமீடாவினர் குவார்ட்ஸை அழிவு சக்தி மாற்றும் அறிவியல் தெரித்தவர்கள். அவர்களால் மற்ற கிரகங்களை அழித்துவிட முடியும்."

"நாம் வாழ அடுத்தவர்களை அழிப்பது நியாயமில்லை. "

"கரெக்ட்…  அதைதான் நாங்கள் எதிர்க்கிறோம்."

"இந்த விண்கலத்தை போன்று நாம் தயாரித்து விட்டால்… அவர்களை  தோற்கடித்து விடலாம்."

"அது இப்போது பாதியில் நிற்கிறது."

"நான் என்ன செய்ய வேண்டும் ஸர்"

"விஸ்ரோ விட்ட காரியத்தை நீ தொடர வேண்டும்"

"எனக்கு அந்த அளவிற்கு அறிவியல் நாலேட்ஜ் இல்லை.. "

"எனக்கு நம்பிக்கை இருக்கிறது. யூ ஆர் திங்கிங் பியாண்ட்.  இந்த விண்கலத்தை உனக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன். புதிய விவரம் எதுவும் உனக்கு தோன்றலாம் அல்லவா"

அவளுக்கு எங்கே தோன்றியது… அந்த சிம்ஹன் சொன்னதை செய்தாள்.

"நான் முயற்சிக்கிறேன் ஸர்" என்றவள் அந்த விண்கலத்திற்குள் நுழைந்தாள்.

தொடரும்

Episode 10

Episode 12

Go to Yaanum neeyum evvazhi arithum story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார்Srivi 2019-05-15 07:13
Sema update Sissie..paapom eppide mitiza kuttaiya kuzhappa porangannu.. enga ponalum naalu peru politics panna vandhruanga..cheche
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார்AdharvJo 2019-05-14 19:52
steam pch enga parthalum politics!! nice update ms Sagampari :clap: :clap: Sad of Vizra..Waiting to see how Simhan would help Hanika to continue vizra's work.

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார்madhumathi9 2019-05-14 18:14
facepalm vetru kurahathilum idhu polthaan nadakkuma? Nice epi.interesting aaga poguthu kathai.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top