Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 04 - சசிரேகா

En ithayam kavarntha thamaraiye

ட்டன் சத்திரம்

படுக்கை முழுவதும் மலர்களும் அறை முழுவதும் ஊதிவத்தியின் மணமும் வீரபாண்டியனை ஸ்தம்பிக்க வைத்தது.

என்னை வைச்சி காமெடி கீமெடி பண்றாங்களா என்ன, நானே இங்க நிக்க முடியாம நடக்க முடியாம கஷ்டப்படறேன் இதுல இப்ப முதலிரவு ரொம்ப முக்கியமா எங்க அவருஎன கோபமாக சண்முகத்தை பார்க்க எண்ணி கதவை திறக்க மறுபக்கம் தாமரை அலங்காரத்துடன் கையில் பால் செம்புடன் தலை குனிந்து நின்றிருந்தாள்.

ஒரு நொடி அவளைப் பார்த்ததும் ஸ்தம்பித்தான். மறுநொடி அவளிடம்

என்னங்க இது கோலம்என வெறுப்பாக கேட்கவே அவளுக்கு பக்கென்றது. தலை நிமிர்ந்து ஏறிட்டு அவனை கேள்வி முகத்துடன் பார்க்க அவனோ

நான் சொன்னதை தப்பா நினைக்காதீங்க, நான் இருக்கற நிலைமையில இது எல்லாம் தேவைதானாஎன கேட்க அவளோ வெட்கத்தில் சிரித்தபடியே தலை குனியவே அவன் அதைக்கண்டு அதிர்ச்சியில் அலறினான்

மாமா மாமாஎன அவன் அலற தாமரையே பயந்தாள்

என்னாச்சிங்கஎன கேட்க

நீங்க சும்மாயிருங்க, உங்களுக்கு எதுவும் தெரியலை எங்க உங்கப்பாஎன கேட்க அதற்குள் சண்முகமே அங்கு வந்து நின்றார்

என்னப்பா என்னாச்சி ஏன் கத்தற

கத்தறதா என்ன இதெல்லாம்என தாமரையை பார்த்துக் கொண்டே சண்முகத்திடம் கேட்க அவரோ

இதெல்லாம் சாங்கியம்பா

சாங்கியமா என் நிலைமையை புரிஞ்சிக்காம ஏன் இப்படி ஏற்பாடு பண்ணீங்க

எனக்கு தெரியும்பா நீ எதையும் செய்ய வேணாம் நல்லா தூங்கு அவளும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டா அவளும் தூங்கிடுவா

தூங்கறதுக்கு எதுக்கு ரூம் முழுக்க அலங்காரம் செஞ்சிருக்கீங்க

அப்படியில்லை பாண்டியா உன் நிலைமை எனக்கு தெரியும் ஆனா, வெளி உலகத்துக்கு தெரியாதுல்ல மாப்பிள்ளை எதுவும் செய்யாம இருந்தா உங்களை தப்பா பேசுவாங்க அதனால, சும்மா இது ஒரு செட்டப்தான், வெறும் கண்துடைப்புக்கு,

மத்தவங்களுக்காக உங்களை யாரும் கட்டாயப்படுத்தலைப்பா புரிஞ்சிக்க, கல்யாணம் ஆன முதல் நாளே உங்க ரெண்டு பேரையும் பத்தி யாரும் தப்பு சொல்லக்கூடாதுல்ல அதான் கொஞ்சம் பொறுத்துக்க பாண்டியா” என கெஞ்ச அவனுக்கும் அது சரியென பட மெல்ல வழியை விட்டான். தாமரையும் அறைக்குள் சென்றதும் கதவை விசாலமாக திறந்து வைக்க சண்முகமோ

கதவை சாத்திக்கப்பா

உள்ளதான் எதுவும் நடக்காதே அப்புறம் என்ன மாமாஎன்றான் கடுப்பாக

எதுவும் நடக்கலைன்னாலும் பரவாயில்லை கதவை சாத்திக்கப்பாஎன அவசரமாக சொல்லி அவரே கதவை சாத்திவிட்டு செல்ல வேறு வழியில்லாமல்  தாப்பா போட்டு திரும்பினான் வீரா. தாமரையோ நின்றுக் கொண்டு தலைகுனிந்தபடி இருப்பதைக்கண்டு நொந்தான்.

இவள் வேற பெரிசா கற்பனை பண்ணிக்கிட்டு வந்திருப்பாளோ, இப்ப முடியாதுன்னு சொன்னா நம்மளை கேவலமா நினைப்பாளோ எதுக்கும் ட்ரை பண்ணி பார்க்கலாமாஎன நினைத்து 2 அடி அவளை நோக்கி எடுத்து வைத்தான். அதற்குள்ளே அவனுக்கு வலி உண்டாக

ஆஆஆஎன முனகினான். அந்த சத்தம் கேட்டு அவனைப் பார்த்த தாமரையோ

என்னங்க என்னாச்சிங்கஎன கேட்க அவனோ

ஒண்ணுமில்லைங்கஎன சொல்லியபடியே மனதுக்குள்

இதுக்கு மேல என்னத்த ட்ரை பண்றது, பேசாம தோல்வியை ஒத்துக்கிட்டு தரையில படுத்து தூங்கிட வேண்டியதுதான்என நினைத்தவன் உடனே கட்டில் மீதிருந்த போர்வையை எடுத்து தரையில் போட தாமரையோ

என்ன செய்றீங்கஎன கேட்டாள். அவனோ

நான் கீழே தரையில படுத்துக்கிறேன்ங்க நீங்க கட்டில்ல படுத்துக்குங்க

தரையிலயா வேணாம்ங்க இன்னும் வலி அதிகமாகும்

அதுக்கில்லைங்க கட்டில் வேற சின்னதா இருக்கே, எப்படி ரெண்டு பேருக்கும் பத்தும் அதான்

ஒண்ணும் பிரச்சனையில்லைங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் வாங்க

வேணாம்ங்க

ஏங்க எல்லா விசயத்துக்கும் அடம்பிடிக்கறீங்க

அதுக்கில்லைங்க உங்ககிட்ட சொல்ல என்ன இருக்கு, நீங்களும் ஏகப்பட்ட ஆசையில இப்ப வந்திருப்பீங்க, என்னால 2 அடி எடுத்து வைச்சா கூட வலி உயிர் போகுது, நான் உங்களோட பெட்ல படுத்தாலும் என்னால எதுவும் செய்ய முடியாதுங்க, அதுக்கு நான் கீழேயே படுத்துக்கறேன்என அமைதியாகச் சொல்ல அதைக்கேட்டு அவள் வெறுப்பாள் என நினைத்தான் அவளோ அமைதியாக சிரித்தாள். அவளது சிரிப்பைக் கண்டு குழம்பியவன்

என்னங்க சிரிக்கறீங்க

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 04 - சசிரேகாmadhumathi9 2019-06-06 18:56
:clap: nice epi.ammaavai eppadi samaalikka poraangannu paarppom.kathai interesting aaga poguthu.veeraavoda comedy aaga irukku.manaiviyai koottikondu pogavillai endraal koviththu kolla maattaargala?waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 04 - சசிரேகாதீபக் 2019-06-06 17:53
Sis today's episode is a entertaining one :clap: . Thamarai character is super (y) . Eagerly waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top