(Reading time: 8 - 16 minutes)

கொடுங்க...”

பாரதியும், சந்தியாவும் சாந்தியின் அன்னையை அவளின் அறையை சோதனையிட அனுமதிக்குமாறு மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருந்தனர்....

இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது காலிங்பெல் அடிக்க சாந்தியின் அன்னை சென்று கதவைத் திறந்தார்...

“வாப்பா குமரா... நல்லா இருக்கியா... எங்க கொஞ்ச மாசமா  உன்னை கடைல காணும்...”

“அது அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைம்மா... அதுதான் ஊருக்கு போய் இருந்தேன்....”

“ஓ இப்போ எப்படி இருக்காங்கப்பா...”

“இப்போ பரவாயில்லைமா.... தொடர்ச்சியா மருந்து, மாத்திரை எடுக்க சொல்லி இருக்காங்க...”

“சீக்கிரம் சரி ஆகிடும்... கவலைப்படாத... சரி என்ன விஷயமா வந்த...”

“அது...”,என்றபடியே அவன் அங்கு அமர்ந்திருந்த பாரதியையும், சந்தியாவையும் பார்த்தான்...

“நமக்குத் தெரிஞ்ச பொண்ணுங்கதான் குமரா... தயங்காம சொல்லு...”

“சாந்தி தங்கச்சி அது செல்போன் மேல இருக்கற கண்ணாடி உடைஞ்சு போச்சுன்னு எனக்கிட்ட ரிப்பேர்க்கு கொடுத்து இருந்துதும்மா... அது சரி செய்யரதுக்குள்ள தங்கச்சியே போய் சேர்ந்துடுச்சு... உடனேயே கொண்டு வந்து கொடுக்க நினைச்சேன்... உங்க வீட்டுல ஆளுங்க வர்றதும். போறதுமா இருந்தாங்க... போலீஸ் விசாரணை அப்படின்னு வேற இருந்துச்சு... சரி எல்லாம் ஓயட்டும் வந்து கொடுக்கலாம்ன்னு நினைக்கறதுக்குள்ள அம்மாக்கு உடம்பு சரியில்லாம போச்சு... ஊருலயே தங்கறா மாதிரி ஆகிடுச்சு... அதுதான் தாமதம்... மன்னிச்சுடுங்க...”

“இது என்ன போன் தம்பி... சாந்தியோட போன் அவக்கிட்ட தானே இருந்துச்சு... சம்பவம் நடந்து ஒரு மாசம் கழிச்சு ஒரு போலீஸ்காரர் வந்து அவளோட பை மத்த ஐட்டம்லாம் கொடுக்கும்போது செல்போனும் கொடுத்தாரே... வேற யாருதாவது சாந்தி ரிப்பேருக்கு உன்கிட்ட கொடுத்திச்சோ....”

“இல்லைமா இது சாந்தி போன்தான்... இதுக்கு முன்னாடியும் ஒரு வாட்டி கீழ விழுந்துடுச்சுன்னு கொண்டு வந்து சரி பண்ணிட்டு போச்சு...”

“அம்மா அது சாந்தி போன்தான்... நீங்க வாங்கிக்கோங்க...”,பாரதி சொல்ல குமரனிடமிருந்து போனை வாங்கிக் கொண்டார் சாந்தியின் அன்னை....

“இதுக்கு எவ்வளவுப்பா கொடுக்கணும்....”

“எதுவும் வேணாமா... தங்கச்சியை இப்படி கொன்னுட்டானே.... மனசே ஆறலைமா... கடைல பையனை உக்கார வச்சுட்டு வந்திருக்கேன்... உடனே போகணும்... உங்களுக்கு எப்போ என்ன தேவைனாலும் சொல்லுங்க... உடனே வந்து ஹெல்ப் பண்ணுறேன்...”, என்று கூறி அவரிடம் விடைபெற்று சென்றான் குமரன்...

“அம்மா நாங்க சாந்தி ரூம் போய் பார்க்கவா...”

“சரிம்மா வாங்க... உங்க மனத்திருப்திக்காக பார்த்துக்கோங்க....”

“அதுக்கு முன்னாடி அந்த செல் காட்டுங்க... அதுல ஏதாவது விஷயம் கிடைக்குதா பார்க்கலாம்....”, அவரிடமிருந்த செல்லை வாங்கி ஆராய ஆரம்பித்தாள் சந்தியா...

ஆராய்ச்சியின் முடிவில் புதையல் கிடைக்குமா இல்லை புஸ்ஶென்று போகுமா பார்க்கலாம்...  

தொடரும்

Episode # 21

Episode # 23

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.