Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 14 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 14 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

சிம்ஹன்… நீங்க சொன்னதை நான் புரிஞ்சுகிட்டேன்… க்ராவிடியும் ஏஜிங் ஃபேக்டரா. “ ரக்சனாவை தடுத்த சிம்ஹன்,

“இரும்மா… முதல்ல நான் சொல்ற ஹாப்பி நியூஸை கேளு” சொன்னான்..

“ஹாப்பி நியுஸா…? என்னாது?” ப்ரமோஷன்.. சம்பள உயர்வு… கல்…யாணம்?

“ம்… நோவா காலக்டிக் நிறுவனத்திலிருந்து எனக்கு ஒரு ஆஃபர் வந்திருக்கு”

“அது விண்வெளிக்கு வீர்ர்களை அனுப்பும் நிறுவனம்தானே…”

“ஆமாம்… ஒருங்கிணைந்த விண்வெளி மையத்தின் அனுமதி பெற்றது. அவர்களுடைய அடுத்த விண்வெளி பயணத்திற்கான குழுவில் என்னையும் சேர்த்துள்ளனர்.”

“எப்படி சிம்ஹன்?” அவள் அதிர்ச்சியாக கேட்டாள்.

“ம்… அவர்களுடைய குழுவில் ஒரு இளம் ஆராய்ச்சியாளர் தேவைபட்டது. என்னுடைய செமினாரை பார்த்து விட்டு செலக்ட் செய்தார்களாம். அப்புறம் நேர்முக தேர்விற்கு வரச்சொல்லி என்னை அழைத்திருந்தார்கள்”

“என்னிடம் சொல்லவே இல்லையே”

“அப்போது நீ உன்னுடைய புராஜெக்ட் விசயமாக பிஸியாக இருந்தாய். மேலும், என்னை தேர்வு செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை”

“ஓ… எப்படி தேர்வு செய்தார்கள்?”

“உடல் தகுதி தேர்வுதான். நான் ஃபிட்டாக இருந்ததால் ஓகே என்று சொல்லி விட்டார்கள். அப்புறம்… விண்வெளி இயற்பியல் துறை சார்ந்தவன், ஸ்பேஸ் வாக்.. ஆண்டி க்ராவிடி சர்வைவல் ஆகியவற்றை முடித்திருக்கிறேன் அல்லவா?”

“சரி எப்போது பயணமாம்?”

“அது ஒரு பத்து நாட்கள்… அடிப்படை வொர்க்-அவுட் ட்ரெயின்ங் முடித்தபின் பயணத்திற்கு தயாராகி விடுவேன்”

“மத்தவங்க…”

“அவங்க ஏற்கனவே அஸ்ட்ரானட்ஸ்தான்… அனுபவசாலிகள்.. ரெடியாதான் இருக்காங்க”

“சிம்ஹன்…  நீங்க சொல்றத பார்த்தால்.. நீங்கதான் சின்ன வயசுபோல…”

“ஆமாம்… அத்தோட ஸ்பேஸ் ட்ராவல் செய்த அனுபவம் இல்லாதவனும்கூட..”

“அப்படி ஏன் செலக்ட் செய்தார்கள்?”

“அதுவும் ஒரு சோதனை முயற்சிதான்.  புரொஃபஷனல் விண்வெளி வீர்ராக இல்லாத ஒருவரை திடீரென்று ஸ்பேஸ் ட்ராவல் செய்ய வைத்தால் என்னவாகும் என்று பரிசோதிக்கத்தான் இந்த முயற்சி”

“சிம்ஹன் உங்களுக்கு ஒன்றும் ஆகாதே”

“ நத்திங் டு வொரி…  நான் மனதளவில் இதற்கு தயாராகவே இருக்கிறேன். என்னுடைய பல நாட்கள் கனவும் இதுதானே”

“எத்தனை நாட்கள் இந்த பயணத் திட்டம்?”

“நம்ம்முடைய விண்வெளி ஸ்டேஷனுக்கு சென்று… அங்கு மூன்று மாதங்கள் தங்கியிருந்து திரும்ப வேண்டும். அவ்வளவுதான்”

“மூன்று மாதங்களா?” ரக்சனா திகைத்தாள். அவள் மனம் கவலைபட ஆரம்பித்தது. அத்தனை  நாட்கள் சிம்ஹனை பிரிந்து எப்படி இருப்பாள்?

தினமும் காலையில் அவன் வீட்டிற்கு வந்து மல்லிகை பறித்து வைக்கும் சாக்கில் அவனை பார்த்தவுடன் தொடங்கும் அவளுடைய நாள்…  இரவு அவனுடைய பரிசோதனை கூடத்தில் டெலஸ்கோப்பில் வானத்தை பார்த்து கேள்விகள் கேட்டு ‘குட்நைட்’ சொன்னபின்தான் முடியும். ஓரிரு நாட்கள் இந்த தினசரி அஜண்டா மிஸ் ஆனாலும் அவள் தவித்து போவாள்… இப்போது மூன்று மாதங்கள் என்று சொல்கிறானே..? அவள் கவலையுடன் அவனை பார்த்தாள்.

அவனோ ரொம்பவும் உற்சாகமாக தன்னுடைய பரிசோதனைகூட கருவிகளை துடைத்து பார்ஸல் செய்து கொண்டிருந்தான். மெல்லிய ஹம்மிங் வேறு உதடு இடுக்கிலிருந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது.

“சிம்ஹன், ரொம்ப ஹாப்பியா இருக்கீங்கபோல..” அவள் தளர்ந்த குரலில் கேட்டாள்.

“பின்னே..? இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன் ரக்சு! நீயே சொல்லு என்னுடைய வருமானத்திற்கு ஸ்பேஸ் ட்ராவல் செய்ய முடியுமா. அதற்கான படிப்பிற்கு செலவு செய்யும் அளவிற்கு பணம் இல்லாததால்தானே கல்லூரி விரிவுரையாளர் ஆனேன்.”

“அது சரிதான் சிம்ஹன்… இப்படி ஒரு சாண்ஸ் கிடைக்காது… ஆனால் என்னை பிரிந்து செல்வது பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள்…”

“ஓ… கமான்… ஆல் இன் த கேம். அதை நினைத்தால் ஸ்பேஸ் ட்ராவல் செய்ய முடியாது அல்லவா? “

“ஆனால் சிம்ஹன் எனக்கு இப்படி ஒரு சான்ஸ் வந்திருந்தால் நான் சம்மதித்திருக்க மாட்டேன். என்னால் உங்களை பிரிந்து மூன்று மாதங்கள் இருக்க முடியாது”

“அச்சோ… எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!. வாழ்க்கையில் லட்சியங்கள் முக்கியம் ரச்சு… அப்படி எல்லாம் கிவ்-அப் செய்ய கூடாது. கனவுகளை சாதிக்கணும்.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 14 - சாகம்பரி குமார்madhumathi9 2019-06-04 21:12
:clap: nice epi.waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 14 - சாகம்பரி குமார்pradhi 2019-06-04 20:42
rachu voda kathal than evlo aalamanathu super epdisode :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 14 - சாகம்பரி குமார்Adharv 2019-06-04 19:38
Goosebumps varudhu Ms sagampari :yes: I really pity rachu and her unconditional love towards SIM is super Pa :hatsoff: and chaithanya solluvadhu ellam.unmaya :Q: appadi irukkum patchathil his care and concern towards rachi is also simply superb 👌👌 mission sodhapidicha :Q: sim Ena anaru?? Anyway his passion is really :cool: but rachu va hurt panuradhu pidiakali steam Seema screen play ma'am :clap: :clap: :hatsoff: look forward to read next epi. Thank
you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top