Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினி - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

ன்று சனிக்கிழமை மிக அழகாக விடிந்தது...

தன் கணவனை ரிசீவ் பண்ணி இருவரும் வீட்டிற்கு வந்து சேர அதிகாலை ஆகியிருந்ததால், அப்பொழுது உறங்க சென்றவள் நன்றாக அசந்து உறங்கி கொண்டிருந்தாள்பவித்ரா...

மணி 9 அளவில் அவள் அலைபேசி ஒலிக்க, அந்த சத்தத்தில் மெல்ல தன் இமைகளை பிரித்தாள்....

சுற்றிலும் பார்க்க, இன்னும் விடியாததை போல இருந்தது...

“ச்சே.. அதுக்குள்ள யார் எழுப்பறது என்று திட்டி கொண்டே எழுந்து செல்ல மனம் இல்லாமல் சோபாவில் படுத்து கொண்டே அந்த அதிகாலை சம்பவங்களை அசை போட்டாள்...

தன்  கணவன் தன்னை அணைத்ததும் அவளை காரில் இருந்து அள்ளி கொண்டு வந்ததும் நினைவில் வர, அவள் கன்னங்கள் சிவக்க, மீண்டும் அந்த நினைவுகளை ஒரு முறை ஓட்டி பார்த்து ரசித்து மகிழ்ந்தாள்....

அதற்கு இடையூறாக அவள் அலைபேசி மீண்டும் சிணுங்க, இந்த முறை வேற வழி இல்லாமல் எழுந்து சென்று அதை  எடுக்க, அவள் அம்மா பார்வதி தான் அழைத்திருந்தார்...

“என்னமா இந்நேரத்தில கால் பண்ணியிருக்க?? நிம்மதியா தூங்க விட மாட்டியா?? “ என்றாள் சிணுங்கியவாறு...

“என்னது??  இன்னும் தூங்கறியா?? மணி என்னாவதுனு பார்.. .இப்படி தூங்கினினா மாப்பிள்ளைய எப்படி கவனிச்சு ஆபிஷ்க்கு அனுப்புவியாம்??  “ என்று அவளுக்கு ஒரு குட்டி லெக்சர் அடித்தார்....

“சரி.. மாப்பிள்ளை வந்திட்டாரா?? அத கேட்கத்தான் போன் பண்ணினேன்... “ என்றார்...

“ஹ்ம்ம்ம்ம் வந்திட்டார் மா... “ என்றவள் அப்பொழுது தான் அவன் படுக்கையை பார்க்க, அவன் அங்கு இல்லை...

“எழுந்து ஜாக்கிங்க் போய்ட்டான் போல... சின்சியர் சிகாமணிதான்... “ என்று மனதுக்குள் திட்டியவள் பின் சிறிது நேரம் தன் அன்னையிடம் பேசி விட்டு அலைபேசியை வைத்தாள்..

பின் ஜன்னல் அருகில் சென்று திரை சீலையை விளக்க, காலை வெயில் சுளீரென்று அடித்தது....

அவள் அசந்து தூங்குவதை கண்டு அந்த திரை சீலைகள் நன்றாக மூடி விட்டிருந்தான் ஆதி... அதை  புரிந்து கொண்டதும்,

“திருடா... இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை... ஆனா பொண்டாட்டிகிட்ட தோற்கறது, பிடிவாதத்தை விட்டு கொஞ்சம் இறங்கி வர மட்டும் கசக்குது...

US ல இருந்தப்ப மட்டும் மணிக்கொரு தரம் போன் பண்ணி மிஷ் யூ பேபி னு கொஞ்சுனான்...இப்ப பார் கண்டுக்கவே இல்லை...திருடா...  “ என்று மனதுக்குள் செல்லமாக தன்  கணவனை திட்டி கொண்டே குளியல் அறைக்குள் சென்றாள்..

தன் கணவனுக்கு நிகராக தன் பிடிவாதத்தில்  இருந்து இறங்காமல் அவனிடம் தோற்க பிடிக்காமல் அவனை இழுத்தடிப்பது அவளும் தான் என்பதை அறியவில்லை...

அவன் அருகில் இல்லாதப்போ அவனுக்காக ஏங்கிய ,அவன் குரலையாவது கேட்க துடித்து, வெக்கத்தை, ஈகோவை விட்டு பல முறை அவளே அவனை அழைத்து  பேசியதும் அவனுக்காக ஏங்கி கண்ணீர் விட்டதும் மறந்துவிட, அவன் அருகில் இருந்தால் அவளுடைய ஈகோ  தலை தூக்கி விடுகிறது...

அதனால் தான் அவன் சொல்லிய அவள் தோற்றுவிட்டாள் என்பதை ஏற்று கொள்ள முடியாமல் அவனை தள்ளி நிறுத்தினாள்... இதை எல்லாம் உணரவில்லை பவித்ரா...

இதை  உணர்ந்திருந்தால் அடுத்து வரும் பெரும் வலி வேதனைகளை தவிர்த்திருக்கலாமோ???

தன் கணவனை நினைத்த படியே குளியல் அறையில் இருந்து ரெப்ரெஷ் ஆகி ஒரு  பாடலை முனுமுனுத்தபடியே வெளியில் வந்தாள்.... அப்பொழுது ஆதியின் அலைபேசி ஒலித்தது...

சார்ஜ் போட்ட நிலையில் அவனுடைய பெர்சனல் அலைபேசியை விட்டு சென்றிருந்தான்...

முதலில் அழைக்கும் பொழுது அவன் அலைபேசியை எப்படி எடுப்பது என்று யோசித்து எடுக்க வில்லை... மீண்டும் ஒலிக்க, தயங்கியவாறு சென்று அந்த அலைபேசியை சார்ஜரிலிருந்து விடுவித்து அதன் திரையை பார்க்க, அதில்

“ஷ்வீட்டி.. “என்ற பெயர் ஒளிர்ந்தது..

அதை கண்டதும் யார் இந்த ஷ்வீட்டி என்ற  யோசனையுடன் அதை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவள் பின் துணிந்து அந்த அழைப்பை ஏற்றாள் பவித்ரா...

அதை காதில் வைத்ததும் ஹலோ என்று சொல்லு முன்னே

“ஹாய்  ஆதி  டார்லிங்... குட் மார்னிங்.. “ என்று குழைந்தது ஒரு பெண் குரல்....

அந்த குரலை கேட்டதுமே ஏனோ  பவித்ராவுக்கு பிடிக்கவில்லை..

பவித்ரா ஏதோ  சொல்லும் முன்னே அந்த குரலுக்கு சொந்தக்காரி தொடர்ந்தாள்...

“சாரி டார்லிங் .. காலையிலயே தொந்தரவு  பண்ணிட்டனா??  என்ன பண்றது ப்ளைட்ல இருந்து இறங்கி இங்கு வந்தும் எனக்கு தூக்கமே வரலை..

உங்க  கூட ஷ்பென்ட் பண்ணின அந்த 3 நைட்ஷ்.... சான்சேஇல்ல.. இப்பவும் என்னை இம்சிக்குது...தூக்கமே வரலை....அதான் உங்க குரலை கேட்கணும் போல இருக்குனு கால் பண்ணேன்.. சாரி டார்லிங்...  “ என்று இன்னும் ஏதோ உளறிக் கொண்டிருந்தாள்..

அதை கேட்டு கடுப்பான பவித்ரா

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினிPadmini 2019-05-28 21:35
Thank you friends for your comments!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினிsaaru 2019-05-27 15:03
Super paddu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினிAdharvJo 2019-05-24 20:06
facepalm why Padmini ma'am andha kutti pavi eppome form la irupanga avangalaiyum kulapi vittutingale ji steam Sad of her SHA :sad: cha that stinky sweety 3:) 3:)
But adhikku idhu oru nala lesson than once bad boy-ya form agitta piragu good boy analum indha mathiri heart breaking situations ellam face pana vendi varum :no: didn't expect this from pavi. Indhula pavi adhi oda past broad cast pana poitangale :Q: hope she doesn't reveal everything abt him and damage his image :P nice update ma'am :clap: :clap: waiting to see how pavi fix the situation. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினிVarshitha 2019-05-24 16:07
nice epi padimini :clap: ... eagarly waiting for next epi :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினிmadhumathi9 2019-05-24 12:31
:clap: nice epi.but pavi ippadi pannuvatharkku yaar karanam than kanavan munnaal appadi irunththaalthaane ippadi solla thonugirathu. Pavi mel thappillai endru thonuthu. adutha epiyaipadikkamiga aavalaaga kaathukondu irukkirom. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினிதீபக் 2019-05-24 12:05
Super episode sis :clap: . Atlast know only the flash back coming (y) . It is interesting to read. Eagerly waiting for next update :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top