அக்கா.... என்று நித்யா அழைத்த அடுத்த நொடி இப்பொழுது ஏதும் பேச வேண்டாம் என்று கீதா கூறிவிட்டாள்.
இந்த மாத்திரையை போட்டுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.....
எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் என்று கண்டிப்புடன் கூறினாள் .....
நித்யாவிற்கோ, கீதாவை நிமிர்ந்து பார்க்க கூட வெட்கமாக இருந்தது...
நான் எப்படி இவ்ளோவு அசிங்கமாக நடந்து கொண்டேன்.... அதும், பார்த்து இரண்டு நாள் கூட ஆகாத அந்த க்ரிஷ் யோடு....
கீதா அக்காவும் ரிஷியும் என்னை பற்றி என்ன நினைத்து இருப்பார்கள்?????? நாங்கள் இருந்த கோலத்தை அந்த சிவகாமியும் கோபியும் பார்த்து இருந்தால் இந்நேரம் என்னை என்ன செய்து இருப்பார்கள் என்று நினைத்து கூட அவளால் பார்க்க முடிய வில்லை.
கையில் இருந்த மாத்திரையை போடாமல் நித்யா யோசித்து கொண்டு இருப்பதை பார்த்த கீதா அவள் அருகில் சென்று மாத்திரையை போட வைத்தாள்.
நித்யா மிகவும் பயந்து போய் இருப்பது அவளுக்கு புரிந்தது .
ஆதரவாக, அவளது தோலை தொட்டால் .... அடுத்த நொடி, நித்யா கீதாவின் இடுப்பை கட்டி கொண்டு அக்கா என்னை மன்னிச்சுடுங்க என்று அழ ஆரம்பித்து விட்டாள்.
******************************
மொட்டை மாடியில் ரிஷியோ க்ரிஷ் யை முறைத்து கொண்டு இருந்தான்.
க்ரீஷ்யும் அண்ணனின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு நின்றான்.
உன்னை தாண்டா கேட்குறேன் லவ் பண்றியா???????
அமாம்... என்பது போல க்ரிஷ் தலை ஆட்டினான்.
எப்ப இருந்து சார் லவ் பண்றீங்க.... என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லனுனு தோணலை இல்ல .....
அப்படி இல்லன்னா..... நானேயே இப்பதான் என் காதலை உணர்ந்தேன் .... உண்மையை சொல்லனுனு இன்னும் நித்யா கிட்ட கூட என் லவ் சொல்லல.... என்று அப்பாவியாக கூறினான்.
க்ரிஷ் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரிஷி..... டேய்..... லவ் கூட சொல்லாம லாடா அவளை நீ கிஸ் பண்ண???? அதும் மொட்டை மாடியில?????
ஆம் போல க்ரிஷ்யும் தலையாட்டினான் ....
மூணு மாசம் நானும் கீதாவும் ஒண்ணா ஒரேயே வீட்ல இருந்தப்ப கூட நான் அவளை கிஸ் பண்ணாது இல்லைடா ..... என்று ரிஷி ஆதங்கப்பட்டான்.
போ அண்ணா .... நீ ஸ்லொவ் யா இருந்த நான் என்ன பண்றது சொல்லு.... என்று க்ரிஷ் திருப்பி கேட்டான்.
என்னது... நான் ஸ்லொவ்யா இருக்கேன்யா????? இது சரிப்பட்டு வராது..... இப்படியே போனாயா.... என் கல்யாணத்துக்கு முன்னாடி நித்யா மாசமாகிடுவா போல.... முதலா நீ இங்க இருந்து கிளம்புடா..... என்று பொய்யாக அதட்டினான்.
ரிஷி... தன்னை கிளம்ப சொன்னதும் அதிர்ச்சி அடைந்த க்ரிஷ்.....
அண்ணா.... ப்ளீஸ் ..... நான் போறதா இருந்த நித்யாவை கல்யாணம் பண்ணி என்கூட கூட்டிட்டு தான் போவேன் ..
டேய் .... அதுக்கு முதல்லா .... நாம நித்யாகிட்ட பேசணும். அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கனும். அப்புறம், அவங்க பேமிலி கிட்ட பேசணும். நிறைய வேலை இருக்கு.
உன் அவசரத்துக்கு எல்லாம் என்னால செய்ய முடியாது.கொஞ்சமாவது பொறுமையா இரு டா.....
நீ உன் வாயும் கையும் வச்சுட்டு சும்மா இல்லனா நான் தான் கீதாகிட்ட திட்டு வாங்கணும் .
பார்த்த இல்ல.... நம்மள எப்படி முறைச்சுட்டு நித்யாவை கிழா கூட்டிட்டு போனான்னு????
ஆமா அண்ணா.... கீதா அண்ணி ரொம்ப தான் பண்றாங்க??? என் மேல விருப்பம் இல்லனா நான் கிஸ் பண்ணும்போது நித்யா எப்படி அமைதியா இருந்து இருப்ப சொல்லுங்க... ஏதோ, என்னை ரவுடி மாதிரியே பாக்குறாங்க ???? இப்ப நீயும் அவங்க கூட சேர்ந்துட்டு என்னை போக சொல்ற இல்ல... என்று வருத்தப்பட்டான்.
தம்பியின் வருத்தம் கண்டு ரிஷியுக்கும் வருத்தமானது.
அப்படி இல்ல டா. புரிஞ்சுக்கோ.... நீயும் நித்யாவும் கிஸ் பண்ணிட்டு இருந்ததை கீதா நேர்ல பார்த்து இருக்க அதான் கோபப்படுறா.....
ஒருவேளை, கீதாவோட இடத்துல அத்தை இருந்து இருந்தாலும் இதை தான் செஞ்சு இருப்பாங்க....
அண்ணா... எனக்கு புரியுது. ஆனா, நான் நித்யாவை கட்டாய படுத்தலை அவளுக்கும் என்னை பிடிச்சு இருக்குன்னா.... அவ கண்களில் நான் காதலை பார்த்தேன். அவளை நான் கல்யாணம் பண்ணி என்கூட வச்சுக்கறது தான் அவளுக்கு பாதுகாப்பு...
போதும் நிறுத்துங்க... என்ற கீதாவின் குரலலில் க்ரிஷ் பேச்சை நிறுத்தினான்.
இப்பத்தான் நித்யாகிட்ட பேசுனேன்...அவ ஏதோ ஒரு தடுமாற்றத்தலா இப்படி நடந்துடுச்சு என்னை மன்னிச்சுடுங்க அக்கான்னு என்கிட்ட அழுகுறா???? இது உங்களுக்கு உண்மையான
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!