Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 04 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 04 - பிரேமா சுப்பையா

Ethir ethire neeyum naanum

டுத்த நாள் அவளின் வருகைக்காக எதிர்பார்த்திருந்தான் அமர் .. எப்போதும் போல் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்தவள் அமரை எதிர்பார்க்கவில்லை ..."எப்பயும் லேட்டா தான வருவாரு?" என்கிறது இவள் மனம்.

அவள் முகமே அவள் அகத்தை வெளிச்சம் போட்டு காட்டிட சுவாரஸ்யமாய் தீண்டியது அவன் பார்வை ...

"அட பாவி அமரு உனக்கு இப்படியெல்லாம் கூட லுக்கு விட தெரியுமா?" என்ற ஆச்சர்ய பார்வை அவளிடம் இருந்து ..புரிந்து கொண்டான் போலும் அவளது பார்வையை ... விஷம புன்னகை அவனிடம் இருந்து.

ஏற்கனவே "இது சரியா? தவறா ?என்ற குழப்பம் ...கண்முன்னே அவளின் கண்மணி ....நம்பிக்கை தும்பிக்கை என்று உருகும் ராம் ...ஐயோ இந்த அல்வா மீசையை முறுக்கிட்டு என்னை பார்த்து துரோகின்னு சொல்லிட்டா?" என்ற கவலை அவளை வருத்த...இவனின் இந்த பார்வை அவளுள் குளிர் காய்ச்சலை ஏற்படுத்த ...அவளின் அந்த அச்சத்தையும் அச்சு பிசகாமல் அவள் முகம் பிரதிபலிக்க நொடி பொழுதில் அவன் பார்வை கண்ணிய நிலைக்கு தாவி ...அவளிடம் மன்னிப்பை கேட்க

சற்றாய் ஆசுவாச பட்டது அவள் மனம். "அமர் …..ம் கொஞ்சம் பேசணும்” என்று அவள் பற்கள் டைப் அடித்து வார்த்தையை வெளிவிட அவளின் இந்த பதற்றம் அவனை வெகுவாய் கவரவே செய்தது.

"பொன்ஸ், ரிலாக்ஸ் ..என்னால நம்பவே முடியல ...நீயா இப்படி? டான்னு டான்னு பேசி அசரடிக்கிற என் பொன்ஸ் எங்க போனா?"  என்று அவன் தேட .

அவன் சீண்டலில் சற்றே பதற்றத்தை தணித்தவள் "ம்" லீவுக்கு ஊருக்கு போயிருக்கா ..அப்போ முடிவை  அந்த பொன்ஸ் கிட்டையே கேட்டுக்கோங்க” என்று முகத்தை  தூக்கிவைத்து கொள்ள

“அச்சச்சோ ...பொன்ஸ் இதெல்லாம் ரொம்ப தப்பு ...சொல்லவேண்டியதை என் டார்லிங் டக்குனு சொல்லிடுவாங்களாம்” என்று அவன் செல்லம் கொஞ்ச

சிலிர்த்தது அவளுக்கு  "டார்லிங் ஆ ....டேய் என்னடா  இது ? இன்னும் நான் எஸ் கூட சொல்லலை அதுக்குள்ளே இவ்வளவு ஸ்பீடா ..? டேய் அமரு ஓவர் ஸ்பீட் உடம்புக்கு மட்டும் இல்ல லவ்வுக்கு கூட ஆகாது" என்று அவள் மனம் கொக்கரிக்க  “சே பயபுள்ள நம்மளை அவ்வளவு லவ் பண்றானாக்கும்" என்று அவனுக்காக பரிதவித்தது காதல் மனது.

அவளின் இந்த திடீர் மௌனத்தை அளந்தவன் ... “என்னமா ரொம்ப டென்சன் கொடுக்கிறேனா?” என்று சற்றே இறங்கிய குரலில் பேச

தவிக்கிறது இவளுக்கு அவனின் சோக முகத்தை பார்க்க….

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ...ரொம்ப பீல் பண்ண வேண்டாம் ஆனா   நான் என் முடிவை சொல்றதுக்கு முன்னாடி  நிறையா பேசணும் ..நிறையா கேட்கனும்” என்று சொல்ல

அவளின் வார்த்தைகளை கேட்டு பிரகாசமானது அவன் முகம்! “எவ்வளவு வேணும்னாலும் பேசலாம் ...கேட்கலாம் பட் உன் முடிவு என்னன்னு எனக்கு இப்பவே தெரியும் ...தேங்க்ஸ் பொன்ஸ்  ஐ யம் பீலிங் லக்கி" என்று சொல்லிவிட்டு விசிலடித்து செல்ல அப்போது தான் சுற்றி முற்றி பார்த்தவள் பெரு மூச்சு விட்டாள் எப்போதும் போல் பதினோரு மணிக்கே அனைத்து நபர்களும் வர தொடங்கினர் ..

மாலை அந்தி சாயும் வேளை கடற்கரையில் அவனும் அவளும் ..

"பொன்ஸ் வந்து அரை மணி நேரம் ஆகுது பொன்ஸ் நிறையா பேசணும்னு சொன்ன ...சொல்லு டார்லிங்” என்று அவன் தொடங்க

அவள் கை நீட்டி அவனை நிறுத்தச் சொன்னாள்..

"ஏய் என்ன ஆச்சு?" என்று அவன் கேட்க

"அமர், ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு தெளிவா சொல்லிடுறேன் ...நீங்க எதுல இம்ப்ரெஸ் ஆகி என்னை லவ் பண்ணீங்கன்னு தெரியாது பட் நான் கிராமத்து வாசம் நிறைஞ்ச பொண்ணு ...இந்த என்னோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ்  மாடர்ன்னா இருந்தாலும், நான் ரொம்ப பேமிலி ஓரியன்டேட் எனக்கு என் குடும்பம் முக்கியம் ...அவங்க சம்மதம் முக்கியம்" என்று  அவள் சொல்ல    

"கமான் பொன்ஸ், எனக்கு உன்னை பிடிச்சதே நீ சொன்ன காரணத்துக்காக தான் ..! எனக்கும் என் குடும்பம் முக்கியம் அவங்க சம்மதம் முக்கியம் எல்லாத்தையும் விட உனக்கு என் வீட்ல எல்லா உரிமையும் மரியாதையும் கிடைக்கணும் அது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம்”   என்று  பேசியபடி அவள் கையை பிடிக்க பட்டென்று தட்டி விட்டவள்

"அமர், ப்ளீஸ் லிசென்..ரெண்டு பேர் வீட்லயும் சம்மதம் கிடைக்கிற வரைக்கும் என்னை டச் பண்ணி பேசுறது ...வெளிய கூப்பிடுறது .. அப்புறம் இந்த மூவி ...பீச் ...பார்க் ...பார்ட்டி ..இதுக்கெல்லாம் நோ தான். எப்பவும் போல இருக்கணும், உங்க பார்வைல கூட கண்ணியத்தை எதிர்பார்க்கிறேன்” என்று முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு கையை கட்டியபடி நின்று கொண்டு பேச..

"ஓ காட், இந்த பொன்ஸ் என்ன இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா இருக்கா" என்றவன் ...  “இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு பொன்ஸ்”.என்று எழ

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 04 - பிரேமா சுப்பையாAbiMahesh 2019-05-25 18:17
Nice Update Mam :clap: but last twist :Q:
Waiting for next epi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 04 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-05-24 20:36
Interesting update ma'am :clap: :clap: Amaru unakku vandha sondhanai enapa facepalm Kadhalanai ival amarai amara vaikka ahah aha ena oru rhyming :D appo indha sonuppadi alwa-ku BIL no va, kanavu palikadha :sad: prema ma'am why amarai emathuringa steam ninga kudutha abaya sangu ullulayukkun ninaichene ;-) harshini and ponn's oda part was cute. look forward to read next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 04 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-05-24 18:51
:eek: idhu enna pudhu kundai thookki podareenga :Q: facepalm ethirpaaraa thiruppamaaga irukkum polirukku. (y) waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top