Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

முத்துவோ லன்ச் ப்ரேக் எப்போது வரும் என காத்திருந்தான். அவனது பார்வை வைஷ்ணவியின் மீதே இருந்தது. தலை குனிந்தபடியே அவள் இருப்பதைக் கண்டு சந்தேகித்தான்

என்னாச்சி இவளுக்கு, ஒருவேளை பயந்திருப்பாளோ மெச்சூரிட்டியே இல்லாத குழந்தைக்கு எப்படிதான் இங்க சீட் கிடைச்சதோ, இப்ப நாமதான் இவளை சமாதானம் செய்யனும் போல இருக்கே எப்படா பெல் அடிப்பீங்கஎன மனதுள் காலேஜை திட்டிக் கொண்டிருந்தான்.

அப்போதும் இப்படித்தான் பெல் அடித்த உடன் முதல் ஆளாக வெளியே ஓடுவது முத்துதான், நேராக கான்டீனிற்கு சென்று சாப்பாடு வாங்கி பொறுமையாக சாப்பிட்டு மற்றவர்களுடன் கதை அளந்துக் கொண்டு நேரத்தை ஓட்டி பெல் அடித்த 5 நிமிடம் கழித்தே வகுப்புக்குள் வருவான்.

 வந்த உடன் உறக்கம் தானாக வரவே பாதி உறக்கத்தில் பாடத்தை கேட்டுக் கொண்டிருப்பான், மறுபடியும் மாலையில் பெல் எப்போது அடிக்கும் என பார்த்துக் கொண்டே இருப்பான், பெல் அடித்ததும் ஒரே தாவலாக அவசரமாக ஓடி காலேஜ் மைதானத்தில் கபடியாட காத்திருப்பான்,

இருள் வரும் வரை கபடியாட்டம் அது முடிந்த உடன் நண்பர்களுடன் அரட்டை, இரவு வீட்டில் இருந்து 10 ஃபோன் வந்த பிறகுதான் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பைக்கில் ஏறி வீடு வந்து சேர்வான், சாப்பிட்டு முடித்து இரவு 12 மணி வரை டிவியின் முன் அமர்ந்து பொழுது ஓட்டிவிட்டு தானாக தூக்கம் வந்த உடன் டிவியை ஆப் செய்ய கூட மறந்து உறங்கிவிடுவான் ஆனால் படிப்பில் சூரன்.

ஒரு முறை படித்தாலும் ஞாபகம் வைத்துக் கொள்வான் முத்து. அதனாலயே அவன் படிப்பில் முதலிடமாக வந்தான், படிப்பும் விளையாட்டும் அவனுக்கு மிகவும் பிடித்தவை அடுத்து அவனது நண்பர்கள் எந்நேரமும் அவர்களுடனே இருக்கச் சொன்னால் சரி என்பான் முத்து

3ஆம் ஆண்டு படிக்கும் போதே 4ஆம் ஆண்டுக்கான படிப்பை படித்து வைத்துவிட்டான். கடைசி வருடமாவது ஜாலியாக பொழுது ஓட்ட எண்ணி காலேஜ் விடுமுறையில் படித்து முடித்திருந்தான். அது மூன்றரை ஆண்டுகளாகியும் பசுமையாக அவன் மனதில் இருந்தது இன்று சுகன்யா பாடம் எடுக்கவும் அவன் ஏற்கனவே படித்து மனப்பாடம் செய்திருந்தவை, அது தானாகவே அவன் மனதில் மீண்டும் ஞாபகத்துக்கு வரவே அவனால் துணிந்து மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடிந்தது.

இப்போதைக்கு அவனுக்கு 2 கவலைகள் மட்டுமே உள்ளது, ஒன்று வைஷூ அவளது நட்பு என்றும் இருக்க வேண்டும், அவளுக்கு மற்றவர்களால் எதுவும் ஆக கூடாது, 2வதும் வைஷூவுக்கு தன்னால் எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது என நினைத்தான் முத்து. படிப்பு, நண்பர்கள் இரண்டிற்கும் மத்தியில் வைஷூவை நிப்பாட்டி வைத்திருந்தான் அவன் மனதில்.

பெல் அடித்தது மாணவர்கள் வரிசையாக கிளம்பிச் சென்றார்கள். அவர்கள் செல்லும் வரை காத்திருந்து வைஷூவிடம் வந்தான், அவளோ தன் அருகில் இருந்தவர்களை நண்பிகளாக மாற்றிக் கொண்டதில் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவள் முத்து வரவும்

வா நண்பா வா சேர்ந்து சாப்பிடலாம்என அழைக்க அவனுக்கு வெட்கமாகிப் போனது. வைஷூவுடன் தனியாக சாப்பிடுவது ஓகே ஆனால் மற்ற பெண்களுடன் எப்படி சேர்ந்து சாப்பிடுவது என தயங்கினான்.

இதே பழைய முத்துவாக இருந்தால் அவர்கள் அழைக்காமலே ஆஜராகி அவர்களது டிபனையும் சேர்த்து சாப்பிட்டு அவர்களின் பொய்யான கோபத்தையும் செல்ல அடிகளையும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கான்டீனில் சாப்பாடு வாங்கித்தந்து சமாதானம் செய்வான், ஆனால் இன்றோ பெண்கள் என்றதும் 4 அடி பின்னால் எடுத்து வைத்து ஒதுங்கினான். அவனது தயக்கத்தைக் கண்ட வைஷூவோ

என்னடா வாஎன அழைக்க அவள் பக்கத்தில் இருந்த பெண்ணோ

கூச்சப்படாதீங்க அண்ணா வாங்கஎன அழைக்க முத்துவிற்கு அவமானமாகிவிட்டது

என்னது அண்ணாவா தன்னை இதுவரை யாரும் அண்ணாவென அழைத்ததில்லை அதிலும் தன் வகுப்பில் படிக்கும் தன்னை விட வயது சிறியவள் தன்னை அண்ணா வென்றதும் நொந்தே போனான். ஆனாலும் தனது இந்த நிலைமைக்கு தான்தானே காரணம் என நினைத்து

இல்லை நான் வந்து எப்படி அதுஎன பேச முடியாமல் தடுமாற மற்றொரு பெண்ணோ

அண்ணா ஏன் கூச்சப்படறீங்க வாங்க தயங்காதீங்கண்ணா உங்களை நாங்க எங்க உடன்பிறப்பாதான் நினைக்கிறோம் வாங்கண்ணாஎன அழைக்க முத்துவுக்கு இன்னும் கஷ்டமாகிப் போனது

இதுவரைக்கும் ஜீனியர் பொண்ணுங்க கூட என்னை அண்ணான்னு கூப்பிட்டதில்லை, கூப்பிடவும் விட்டதில்லை, இங்க என்னடான்னா எல்லா பொண்ணுங்களும் ஒன்னு கூடி என்னை அண்ணாவாக்கிட்டாங்களே சே காலக்கொடுமைடா முத்துஎன உள்ளுக்குள் புலம்பியபடியே கிளாஸ் ரூமிலேயே வைஷூவின் பக்கத்தில் தயக்கத்துடன் அமர அந்நேரம் பரந்தாமன் ஆபத்பாந்தவனாகவே வந்து நின்றான்

டேய் முத்து வாடாஎன அழைக்க முத்து உடனே சந்தோஷமாக எழுந்தான். அதைக் கண்ட வைஷூவோ

முத்துவை ஏன் கூப்பிடறீங்க அவன் எந்த தப்பும் செய்யலை சார்என சொல்ல அதற்கு பரந்தாமனோ முத்துவை பார்க்க அவனோ சமாளி என்பது போல் சைகை செய்ய உடனே

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகாAdharv 2019-06-19 20:29
:eek: :eek: Andha andha varsham padathai padika time sariya irukkum leave la rest eduthu jolly ya irukuradha vittu ivaru ena ippadi irukaru paaaaahhhhhhh. Idhula notes vera facepalm
Interesting update Sasi ma'am :clap: :clap: frnds oda reunion is :cool: Vayasula periyavanai annanu kupidama thambi-nu kupiduvangala boss :grin: kedicha oru satchi-um escape agitare….aduthu ena agum therindhu kola waiting.
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகாsasi 2019-06-20 07:44
Quoting Adharv:
:eek: :eek: Andha andha varsham padathai padika time sariya irukkum leave la rest eduthu jolly ya irukuradha vittu ivaru ena ippadi irukaru paaaaahhhhhhh. Idhula notes vera facepalm
Interesting update Sasi ma'am :clap: :clap: frnds oda reunion is :cool: Vayasula periyavanai annanu kupidama thambi-nu kupiduvangala boss :grin: kedicha oru satchi-um escape agitar

நன்றி ஆதர்வ் முத்து க்ளாஸ்ல இருக்கறதால அவனை அந்த க்ளாஸ்ல எல்லாரும் ப்ரெண்டா நினைப்பாங்கன்னு நினைச்சான் ஆனா எல்லாரும் அண்ணான்னு கூப்பிடவும் பீல் ஆயிட்டான். :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகாmadhumathi9 2019-06-19 20:08
:clap: intha epi comedy & galattaavaaga irunthsthu.nanbar koottam sernthaale kondaatamthaan.adhilum ivargal pazhaiya kathaigalai pesiyathu.eththanai pagesnnu enniye paarkkavillai. (y) nice epi. :thnkx: :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகாsasi 2019-06-20 07:41
Quoting madhumathi9:
:clap: intha epi comedy & galattaavaaga irunthsthu.nanbar koottam sernthaale kondaatamthaan.adhilum ivargal pazhaiya kathaigalai pesiyathu.eththanai pagesnnu enniye paarkkavillai. (y) nice epi. :thnkx: :thnkx: 4 this epi. :GL:

நன்றி மதுமதி நண்பர்கள் இருந்தா கவலையே இருக்காது மனசுல இருக்கறதை பயமில்லாம கொட்டி பேசலாம் எத்தனை உறவுகள் வந்தாலும் நண்பர்களுக்கு இணையா யாரையும் வைசசி பார்க்க முடியாது உங்கள் கமெண்ட் சூப்பர்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகாதீபக் 2019-06-19 18:31
Sis really a nice and sweet episode :clap: . Really the story is going interestingly and expectations increase in all the episodes. (y) . Fun in the episode is super especially the old friends ger together nice :yes: . Eagerly waiting for next part :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகாsasi 2019-06-20 07:40
Quoting தீபக்:
Sis really a nice and sweet episode :clap: . Really the story is going interestingly and expectations increase in all the episodes. (y) . Fun in the episode is super especially the old friends ger together nice :yes: . Eagerly waiting for next part :GL:

நன்றி தீபக்
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top