(Reading time: 8 - 16 minutes)

“நேத்து உங்ககூட போன்ல பேசினேனே.. சந்தியா நான்தான்... இவங்க வக்கீல் பாரதி...”,சந்தியா கூற அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தார் சாந்தியின் தாயார்.....

“நேத்தே உன்கிட்ட சொன்னேனே... என் பொண்ணு விஷயமா எதுவும் பேச இல்லைன்னு...”

“இங்க பாருங்கம்மா, என்ன காரணத்துனால உங்க பொண்ணு இறந்து போனான்னு உங்களுக்கு காரணம் தெரிய வேண்டாமா....”,பாரதி கேட்க சாந்தியின் அன்னை அழ ஆரம்பித்தார்...

“அதுதான் இந்த உலகத்துக்கே தெரிஞ்சு போச்சேம்மா... அந்த நாசமாப் போனவனாலதான் என் பொண்ணு அநியாயமா இறந்துட்டா... அவ அந்த பையன் தொல்லை பண்ண ஆரம்பிச்ச உடனேயே என்கிட்டே சொல்லி இருக்கலாம்... நான் போய் அந்த பையனோட முதலாளிக்கிட்ட பேசி இருப்பேன்...”

“அது உண்மையான்னு தெரியலையேம்மா... ஏன்னா அந்த பையன் என்ன நடந்ததுன்னு சொல்றதுக்கு முன்னாடியே இறந்து போய்ட்டான்.....”

“எங்க சாபம் சும்மா விடுமா... அதுதான் அவனை காவு வாங்கிடுச்சு... இதுல இனிமே பேச ஒண்ணும் இல்லைமா... நீங்க கிளம்புங்க....”

“ஏம்மா நிஜமாவே அந்தப் பையன்தான் கொன்னான்னு உங்களுக்குத் தெரியுமா... வேற ஏதாவது கூட நடந்து இருக்கலாம் இல்லையா...”

“ஏம்மா பட்டப்பகல்ல அத்தனை பேர் கண்ணு முன்னாடி வெட்டி இருக்கான்... ஒரு வாரம் முன்னாடிதான் என் பொண்ணை மிரட்டி இருக்கான்... இவ்வளவு நடந்த  பின்னாடியும் வேற காரணம் எப்படி இருக்க முடியும்...”

“இல்லைம்மா இதுவரை எங்களுக்கு கிடைச்ச தகவலை வச்சு பார்த்தா அந்த பையன் கொலை பண்ணினா மாதிரி தெரியலைமா... உங்க பொண்ணு ரூம் நாங்க செக் பண்ணலாமா...”

“போலீஸ் கிட்டத்தட்ட இதுவரை ஒரு ஆறு வாட்டி வீடு முழுக்க செக் பண்ணிட்டாங்க... அவ ரூமையே தலை கீழா புரட்டி எடுத்துட்டாங்க... சந்தேகப்படறா மாதிரி எந்த விவரமும் கிடைக்கலைன்னுதான் சொன்னாங்க...”

“ஹ்ம்ம் maybe அவங்க கண்ணுல மாட்டாதது எங்க கண்ணுக்கு புலப்படலாம் இல்லையா...”

“இனி என்ன புலப்பட்டு என்ன பண்ணமா... என் பொண்ணே போய் சேர்ந்துட்டா... கூடவே அந்தப் பையனும் போயாச்சு... இனி யாருக்கு நியாயம் கிடைக்கணும்....”

“இல்லைம்மா அந்த பையன் குற்றவாளி இல்லைன்னா அப்போ நிஜ குற்றவாளி இந்த ஊருக்குள்ளதானே சுத்திட்டு இருக்கான்... உங்க பொண்ணு மாதிரி வேற பொண்ணு அவனால பாதிக்கப் பட கூடாது இல்லை... அதுக்காகவானும் எங்களுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.