Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 6 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா

Unnaiye thodarven naane

மாதவி சேலன்ஜ் செய்து சென்றதும் சுந்தரி சரவணனிடம் பேசினாள்.

அண்ணா வேணாம்னா இது ரிஸ்க்என கவலையாகச் சொல்ல அதற்கு சரவணன்

அதை உன் பிரண்டுக்கிட்ட சொல்லுஎன சொல்ல சொப்னாவும் சுந்தரியும் மாதவியை சரிகட்ட சென்றார்கள்.

போட்டிகள் முடிந்த நிலையில் அனைவரும் பஸ் ஏறி காட்டேஜ் நோக்கிச் சென்றுவிட சரவணன் மாசியை தேடினான்.

சாவி அவன்ட்டதான் இருக்கு, வண்டி இங்க இருக்கு, இவன் எங்க போய் ஒழிஞ்சான். இவ்ளோ நேரம் என்ன செய்றான்என யோசித்துக் கொண்டிருந்த சமயம் ரமாவின் நினைப்பு வரவே

ஒரு வேளை அந்த பொண்ணுக்கூட இருக்கானோ சீ சீ அப்படியிருக்காது. இந்த ஊர் பொண்ணு எப்படி இவனை விரும்புவாஎன நினைத்துக் கொண்டே இருந்தான்.

நேரம் ஓடியது. மாசியும் வந்தான். மிகவும் களைத்துப்போய் இருந்தான்.

என்னடா மாசி ரொம்ப டயர்டா இருக்க என்னாச்சி

ஒண்ணுமில்லைண்ணா வா வண்டியில ஏறு, நீ ஓட்டு என்னால ஓட்ட முடியாதுஎன சொல்ல சந்தேகத்துடனே அவனை பார்த்துவிட்டு மெதுவாக வண்டியில் ஏறி ஓட்டலானான்.

”மாசி என்னாச்சி எங்க போன”

ஒண்ணுமில்லைண்ணாஎன அவன் கண்கள் மூடி சீட்டில் சாய்ந்துக் கொண்டான்.

என்னடா ஆச்சி, சமையல் போட்டியில பாதியில போனவன், நீ சாப்பிடவும் வரலை கம்புச் சண்டைக்கும் வரலை எங்கடா போன

ஒண்ணுமில்லைண்ணாஎன சொன்னதையேச் சொல்ல சரவணனுக்கு கோபமே வந்தது

டேய் அடிவாங்காத உண்மையை சொல்லு, எங்க போன நீ, சாப்பிட்டியா இல்லை

புல் மீல்ணா திருப்தியா சாப்பிட்டேன்என அவன் ஒருமாதிரியாக சொல்லிச் சிரிக்கவும் அவனது சந்தேகம் ஊர்ஜிதமானது

டேய் ரமா கூட இருந்தியாஎன சொல்ல சிரித்தான் மாசி

டேய் பாவி, இது அந்த பொண்ணு ஊருடா விசயம் தெரிஞ்சா என்னாகும்

அதைப்பத்தி அவளே கவலைப்படலை, நான் ஏன் கவலைப்படனும். நாளைக்கு நான் கிளம்பிடுவேன் அதோடு முடிஞ்சிடுச்சி

சரிடா இதுக்கா இவ்ளோ நேரம்

இனிமே எப்ப ஊட்டிக்கு வரபோறோம்னு இருந்தது, நல்லா அவளோட ஊட்டி முழுக்க சுத்திப் பார்த்துட்டு அப்படியே அவள் செஞ்சி தந்த சாப்பாட்டையும் சாப்பிட்டு வந்தேன். எதுக்கும்மா என்னை கூட்டிட்டு உன் வீட்டுக்கு வந்தேன்னு கேட்டேன், உங்களாலதான் நான் போட்டியில ஜெயிச்சேன் அதான் ஒரு வேளை சாப்பாடு போட்டு நன்றி செலுத்தலாம்னு நினைச்சேன்னு சொன்னா, நானும் சரின்னு சாப்பிட உட்கார்ந்தேன், நல்லாவே சமைச்சிருந்தாண்ணா ஏழை பொண்ணு கிடையாது, பணக்காரியும் கிடையாது, மிடில் க்ளாஸ் வீடுதான் சின்னதா அழகா வீடு இருந்திச்சி. அப்புறம் என்ன சாப்பிட்டு முடிச்சதும் நான் கிளம்பறேன்னு சொன்னேன் அவளோ ஊட்டியை சுத்தி காட்டறேன்னு சொன்னாளா நானும் சரின்னு சொல்லி அவளோட சேர்ந்து ஊட்டி முழுக்க சுத்தி வந்துட்டேன். எப்படியும் நீங்க மாதவியோடதான் இருக்க நினைப்பீங்க அந்த போட்டி நடக்கற இடத்தில எனக்கென்ன வேலை வந்ததுக்கு ஊட்டியையாவது சுத்தி பார்க்கலாம்னு அவள் கூப்பிட்டதும் போய் வந்தேன். அவளும் பல இடங்களை சுத்தி காட்டினா நானும் என் போன்ல போட்டோ பிடிச்சேன் பாருங்கண்ணாஎன சொல்லி தனது செல்போனில் இருந்த போட்டோக்களைக்காட்ட சரவணனும் பார்த்து நொந்தான்

நான் மாதவியோட இந்த இடங்களுக்கு போனா நல்லாயிருக்கும் ஆனா சம்பந்தமேயில்லாம நீ போயிருக்க கொடுமைஎன சொல்ல மாசியும் விழுந்து விழுந்து சிரித்தான்.

வேணாம்டா வேணாம், நானே கை கெட்டிய தூரத்தில பொண்டாட்டி இருந்தும் அவளோட பேச முடியாம பழக முடியாம முக்கியமா உண்மையை சொல்ல முடியாம தவிச்சிப் போயிருக்கேன் நீ என்னடான்னா என் கஷ்டத்தை புரிஞ்சி எனக்கு ஆறுதலா இருக்காம ஊரை சுத்திப் பார்த்துட்டா வர்ற சிரிக்காம வாடாஎன திட்டிக் கொண்டே காட்டேஜை வந்தடைந்தான்.

எதிரே வந்த மாதவியை கண்ட சரவணனோ நீளமான பெருமூச்சு ஒன்றை வீசிவிட்டு ஏக்கமான பார்வையுடன் நின்றிருக்க மாதவியோ சரவணனை முறைக்க மறுபடியும் இவர்களுக்குள் சண்டை வந்துவிடக்கூடாதென நினைத்த மாசியோ அவசரமாக சரவணனை இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்று கதவை சாத்திவிட்டான்.

இருவரின் செயல்களை கண்டு சந்தேகித்த மாதவி, தன் அறைக்குச் சென்று சரவணனுக்கு போன் செய்தாள். கடைசி ரிங்கில் போன் எடுத்தான் சரவணன்

ஹாய் பொண்டாட்டிஎன அவன் அழைக்க திக்கென்றது மாதவிக்கு

நான் மாதவி பேசறேன்

சொல்லுடி பொண்டாட்டிஎன ஆசையாக பேச அவளுக்கு கூச்சமே வந்தது

நான் பொண்டாட்டியில்லை மாதவி

தெரியும்டி நீதான் எனக்கு பொண்டாட்டி, இதான் உண்மை, இதான் சத்தியம், அப்புறம் என்னடி

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகாsasi 2019-06-18 09:08
நன்றி ஆதர்வ் சாரி ரொம்ப நீளமாயிடுச்சில்ல குறைச்சிடறேன் அப்புறம் 1000 தடவை இம்போசிஷனா வேணாமே பாவம் அதுக்கு பதிலா சரவணனுக்கு மாதவியோட கல்யாணம் செஞ்சி வைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் அடுதத வாரத்தை தவறாம படிச்சிப் பார்த்து கமெண்ட் கொடுங்க நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகாAdharv 2019-06-17 21:44
:eek: paaah evalo nilamana argument :o
ketta pazhakathai kadhalikka thiruthi kitta nala ullame!! periya deal thaan facepalm perumai pithals. Avanga avanga kadhal avanga avangalukku persuthan :yes:
nice epi ma'am :clap: :clap: Mr Sarvanan perumalukku oru imposition kuduthal nala irukkumnu thonudhu sasi ma'am :D Madhavai innum avaroda wife illanu oru 1000 vaati elutha vaiunga :P Madhavi adutha epi la eppadi react aga poranganu parka waiting.....oru cycle comp win panavachidhakku treat ah....Besh Besh nadathunga nadathung. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகாmadhumathi9 2019-06-17 14:14
:clap: nice epi sasi.big :thnkx: 4 big epi.interesting aaga poguthu kathai.adutha epiyai padikka miga aarvamaaga kaaththu kondu irukkirom. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகாsasi 2019-06-17 19:21
Quoting madhumathi9:
:clap: nice epi sasi.big :thnkx: 4 big epi.interesting aaga poguthu kathai.adutha epiyai padikka miga aarvamaaga kaaththu kondu irukkirom. :thnkx: & :GL:

நன்றி மதுமதி :dance:
Reply | Reply with quote | Quote
+1 # UtnSathyasss 2019-06-17 10:51
Nice story mam...startingla suprah irunthuchu...bt ipo koncham lengthalight ah bore atikaramari iruku...sry mam dont mistke me...short and sweeta explin panunga mam...
Reply | Reply with quote | Quote
# RE: Utnsasi 2019-06-17 11:36
Quoting Sathyasss:
Nice story mam...startingla suprah irunthuchu...bt ipo koncham lengthalight ah bore atikaramari iruku...sry mam dont mistke me...short and sweeta explin panunga mam...

நன்றி sathyasss விளக்கம் அளிக்கிறேன் சாரி சொல்ல வேண்டாம் இக்கதை அடுத்த வாரத்தில் இருந்து சுறுசுறுப்பாக இருக்கும் காரணம் அடுத்த வாரத்தில் இருந்து உண்மை தெரிந்துக் கொண்ட மாதவியின் செயலை பற்றிதான் இருக்கும் விறுவிறுப்பு குறையால் கதை ஓடும் இன்னும் 5 அல்லது 6 எபிகளில் கதை முடிந்துவிடும் அதற்குள் போர் அடிக்காமல் கதையை ஸ்பீடாக நகர்த்துகிறேன் நிச்சயமாக தங்களுக்கு போர் அடிக்காது உறுதியாக சொல்கிறேன் எனது பதில் தங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன் தொடர்ந்து படியுங்கள் கமெண்ட் தாருங்கள் நெகட்டிவாக கூட கமெண்ட் தாருங்கள் கதையை திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # UtnSathyasss 2019-06-17 22:37
Supr mam....
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகாதீபக் 2019-06-17 08:21
Sis episode is super :clap: . First of all :thnkx: for the long update the topic you choose for debate is super and :hatsoff: . The info told in debate by both side is awesome (y) . Sudden change in behaviour of Madhavi what is gone to happen in the fight :Q: whether conflict is going to happen or not? Waiting to know in the next episode :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகாsasi 2019-06-17 11:32
Quoting தீபக்:
Sis episode is super :clap: . First of all :thnkx: for the long update the topic you choose for debate is super and :hatsoff: . The info told in debate by both side is awesome (y) . Sudden change in behaviour of Madhavi what is gone to happen in the fight :Q: whether conflict is going to happen or not? Waiting to know in the next episode :GL:

நன்றி தீபக் கண்டிப்பாக அடுத்த வாரம் எபியில் சரவணனுக்கும் மாதவிக்கும் கம்பு சண்டை போட்டி நடக்கும் மறக்காமல் படித்துப்பாருங்கள் தங்களின் கமெண்ட் அருமை படித்த உடனே உற்சாகமாகி விட்டேன் நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top