(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 24 - தேவி

Kaanaai kanne

பிகானர் இளவரசன் ப்ரித்விராஜ் தன் மருமகன் ப்ரித்விபா இறந்ததைக் கேட்டு தாங்க முடியாத துக்கத்தில் இருந்தான். ராணாவின் ஆறுதல் வார்த்தைகள் அப்போதைக்கு அவனைச் சமன் படுத்தி இருந்தாலும், அவனுள்ளே அது கனன்று கொண்டே தான் இருந்தது.

இரவு அனைவரும் உறங்கிய பின்னும் உறக்கம் வராமல் தன் குடிலை விட்டு வெளியே வந்து உலாவிக் கொண்டு இருந்தான். குளிர் காலம் என்பதால் பனியைத் தாங்கும் வகையில் வீரர்கள் நெருப்பு மூட்டி இருக்க, கனமான துணியை மேலே சுற்றியபடி நடந்து கொண்டு இருந்தான்.

மகாதேவர் கோவில் அருகே ராணாவின் கூடராமும், அதை ஒட்டிப் பெண்களுக்கான கூடாரமும் இருந்தது. அதனில் இருந்து தொடர்ச்சியாக உபதலைவர்களின் கூடராமும், வீரர்களின் குடிலும் வரிசையாக இருந்தது.

ப்ரித்வி நடந்தபடி கோவிலின் மறுபுறம் சென்று விட்டான். சற்று நேரம் இருளை வெறித்தப் படி இருக்க, பக்கத்தில் அரவம் கேட்டது. திரும்பியதில் இளவரசி நிற்பதை உணர்ந்தான்.

கிரண் தேவி “வீரரே , உறங்கவில்லையா?” என்று கேட்டாள். திரும்பிப் பார்த்த ப்ரித்விராஜன்,

“இல்லை தேவி. இன்றைய செய்திகள் உறக்கத்தை விரட்டி விட்டன” என்றான்.

“தங்கள் மருமகனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்களா?

“அதுவும் தான். ஆனால் அதைவிட என் உள்ளத்தில் நம் தாய்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தைப் பற்றித் தான் கவலையாக இருக்கிறது தேவி”

“என்ன ஆபத்து?”

“முஹலாயர்களின் சாம்ராஜிய விஸ்தரிப்பு “

“எல்லா கால கட்டத்திலும் நடக்கும் விஷயம் தானே இளவரசே. அருகருகே இருக்கும் நாடுகளின் மன்னர்கள் தங்கள் பாதுக்காப்பின் காரணமாகவும், புகழுக்காவும் செய்யும் செயல்கள் தானே”

“இல்லை தேவி. நம்முடைய அண்டை நாடுகளின் படைஎடுப்புகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. ஆனால் மொஹாலயர்களின் வரவு என்பது நிச்சயம் கவலை தரும் விஷயம் தான்”

“புரியவில்லை இளவரசே”

மொஹாலயார்களின் வரவு நம் பாரத கண்டத்தின் அனேக பகுதிகளில் மிகப் பெரிய கலாச்சார மாற்றம் ஏற்படுத்தும்”

கிரண் தேவி புரியாமல் பார்க்க,

“மிகச் சரியாக சொன்னாய் ப்ரித்விராஜ்” என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க ராணா நின்று இருந்தார்.

அவரைக் கண்டதும் இருவரும் தலை வணங்கி நிற்க, ராணா தலை அசைத்தார். பின்

“இளவரசி, பிகானர் இளவரசர் சொன்னது போல் அவர்களின் வரவு மிகப் பெரிய கலாச்சார மாறுபாட்டைத் தோற்றுவிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்றார்.

“விளக்கமாகச் சொல்லுங்கள் காகூ”

“அவர்கள் பின்பற்றும் கடவுள் வழிபாடு , உணவுப் பழக்கவழக்கம் , போர் முறை அனைத்துமே வேறுபட்டு இருக்கின்றது. முக்கியமாக நம் ராஜபுத்திரப் பெண்களை மணந்து அவர்கள் மதத்திற்கு திருப்பும் செயல் நிச்சயம் மிகப் பெரிய துரோகம்”

“நம் எதிரிகள் படை எடுத்தாலும் இதே முறைதானே பின்பற்றுகிறார்கள். அல்லது நாம் அண்டை நாடுகளுடன் திருமணத் தொடர்பு வைத்துக் கொண்டாலும் அவர்கள் நாட்டு வழக்கத்தைப் பின்பற்றுவது தானே அந்தப் பெண்களின் வழக்கம்”

ப்ரித்வி குறுக்கிட்டு,

“அப்படியல்ல தேவி, நம் பாரத கண்டத்தில் அநேகமாக ஒரே வகையான வழிபாடுகள் தான். நாம் மகாதேவரை வழிபட்டால், நம் சகோதர இனத்தவரான குஜ்ஜார்கள் நாராயணனை வழிபடுகிறார்கள். வேறு சிலர் துர்கா தேவியை வணங்குகிறார்கள். எல்லாக் கடவுள்களையும் நாம் உறவினராகத் தான் பார்க்கிறோம். ஆனால் அக்பர் பின்பற்றும் கொள்கையில் கடவுளுக்கு உருவம் கிடையாது. அதே போல் அவர்களில் பெண்கள் கடவுள் வழிபாடுகளுக்குக் கூட வெளியே செல்ல அனுமதி இல்லை. தலையோடு சேர்த்து முகம் முழுதும் துணிகளால் மறைக்கும் உள்ளவர்கள். “ என்றான்.

“ இவை எல்லாம் நாமும் பின் பற்றுகிறோம் தானே மகாராஜ்” என்றாள் கிரண் தேவி.

“இல்லை தேவி. நம் பெண்கள் முகம் மறைத்தாலும் அவர்களின் பிறை நுதலை மறைப்பதில்லை. தகுந்த பாதுகாப்போடு பெண்கள் வெளியில் செல்கிறார்கள். நம் பெண்களுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வீரத்தைப் போதித்து இருக்கிறோம். ஆனால் அக்பரின் கொள்கைகளில் அப்படியான எதுவும் கிடையாது. ஒருமுறை அக்பரின் மாளிகைக்குள் செல்லும் பெண்கள், இறந்த பின்பு கூட மாளிகையிலேயே தான் புதைக்கப் படுகிறார்கள். “

தற்போது ராணா குறுக்கிட்டு “அதிலும் அவரின் போர் முறை மிகவும் கொடியதாக இருக்கிறது.  நம் பாரத கண்டத்தில் உள்ள நாடுகளில் போர் இத்தனைக் கொடூரமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.