(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ

Kipi to kimu

டியர் கிமு,

அங்கே அனைவரும் நலம் என நம்புகிறேன்.

இங்கே நான் சூப்பர் இல்லை சுமார்தான். (சோக ஸ்மைலி).

உன் கடிதம் எனக்கு பூஸ்ட் குடித்ததை போல் தெம்பை மனதிற்கும் உடலிற்கும் அளித்துள்ளது. இதைப் படித்ததும் சிரிக்க வேண்டாம் சீரியசாகதான்பா.

நீ எழுதிய அனைத்தும் டிரை செய்தேன். லெட்டரில் எந்த வாசமும் இல்லை. மே பி ரொம்ப நாள் ஆனதால் பேப்பரில் வாசம் தெரியவில்லை போலும்.

அந்த லெட்டர் பழைய டைரி 2012 மே 20-21 பேப்பர். மே 20 முன்னாகவும்  அந்த மிரட்டல் வரிகள் பின் பக்கம் மே 21. ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லை.

சரியாக டைரியில் இருந்து பேஜ் கிழிக்கப்படவில்லை. கோணல்மானலாக கிழித்திருக்கான். இவன் என்னத்த கிழிக்கப் போறானோ தெரியல.

பின் பக்கத்தில் ஏதோ ஒரே மாதிரியான கிறுக்கல்தான் இருக்கிறது. ஸ்டிக் மேன் சிக்கலான வட்டங்கள் இப்படி ஏதேதோ என்னான்னு தெரியல கிமு. இரண்டு பக்கத்திலும் ஒரே பேனா பயன்படுத்தியதுப் போல உள்ளது. (என் கண்டுபிடிப்பு பாத்தியா? கிபி நீ வேற லெவல்டா)

அம்மாவிடம் பேசினேன் ரொம்பவே டென்ஷன் ஆகிட்டாங்கபா. கிளம்பி வரேன்னு அழுதுட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சமாளிச்சேன். தம்பியும் அம்மாக்கு தைரியம் சொன்னான்.

அம்மா எப்பவும் என்னை “எதுமேலயோ மழை பேஞ்ச மாதிரி இருக்காதனு” திட்டுவாங்க. சுத்தி நடக்கிற விஷயங்களில்  கவனமே இல்லாம செல்போன்ல முழ்கி இருப்பேன். இப்போ நீ சொன்ன மாதிரி கண்ணு காது ஓவர்டைம் செய்து. (கிரையிங் ஸ்மைலி)

போலீஸ் கம்ப்ளைண்ட் இப்ப வேணாம் பாத்துக்கலாம்னு தம்பி சொன்னான். அதான் மினி மளிக கடை இருக்கே. (கண்அடிக்கிற ஸ்மைலி)

நீ சொன்ன மாதிரி சந்தேகம் படும்டியான பெயர் லிஸ்ட் தயாரிச்சேன். முதல் விக்கி ரெண்டு அரவிந்த் மூணு சரவணன். இவங்க மேலதான் எனக்கு சந்தேகம்.

விக்கி என்கிட்ட திடீல்னு பேச ஆரம்பிச்சிட்டான். எனக்கே ஷாக் ஆயிடுச்சி. அவன் பர்த்டே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணினான். போலாமா வேண்டாம்மானு பார்லிமெண்ட்ல டிஸ்கஸ் பண்ணாத குறையா (நானே ஆளுங்கட்சிநானே எதிர்கட்சி) கடைசில போகலாம்னு முடிவு எடுத்தேன்.

க்ளோஸ் பிரெண்ட் அண்ட் கிளாஸ் மேட் ஷர்மிளா. என் கூட பார்டிகாட் மாதிரி வந்தா. விக்கி வீட்லதான் பார்ட்டி. அங்க போனதுமே துப்பறியும் சாம்பு, 007, ஷெர்லக் ஹோம்ஸ்னு இப்படி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.