Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா

Ethir ethire neeyum naanum

வனை சென்று பார்க்க கூடாது என்று இவள் நினைத்த போதும் ஏதோ ஒன்று அவனிடம் அவளை அழைத்து சென்றுவிட்டது ... ஆம் இன்றோடு ஐந்தாவது நாள் .... “கூடாது கூடாது” என்று எவ்வளவு சொல்லியும் அதிகாலையிலேயே கிளம்பி அவனை கண்டு, நலம்விசாரித்து, அலுவலகம் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறாள் அவள் ..

அவளிடமே அவள் மனம் முறுக்கி கொள்கிறது தான் ... “ஒரு வேளை அமர் தந்த காயத்தை மறக்க ... இவ்வாறு செய்கிறோமா?” என்று கூட அவளுக்கு சந்தேகம் வந்தது.... பெரிதாய் பேசிவிடவில்லை அந்த பாலா ... ஆனாலும் அவன் பார்க்கும் அந்த பார்வை...!!

"ஐயோ சாமி என்ன பார்வை டா அது...?" இவளும் அன்றாடம் கவனிக்கிறாளே! இவள் என்ன பேசுவது என்று புரியாமல் புன்னகை புரிந்து விட்டு பார்வையை சுழல விடும்போது ... அவன் பார்க்கிறானே ஒரு பார்வை ...எதை சொல்ல வருகிறது அந்த பார்வை?  ஊடுருவும் அவனது பார்வை நிச்சயமாய் அவள் அகத்தை தொடுகிறது.

இதற்கு தான், இந்த பார்வைக்கு தான் அவள் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள் .... ஆனால் எப்படியோ மீண்டும் அவனை காண வந்துவிடுகிறாள் .... "எனக்கு என்ன தான் ஆச்சோ ...?" என்று அவள் யோசிக்க ... ஹர்ஷினி நேற்று கொடுத்த அர்ச்சனை நினைவில் வந்தது அவளுக்கு.    "ஏதோ ஆக்சிடென்ட் ....எவனோ அடிபட்டிருக்கான் .... ஆளை சேர்த்தோமா ....வேலை முடிஞ்சதா ...நம்ம வேலையை பார்க்க போகணும் ...அதை விட்டுட்டு தினம் அவனை பார்க்க போக நீ என்ன அவன் பொண்டாட்டியா ...?" என்று வெகுவாய் திட்டினாள் அவள்... “சே இவன் குடும்பம் பத்தி ஒண்ணுமே கேட்கலையே?” ..என்று அப்போது தான் உணர்ந்தாள் பொன்னி.

"சரி நாம தான் கேட்கல ...இவனாவது சொல்ல கூடாது ...ஒருத்தரும் இங்க இருக்க மாதிரி தெரியலையே ....அந்த அம்மாவை கூட காணோமே?” என்று யோசனையோடு அவள் அமர்ந்திருக்க, அவளையே விழுங்குவது போல் கழுகு பார்வை பார்த்து கொண்டிருந்தான் பாலா.

உண்மையில் அவள் வாழ்வில் இதுவரை ...விபத்தை, விபத்தில் இரத்தக்காயங்களோடு ஒருவரை கண்டதில்லை ....அன்று இந்த பாலாவை அந்த கோலத்தில் கண்டது முதல் ..அவன் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தான் எண்ணினாள் ... அதிலும் அவன் வேறு "ப்ளீஸ் என்னை காப்பாத்திடு" என்று சொன்னது அவளை பெரிதும் பாதித்துவிட்டது. ஏற்கனவே “நம்மால் காப்பாற்றப்பட்ட உயிர் நன்றாக இருக்கிறதா?” என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளிடம் இருக்க, இவன் வேறு “தொந்தரவா நினைக்கலன்னா தினம் வந்துட்டு போக முடியுமா?” என்று

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையாAbiMahesh 2019-07-20 13:29
Nice Epi Mam! Rendu per manathilum ena plans iruko?
Waiting for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையாAdharv 2019-07-20 11:11
:D ponny oda screen play sema :dance: volunteer-aga vandhu sikurangalo :Q: Bala ena plan poduraru?? First epi-laye pazhi vanga plan potavru ippo ena panuvaru? Indha aunty and pon's oda convo was very funny and interesting :lol: sema viruvirupaga irundhadhu ma'am :clap: :clap: but ivanga loda poi-nala ethavdhu periya problem izhuthu vitupangalonu thonudhu...waiting to see what happens next. thank you and keep rocking.

I guess page wise word limit squeeze agidichinu :Q: indha week la ella long epi-um short epi yagave theriudhu..ena mayomo ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-07-19 20:49
:Q: thittamaa? Bala nalla aalthaane vayitril puliyai karaikka paarkkaatheergal? Nalla aalaaga irukka vendum.nice epi. (y) waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top