(Reading time: 23 - 45 minutes)

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 09 - கண்ணம்மா

Un manathil iruppathu naanum en kathalum mattume

வர்களுள் என்ன நடந்தது??? அவள் ஏன்  கலங்கிய கண்ணோடு  அறையை விட்டு வெளியேறினால்??? ஏன் யாரையும் பார்க்காமல் ஹோட்டலில் இருந்து கிளம்பினாள்.??? சிங்ரீஷ்வர் தன் பெற்றோர்களுடன் பேசப் போவது என்ன....? இப்படிப் பல கேள்விகளை நான் உங்கள் மனதினிலே விதைத்தேன் நானாக இல்லை. எல்லம் இந்த பௌவ்வாளும் ஈஷ்வராலும் தான்.

அதுக்கு பதிலும் அவர்கள் தானே சொல்லவேண்டும் தெரிஞ்சிப்போம் வாங்க....

*(கொஞ்சமே கொஞ்சம் நமது ஹீரோஹின்பத்தி தெரிஞ்சிப்போம் அப்போது தான் கதை கேட்கும் உங்களுக்கு நான் சொல்வதும், சொல்ல வருவதும் அதே பீளில் புரியும்..... சோ அட்ஜஸ்ட்மாடி.)*

பௌவ்வை பற்றி சிறு குறிப்பு :

பொஷ்ஷிதா போஷாலி ஒரு பெரிய பணம்படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவள். தாய் வழி பாட்டன் பாடியும் தந்தை வழி பாட்டன் பாடியும் பெற்ற முதல் பெண் வாரிசு. இருவர் குடும்பத்திலும் இவளுக்கு முன் யாருக்கும் பெண் கிடையாது. அதுவும் அவளின் தந்தை வழியில் தொடர்ந்து 3_4 தலைமுறையாய் பெண் வாரிசே இல்லாமல் 5ஆம் தலைமுறையில் இவள் பிறக்கவே அவளைத் தங்க தாமரையில் ஏந்தினர். அவள் செல்லம் என்று கூருவது எல்லாம் நிறையவும் சாதாரண விசையம். பௌவ்வின் தந்தைக்கு 1அண்ணன் 2தம்பிகள் இவர் தந்தையின் சொத்துக்களை பார்க்க விருப்பம் இல்லாமல் அவர் இஷ்டப்படி அவர் படிப்பிற்கேற்றபடி கனிணீ நிறுவனம் ஒன்றை நிருவ்வி அதில் உலக அளவில் பெயரையும் சம்பாரித்துக் கொண்டார் இப்போது. அண்ணன் ஊர் பஞ்சாயத்து நில புலன்களையெல்லாம் கவனித்துக் கொல்ல, தம்பிகள் தொழிர்சாலைகள்ளை நிர்வாகம் செய்தனர்.

பெரிய அண்ணன் திருமணம் முடித்து 6 மாதம் தன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தர், இருதயத்தில் ஏதோ கோளாறு காரணமாக தன் மனைவியை ஊர்ஊர்ராக மருத்துவம் பார்த்தார் ஆதிகேசவன். அவருக்கு மனைவி தன் தாய் சிவகாமி போலவே மட்டும் இல்லாமல் அதே பெயருடனும் அமைந்ததால் அவரை என்றும் கடிந்ததில்லை அம்மா என்றே அழைப்பார். இப்போது மருத்துவத்திற்காக வெளிநாடு செல்வது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை தான் ஆனால் ஒரு 20 25 வருடங்களுக்கு முன் அது எல்லாம் பலருக்க அதிசயமான ஒன்றாகவே பார்க்க பட்டது.

வீட்டின் முதல் மருமகள் இப்படி 7_8 வருடமாய் படுகைக்கும் ஆஸ்பத்திரிக்கும் மாறி மாறிக் குடி புக, தன் இரண்டாம் மகன்  அமரேஷ்வர், அதாவது நம் பௌவ்வின் தந்தை தான்.  அவருக்குக் கல்யாணம் செய்து வைக்க நினைக்க அவர் தன் வேளையை காரணம்காட்டி தள்ளிப்போட, இப்படி இவர்கள் செய்து வந்த நேரத்தில் தான் கல்லுரிக்கு சென்று கொண்டிருந்த நம் பார்வதியை கண்டு அந்த நொடியே தன் மனைவியாக நினைக்கத் தோன்றினாலும் அவர் அதைத் தடுத்தார். தங்களின் குடும்பத்திர்கும் தங்களுக்கும் முதல் பெண்ணாய் சகோதரியாய் தோழியாய் வந்த சிவகாமி அண்ணியை வரும் தன் மனைவி நல்ல முறையில் கவனித்துக் கொல்ல வேண்டும் என்பதும் அது அவ்வளவு எளிதில் நடக்காது என்று நினைத்தே அவர் கல்யாணத்தை தள்ளிப்போட்டார்.

தாய் தனக்காக பார்த்த பெண் தங்களுக்குச் சொந்தம் என்றும், தகப்பனின் நெருங்கிய நண்பன் தரிணிகிறீஸ்வரர் மாமாவின் பெண் என்றும், அவள் எல்லா வகையிலும் தங்கள் குடும்பத்திற்கு பொருந்துவாள் என்று ஆணித்தரமாக அன்னை கூர எந்த எதிர்ப்பும் கூறாமல் திருமண தேதியை குறிக்க சொன்னார்.

பெண் படித்துக் கொண்டிருப்பதாகவும் அவள் திருமணத்திற்கு பிறகும் படிப்பை துடர நினைப்பதை அரிந்ததும் அவர் தன் முழு சம்மதத்தையும் தந்தார் ஆனால் அவர் அரியாத இரண்டு அவள் தான் அவர் கனவின் நாயகி பார்வதி என்றும் அவள் மருத்துவம் படிப்பதும், மேல் படிப்பை வெளிநாட்டில் படிக்க நினைத்ததையும் தான். கல்யாணம் ஆன அடுத்த நாள் அவள் தன் அக்காள் சிவகாமியுடன் விமானம் ஏறினாள். இவள் 2 வருடப் படிப்பை முடித்து வர இங்கு அமரேஷ்வரின் தம்பிகள் இருவருக்கும் திருமணம் முடிக்க காத்திருதனர்.

சக்கர நாற்களியில் தல்லிச் சென்ற சிவகாமியை ஒயிலாக நடக்கவைத்து அழைத்து வந்தாள் பார்வதி, வதங்கிய பூவாய் இருந்தவரை அன்று மலர்ந்த அரியாத பெண்ணாய் கொண்டுவந்தாள், மங்கிய பொன்போல் காட்சி அளித்தவர் பட்டைத்தீட்டியதுப்போல் டால்அடித்தார். இந்த இரு வருடங்களில் ஆதிகேசவன் 2 முரைப் வெளிநாடு சென்று அவர் மனைவியையும் தம்பியின் மனைவி பார்வதியையும் பார்த்து வந்தார். பார்வதியை தன் மகளாகவே பார்த்தார். தன் சிவகாமியை தனக்குத் திருப்பித்தந்தவள் ஆயிற்றே.

பார்வதி இருதய சிகிச்சையில் முக்கியப் பிரிவில் பயிர்த்து பெற்றமையால் அது அவளுக்கு ஒன்றும் கடிணமானதாக இல்லை தான். ஆனால் சொந்த தங்கையைப் போல் தன்னை கவனித்துக் கொண்ட பார்வதி என்றாள் எப்போதும் சிவகாமிக்கு தனி பாசம் தான். சிவகாமிக்குச் சிகிச்சையில் குழந்தை பெறமுடியாமல் போக வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறி பார்வதியைக் கையொப்பம் கேட்க அவள் யார் வற்புறுத்தலுக்கும் அஞ்சாமல் ஆதிகேசவனை வரவைத்து நிலமையை விலக்கினாள். மாமா நீங்க அக்கா மேல் உயிரையே வச்சிருக்கீங்க தயவு செய்து இதில் கையொப்பம் இடுங்கள். என்னை தவறாக நினைத்தாலும் சரி, ஆனால் காலதாமதம் வேண்டாம் என்று கெஞ்சி சொல்லப்போனால்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.