(Reading time: 8 - 16 minutes)

“மயக்க மாப்பு....”

“அது என்னடா மயக்க மாப்பு....”

“அது மச்சி... சார் மயக்க மருந்து ஸ்பெஷலிஸ்ட் இல்லை... அதால அவர் பேரு மயக்க மாப்பு.... சர்ஜெரி பண்ணுறவர் கசாப்பு மாப்பு அப்பறம் இந்தா மொதல்ல இருகாரு இல்லை அவர்தான் தலை மாப்பு....”

“மயக்க மாப்பு மத்தவங்களுக்கு கொடுத்த மயக்க மருந்துல மீதி இருக்கறதை வேஸ்ட்டா போக கூடாதுன்னு நீங்களே குடுச்சுட்டீங்களா... இப்படி ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்றீங்க....”

“தம்பி அவர் சொல்லுறது உண்மைதான்ப்பா.... நிஜமாகவே நீ சொல்ற எதுவும் அங்க நடக்கலை... யாரோ வேணும்ன்னே புகார் கொடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன்... இங்க பாரு... எங்களை அவுத்து விட்டுடு... நாங்க உங்க மேல புகார் கூட கொடுக்கலை.... மன்னிச்சு விட்டுடுறோம்....”

“கசாப்பு மாப்பு... சோக்கா டீல் போடறிய்யா... எங்களைப் பார்த்தா விரல் சூப்புற கைக்குழந்தை மாதிரி தெரியுதா... உங்க மூணு பேரு கண்ணுலயும் விரலை விட்டு ஆட்ட வந்திருக்கோம்... நீங்க பண்ணின அத்தனை தில்லாலங்கடி வேலைக்கும் எங்கக்கிட்ட ஆதாரம் இருக்கு மாப்பு... all details we know... அப்பறம் ஏன் உங்களை போலீஸ்கிட்ட ஒப்படைக்காம இங்க கூட்டிட்டு வந்தோம்ன்னு யோசிக்கறீங்களா... அது கூடிய சீக்கிரம் உங்களுக்கு தெரியவரும்... அதுவரை ஜாலியா மாமியார் வீட்டு விருந்தை ஒரு கட்டு கட்டுங்க.... செல்லங்களா உள்ள வாங்க....”, அங்கிருந்தவன் கூப்பிட திடகாத்திரமான மூவர் உள்நுழைந்தனர்....

“இங்க பாருங்க தம்பிங்களா... இங்க இருக்கறவங்க நமக்கு ஒரு வகைல மாப்பிள்ளை முறை.. அதனால அவங்களுக்கு எந்த குறையும் இல்லாம நல்ல படியா பார்த்துக்கணும்... புரியுதா....”

“சொல்லிட்டீங்க இல்லை அண்ணே... ஸ்பெஷல் கவனிப்பு சிறப்பா கொடுத்துடலாம்....”

“டேய் அப்பறம் நம்ம மாப்பீஸுக்கு உடம்பு சரியில்லை... ஒரு வாரமா வயித்தால போகுது... அதனால வாய்வழியா எதையும் கொடுக்காதீங்க.... ஒரு வேளை மட்டும் ட்ரிப்ஸ் போட்டுடுங்க.... எப்பவும் பரவச நிலைலேயே வச்சிருங்க....”, அவர்களிடம் கூறிவிட்டு டாக்டர்கள் கூப்பிட கூப்பிட திரும்பியே பாராமல் மூவரும் சென்று விட்டனர்....

“வாங்கம்மா நீங்க யாரு...”

“இது சாந்தியோட வீடுதானே...”

“ஆமாம் நீங்க யாரு...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.