(Reading time: 9 - 18 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்

Hello Friends,

எல்லாரும் எப்படி இருக்கீங்க... ஜெய் என்னும் ஆத்மாவை நியாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்... சாரி சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நீண்ட பிரேக்... House hunting, Renovation அண்ட் shiftingன்னு நான்கு மாதமாக என்னை வைத்து செய்துவிட்டது..... கதை எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கும் என்று தெரியவில்லை...

கதையை பற்றிய சிறிய முன்னோட்டம்....

நாயகன் சக்தி மத்திய அமைச்சர் மகன்... தன் மாமன் மகள் சந்தியாவின் தோழி காயத்ரியை ஒரு அசாதாரண சூழலில் கைப்பிடிக்கிறான்,,,, இதற்கிடையில் மருத்துவ கல்லூரியில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு இறக்க அதை கொலையாக இருக்கலாம் என்று சந்தியா நினைக்கிறாள்.... மற்றொரு ஊரில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவனின் தந்தைக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்க கடைசி நிமிடத்தில் சக்தி குழுவினர் அதை தடுத்து அங்கிருந்து மருத்துவர்களை கடத்திச் செல்கிறார்கள்.... இவற்றிற்கு பின்னணியில் இருப்பவர் ஒருவரா இல்லை பலபேரா... சக்தி, சந்தியா சந்தோஷ் யார் என்பவற்றை இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்.....

க்தி அல்மோஸ்ட் நாம குற்றவாளியை நெருங்கிட்டோம்... இப்போ அவனை எப்படி அணுகப்போறீங்க....”, அமைச்சர் சக்தியிடம் வினவினார்...

“அப்பா அதிரடிதான்ப்பா உதவும்... விஷயம் வெளிய கசியறதுக்குள்ள அவங்களை தூக்கறதுதான் பெட்டர்.... வாக்குமூலம் வரை வாங்கிட்டு அதுக்குப்பிறகு காவல்துறைக்கு சொல்றது நல்லதுன்னு நினைக்கிறேன்ப்பா....”

“திடீர்ன்னு கைதுன்னா பிரச்சனை ஆகிடும் சக்தி... இதுவரை திரட்டிய ஆதாரத்தை வச்சு அவங்க மேல கேஸ் கொடுக்க முடியுதா பாரேன்....”

“அது சரியா வராதுப்பா... எஸ்கேப் ஆகிடுவாங்க... டிபார்ட்மெண்ட்ல இருக்கற கருப்பு ஆட்டுல எதுனாச்சும் ஒண்ணு போட்டுக்கொடுத்தாக் கூட உஷார் ஆகிடுவாங்க....”

“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரிதான்... மதி என்ன சொன்னாரு....”

“மதி சாரும் அதுதான் சொன்னாருப்பா.... நீங்க எப்போ திரும்ப டெல்லி கிளம்பறீங்க...”

“அடுத்த புதன் கிளம்பறேன் சக்தி... எது பண்ணினாலும் பார்த்து பண்ணுங்க.... அவசரப்படாதீங்க...”

“சரிப்பா... இந்த வாரத்துக்குள்ள எப்படியும் எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துடலாம்...”

“ஆமாம் சக்தி சீக்கிரம் முடிக்கப் பாருங்க... நாள் எடுக்க எடுக்க இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்படுவாங்களோ... சரி நானும், அம்மாவும் மாமா வீட்டுக்கு கிளம்பறோம்...”

“சரிப்பா இன்னைக்கு எல்லாரும் பாரதி மேடம் வீட்டுல கூடி அடுத்து எப்படி proceed பண்ணலாம்ன்னு பேசப்போறோம்.... வந்துட்டு உங்களுக்கு அப்டேட் பண்ணுறேன்...”

“சரி சக்தி... எதிலும் கவனமா இரு.... நேரடியா எங்கயும் நீயோ, இல்லை சந்தியாவோ இறங்காதீங்க...”

“இல்லைப்பா... இதுவரை எல்லாமே சாரங்கன் சார் வழியாத்தான் பண்ணிட்டு இருக்கோம்....”, அமைச்சரும் அவர் மனைவியும் கிளம்ப சக்தி காயத்ரி எங்கேனும் தென்படுகிறாளா என்று ஆவலுடன் மாடியைப் பார்த்தான்...

“என்ன தெரிகிறது...”, திடீரென்று தன் பின்னால் வடிவேலுவின் குரலில் யாரோ கேட்க சக்தி திடுக்கிட்டுத் திரும்பினான்....

“எம்மாவ் நீதானா.... ஏம்மா இப்படி பின்னாடி வந்து வைகைப்புயல் வாய்ஸ்ல பேசி பீதியைக் கிளப்பற...  அதுதான் ஒண்ணும் தெரியலையே.... சந்தோஷமா கிளம்பு....”

“மகனே நீ இப்படி எதாச்சும் பண்ணுவேன்னு தெரிஞ்சுதான் காலைலேயே காயத்ரியையும் அவங்க அம்மாவையும் வெளிய அனுப்பிட்டோம்... அதனால நீ மாடியைப் பார்த்து நிக்காம வேலையைப் பார்க்க கிளம்பு...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.