(Reading time: 10 - 20 minutes)

இருக்காது. நேருக்கு நேர் வீரர்கள் சண்டையிடுவார்கள். இவர்களோ மறைந்து இருந்து தாக்குவார்கள். “ என்றார்.

“ஆனால் அவரின் கலை ரசனையைப் பற்றிப் பெரிதும் சிலாகித்துப் பேசுகிறார்களே ?”

“கலைக்கும், கொள்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை தேவி. ஆட்சி முறையிலும் அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்து, அதிகாரிகளுக்கு மிகவும் அதிகமான சுதந்திரம் கொடுத்து இருக்கிறார். இதனால் அவர்களின் விருப்பபடி மக்கள் நடக்கா விட்டால் அவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறார்கள் அதிகாரிகள். அதே சமயம் அவருக்கு அதிகாரியின் மேல் நம்பிக்கை இல்லை எனில் , எந்த வித யோசனையும் இன்றி அதிகாரத்தைப் பறிப்பதோ, தண்டிப்பதோ நடக்கிறது. “

“அப்படி என்றால் பாரதத்தில் உள்ள அனைத்து மன்னர்களும் ஒன்றிணைந்து அவர்களை வளர விடாமல் தடுக்கலாமே மகாராஜ்”

“அது பெரிய காரியம் தேவி. நமக்குள் தாயாதிக் காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் அவர்களோடு நம் சொந்தங்களே கூட்டு சேருகின்றனர். மேலும் ஆடை , ஆபரணங்கள், செல்வத்திற்கு ஆசைப் பட்டும் அவர்களோடு சேர்கின்றனர். “

“இதைத் தடுக்க இயலாதா காகூ?” என்று கவலையோடு வினவினாள்.

“தடுக்க வேண்டும். அதற்காகத் தான் முடிந்த வரையில் சிற்றரசர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறேன். அதில் பிகானர்கள், மேவார்கள், குஜ்ஜார்கள் நம்மோடு இணைகிறார்கள். வேறு சில பிரிவினர் அதிகார போதைக்கு ஆசைப் பட்டு அக்பரின் பின்னே செல்கின்றனர்.”

“இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம் மகாராஜ்?”

“இளவரசி நீயும், நம் பெண்களும் நாளை அதிகாலை இங்கிருந்து உதய்ப்பூர் சென்று விடுங்கள். உங்களின் பாதுகாப்பிற்கு ப்ரித்விராஜ் தலைமையில் சில வீரர்கள் வருவார்கள். “ என்று கூறினார் ராணா.

அதைக் கேட்டுத் திடுக்கிட்ட இளவரசி பதில் சொல்லும் முன்,

“இந்த முறை நீ சென்றுதான் ஆக வேண்டும் தேவி. அங்கே உன் தந்தையும், அன்னையும் கவலையோடு காத்து இருப்பார்கள். அத்தோடு நீ அங்கிருந்து உன் தந்தைக்கு உதவினால், அவர் படை திரட்டும் காரியத்தை வேகமாகக் கவனிப்பார்” என்று கூறவே, கிரண் தேவியால் மறுக்க முடியாமல் போயிற்று.

கிரண் தேவி சம்மதமாகத் தலையசைக்கவும்,

“எனில், தூக்கம் வராவிட்டாலும் ஓய்வு எடுத்துக் கொள் தேவி. நாளைக் காலையில் இங்கிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்” என்றார் ராணா.

ப்ரித்வியைத் தயங்கி ஒரு பார்வை பார்த்தாவள், ராணாவின் பார்வை தன்னை நோக்கித் திரும்பும் முன் கிளம்பி விட்டாள்.

கிரண் தேவி செல்வதைக் கண்ட ப்ரித்வி, தன் பார்வையை ராணாவின் பக்கம் திருப்பினான்.

“மகாராஜ், அக்பரின் உளவுப் படை இங்கேயே வேவு பார்க்க வந்து இருக்கிறார்கள். நான் தங்களை விட்டுச் செல்வது சரியான காரியமாய் இருக்காது” என்றான்.

“இல்லை ப்ரித்வி. தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பு முக்கியம். அதே சமயம் கிரண் தேவியை சமாளிப்பதும் எளிதல்ல. உன்னால் மட்டும் தான் முடியும். மற்றத் தளபதிகளை எளிதில் ஏமாற்றி விடுவாள். அத்தோடு “ என்று சுற்றுமுற்றும் பார்த்தவர்,

“அக்பர் அரண்மனைக்குள் சென்று வேவு பார்க்க வேண்டும்” என்றார்.

அவரின் கூற்றில் அதிர்ந்த ப்ரித்வி,

“காரணம் என்ன மகாராஜ்?” என்றான்.

பொதுவாக ராணாவின் உத்தரவுகளை எதிர்ப்பவர் யாருமில்லை. எதிர்த்துக் கேள்விக் கேட்பவரும் எவருமில்லை. ஆனால் பிகானர் இளவரசரில் தன்னைக் காணும் ரானாவிற்கு, அவனிடம் கோபப் பட இயலவில்லை.

“ப்ரித்விராஜ், இதுவரை அக்பர் என்னிடம் நேரடியாகப் போர் புரிவதில்லை. என்னை எதிர்க்க என் உறவுகளையே அனுப்புகிறார். அவரை நேரடியாக போருக்கு இழுக்க என்ன வழி என்பதைக் கண்டு வா. மேலும் பஜ்ரங் கூறிய விஷயங்கள் புரிந்தது தானே. அதை எதிர்த்து மக்களைத் தூண்டி விட , உன்னை மாதிரி விஷயம் தெரிந்தவன் தான் செய்ய முடியும். அதற்கு உனக்கு கிரண் தேவி தேர்ந்து எடுத்துக் கொடுத்த வீரர்களை உபயோகித்துக் கொள். அக்பர் போருக்குத் தயார் எனில் அவரின் பலம் என்ன என்பது உட்பட அனைத்துமே அறிந்து கொள்ள உன்னால் மட்டும் தான் முடியும்.” என்று கூறவே,

“உத்தரவு மகாராஜ். ஆனால் தங்கள் பாதுகாப்பைத் தாங்கள் பலப் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு என் நம்பிக்கைக்குப் பாத்திரமான சில வீரர்களை விட்டுச் செல்கிறேன். அவர்களைத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டான் ப்ரித்விராஜ்.

“என்றைக்கு இருந்தாலும் போகப் போகிற உயிர் தானே. என்னைப் பற்றிக் கவலைப் படுவதை விட்டுவிட்டு நம் தாய் நாட்டைப் பற்றிக் கவலைப்படு”

“என்னுடைய கவலை அதுதான் மகாராஜ். எங்களைக் கையாளக் கூடிய சரியான தலைமை தங்களிடம் தான் இருக்கிறது. தாங்கள் இருக்கும் வரை போராட்டங்களும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.