(Reading time: 10 - 20 minutes)

போரும் தொடரும் என்று அக்பர் உணர்ந்து இருக்கிறார். அதனால் தான் தங்களைக் கொலை செய்ய முயற்சி செய்கிறான். “

“சரி . உன் இஷ்டப் படி செய்” என்று உத்தரவுக் கொடுக்கவும், ப்ரித்வி தன் கூடாரத்திற்குத் திரும்பினான்.

மறுநாள் காலை ராணாவின் உத்தரவுபடி கிரண் தேவி தலைமையில் பெண்களும், அவர்களின் பாதுகாப்பிற்காக ப்ரித்விராஜ் தலைமையில் வீரர்களும் புறப்பட்டனர்.

“ஜெய் பவானி “ என்ற முழக்கமிட்டபடியே வீரர்கள் சென்றனர்.

உதைபூர் நோக்கிச் செல்லும் போது அங்கே அங்கே இளைப்பாறினாலும், ஒரு நாளில் அங்கே சென்று விடுமளவிற்கு திட்டமிட்டு இருந்ததால், அங்கிருந்த மரங்களின் அடியில் இளைப்பறி விட்டுச் சற்று நேரத்தில் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இளவரசியும், ப்ரித்விராஜ்சும் அருகருகே குதிரையில் சென்று கொண்டு இருந்தினர்.

ப்ரித்விராஜ் தன் மௌனத்தைக் கலைத்து,

“நன்றி இளவரசி” என்றான்.

“எதற்கு?’

“என் சோகம் அறிந்து ஆறுதல் அளித்தமைக்கு”

“தங்களை என் பெரிய தந்தை ரானாவைப் போல் எதையும் தாங்கும் வல்லமைப் படைத்தவர் என்று எண்ணியிருந்தேன். சட்டென்று தங்களை உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பார்த்தது மனதிற்கு மிகவும் வேதனை அளித்தது இளவரசே”

“ஆம் தேவி. நேற்றைக்கு மிகவும் துக்கமான நாள். என் மேல் உள்ள பிரியத்தில் தன் குழந்தைக்கு என் பெயரில் பாதி வைத்தாள் சகோதரி. அப்படி ஆசையாய் வளர்ந்த குழந்தை தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு இறக்க வேண்டும் என்றால், அவனிற்கு எத்தனை தெளிவு இருந்து இருக்க வேண்டும். சக மனிதர்களைக் கொடுமைப் படுத்துவதையேத் தாங்க முடியாத நாம், அந்த சிறுவனை விட்டு அவன் மாமாவிற்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்லுவது கொடூரத்தின் உச்சகட்டம்”

“ஆம் இளவரசே.” என்று ஆமோதித்தாள். காட்டு வழியில் பயணம் செய்து கொண்டு இருந்தவர்கள்,  முகம் முழுதும் மறைக்கும் துணியை அப்போது அடித்தக் காற்று தொட்டுச் செல்ல, அந்தத் துணிப் பறந்து காட்டுச் செடியில் மாட்டியது.

கிரண் தேவி அங்கேயே நிற்கவும், என்னவென்றுத் திரும்பிப் பார்த்த ப்ரித்வி, அவள் செடியோடுப் போராடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான்.

பின் அவளின் அருகில் வந்து மெதுவாக அந்தத் துணியை விடுவித்தான்.

“மிகுந்த நன்றி வீரரே” என்றுக் கூறவும், ப்ரித்வி நிமிர்ந்து இளவரசியைப் பார்க்க, அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அழகான விழிகளும், கூர்ந்த நாசியும் அவளைகாட்டியது மிகுந்த அழகாக் இருந்தது.

அந்த இடத்தில் கிருத்திகாவிற்கு மெல்ல முழிப்பு வர, தற்போது கிருத்திகாவும் இளவரசியின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.

கனவில் வந்த கிரண் தேவியின் முகம் மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றியது கருத்திகாவிற்கு.

யோசனையோடு குளித்துக் கிளம்பி வெளியே வர, ப்ரித்வி எல்லோருக்கும் உற்சாகமாக காலை வாழ்த்துச் சொன்னான்.

“பாஸ் , இன்றைக்குப் எங்கே கிளம்புகிறோம்?” என்றுக் கோரசாகக் கேட்க,

“உதய்ப்பூர் “ எனவும் , கிருத்திகா அதிர்ந்தாள். அங்கிருந்த ராணிகள் எல்லாம் சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தனர்.

தொடரும்!

Episode # 23

Episode # 25

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.