(Reading time: 6 - 11 minutes)

பல கேரக்டர்ஸ் எனக்குள்ள.

என்னோட சகஜமா பேசினான் விக்கி. சைக்கிள் கேப்புல அவன் கைஎழுத்து செக் செய்தேன். லெட்டர்ல இருக்கிறது அவன் கைஎழுத்து இல்லப்பா .. முதல் விஷயம் பிளாப்.

டைரி இருக்கா அதுல முக்கியமா மே 20 தேதி பேப்பர் இருக்கானு தேடினேன். ஆனா எதுவும் சரியா கிடைக்கல.

ஒரளவுதான் தேட முடிஞ்சது. அங்க கொடுத்த ஜுஸ் கேக் சாப்பிட பயமா இருந்தது. எல்லாரும் கிளம்பினதும் அவன் கிட்ட டைரக்டா கேட்டுடேன்.

“இவ்வளோ சில்லியா பிஹேவ் பண்ண மாட்டேன். நான் அன்னிக்கே உன்கிட்ட பிரபோஸ் பண்ணிட்டேனே. திரும்ப இது எதுக்கு? படிப்பு முடிஞ்சதும் நல்ல வேலைக்கு போனதும் உன் பேரண்ட்ஸ்கிட்ட பொண்ணு கேட்டு வருவேன்னு” கேஷீவலா சொன்னான்.

எனக்கு நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல. ஆனா சந்தேக லிஸ்ட்ல இருந்து விக்கிய எடுத்திடலாம்னு இருக்கேன்.

குதிரை மேல் அமர்ந்திருக்கும் போர் வீரன் சிலைகள் பார்த்திருக்கியா? இதுல ஒரு சீக்ரெட்டான வழக்கம் பாலோ பண்ணுவாங்களாம். இப்பவும் இருக்கா தெரியல. ஆனா முன்ன இருந்த்தாம்.

குதிரையின் நான்கு கால்களும் நிலத்தில் ஊன்றி இருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தவனாம்.

குதிரையின் முன்னங்கால்களில் ஒன்று தூக்கிய நிலையில் இருந்தால் அந்த வீரன் போரில் காயம் அடைந்து பின்னர் இறந்துள்ளான் என்று பொருள்.

குதிரையின் முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் காணப்பட்டால் அந்த வீரன் போரில் வீர மரணம் அடைந்துள்ளான் என்று பொருள்.  

எத்தனை பெரிய விஷயத்த சிலைல சர்வ சாதாரணமா காட்டியிருக்காங்க பாரேன். பாக்க சாதாரண சிலை ஆனா அதன் மேல் உள்ள போர்வீரனின் மரணத்தை அழகா கோடிட்டு செதுக்கியிருக்காங்க. இனிமே எங்க இந்த மாதிரி சிலை பார்த்தாலும் குதிரை காலதான் பாக்க தோணும் இல்லயா?

இப்படிதான் எதோ ஒரு தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாமலும் (( ஐய்யயோ நானா இப்படி எழுதறேன் .. . இறைவா என்னிடமிருந்து தமிழை காப்பாற்று )) ஒரு ரகசியம் அந்த லெட்டர்ல இருக்கு. என் கெஸ் ரைட்டா? சொல்லு

இந்த லெட்டர் வந்ததுல இருந்து டென்ஷனா இருக்கு. பேப்பர்காரன், பால்காரன் எவன பாத்தாலும் இவன் எழுதி இருப்பானோனு சந்தேகம் வருது. கிளாஸ்ல கவனிக்க முடியலப்பா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.