(Reading time: 6 - 11 minutes)

ஆனா இதுக்கெல்லாம் பயந்து கண்டுபிடிக்காம விடமாட்டேன்.

நெக்ஸ்ட் மண்டே . . பைனல் இயர் ஸ்டூடெண்ஸ் கூட மீட்டிங் இருக்கு. அதுல அவங்க இந்த நாலு வருஷத்துல என்ன விஷயங்கள் கத்துகிட்டாங்னு எங்களோட ஷேர் பண்ணுவாங்க. செம மொக்கையா இருக்கும். கம்பள்ஸரி அடெண்ட் பண்ணனும்.

நான் ரெண்டாவது பேரா மென்ஷன் பண்ணியிருக்கும் அரவிந்த் பைனல் இயர்தான். எனக்கு அரவிந்த் மேல சந்தேகமா இருக்கு. மீட்டிங் போய்ட்டு வந்து லெட்டர்ல எழுதறேன். அவன் ரொம்ப சாது மாதிரி இருப்பான். அதிகம் யாரோடையும் பேச மாட்டான். பையன் செம படிப்ஸ்பா.

சரியான காரணம் சொல்ல தெரியில அவன் மேல சந்தேகமா இருக்கு. நான் கேட்காமலேயே நிறைய நோட்ஸ் தந்திருக்கான். அது தப்புனு சொல்ல வரல. சம்திங் ராங்னு தோணுது.

முதல்ல கைஎழுத்து சரி பாக்கணும். ஷர்மி கூட வருவா அதனால பயம் இல்ல. காலேஜ் ஆடிடோரியத்துல தான் மீட்டிங் நடக்கும்.

அடுத்து சரவணன் எங்க தெருல தான் இருக்கான். போட்டோகிராபி படிக்கிறேன்னு தெருல போற வரப் பொண்ணை போட்டோ எடுப்பான். சரியான சண்டைசேவல். அவன்கிட்ட நிறைய சண்டைப் போட்டிருக்கேன்.  

சினிமா பத்தின உன் வியூ கரெக்ட் கிமு.

விளம்பரத்துல கூட குக்கருக்கு பொண்ணுங்க . . பைக்னா ஆமபளைங்கனு காட்றாங்க.

இவங்களே பொண்ணுங்க பைக் ஓட்டக் கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்களா?

அதுலயும் சில பெர்ப்யூம் விளம்பரத்துல “ஆண் பெர்ப்யூம் போட்டா எல்லா பொண்ணுங்களும் அவன் பின்னாடியே போவாங்களாம்

பெண்கள்னா அவ்வளோ கேவலமா நினைச்சிட்டாங்க . . இதுல யார குற்றம் சொல்றது.

இதை பாக்குற பசங்க மனசு இதே மாதிரி நம்ம பின்னால பொண்ணுங்க வரும்னு  நினைச்சா என்ன ஆகறது? 

இல்ல அப்படி யோசிக்கணும்னா தான் விளம்பரமே பண்றாங்களா தெரியல?

புலம்பி ஒரு யூஸ்சும் இல்ல . . .

சீனியர்ஸ் மீட்டிங் போயிட்டு வந்து எழுதறேன்.

டேக் கேர்டா பை.

கண்டிப்பா அடுத்த லெட்டர் முழுதும் தமிழ்ல எழுத முயற்சிப் பண்றேன். உனக்கு லெட்டர் எழுதினா ரிலாக்ஸா பீல் பண்றேன்டா.

With lots of love & affection

கிபி

22/07/2018

கடிதங்கள்  இணைக்கும் . . .

Episode # 04

Episode # 06

Go to Kipi to Kimu story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.