(Reading time: 9 - 18 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“எம்மாவ் நானும், காயத்ரியும் ராசி ஆனவுடனே உன்னை முதியோர் இல்லத்துல சேர்க்கலை பாரு... என் பேரை மாத்திக்கறேன்...”

“நல்ல பேரா இப்போலேர்ந்தே யோசிச்சுக்கோடா மகனே....”, அவன் தலையைத் தடவி விட்டு, ஸ்டைலாக கண்ணாடியை மாட்டியபடியே சென்றுவிட்டார் சக்தியின் அன்னை....

“வா சாரங்கா.... எப்படி இருக்க..... ஜூனியர் சாரங்கன் என்ன சொல்றான்...”

“நல்லா இருக்கோம் ராஜா... ஜூனியர் நல்லாத்தான் இருக்கான்... ராத்திரி முழுக்க தூங்காம எங்களை வேலை வாங்கிட்டு பகல்ல நிம்மதியா தூங்கி ஜாலியா இருக்கான்.... மயிலுதான் பாவம்....”

“ஏன் நீ பார்த்துக்க வேண்டியதுதானே....”

“எங்க என்கிட்டே வந்தாலே ஏதோ வில்லன பார்த்தா மாதிரி அப்படி அலறுறான்...”

“அது முக ராசி சப்பாணி... புள்ளை பிடிக்கறவன் மாதிரி இருந்தா அப்படித்தான் அழும்....”

“ஏய் பக்கி உனக்கு என்னோட முக ராசி பத்தி தெரியலை.... அய்யாக்கு கோர்ட்ல எவ்ளோ fans இருக்காங்க தெரியுமா....”

“டேய் நிறுத்துங்கடா.... உங்க ரெண்டு பேருக்குமே குழந்தை வந்தாச்சு... இன்னும் நீங்க ரெண்டு பேரும் அடிச்சுட்டு இருக்கீங்க.... பாரதி மத்தவங்க எப்போ வரேன்னு சொன்னாங்க....”

“இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவாங்க....”

“ஓ சரி... நான் அம்மாவையும், பாப்பாவையும் கூட்டிட்டு மால்க்கு போயிட்டு வரேன்... நீங்க பேசி முடிச்சபிறகு கால் பண்ணு... அப்பறம் கிளம்பி வரோம்.... இங்க இருந்தா பாப்பா உங்களை பேச விடமாட்டா....”

“ச்சே பக்கி... எம்புட்டு அனுசரணையா ஒரு ஆத்துக்காரர் உனக்கு... கடவுளுக்கு கண்ணே இல்லை.... உன்கூட போய் இத்தனை நல்லவரை கோர்த்து விட்டிருக்காரே....”

“உன் கொள்ளிக்கண்ணை வைக்காதடா.... ராஜா நீங்க மொதல்ல அங்க உக்காருங்க.... உங்களுக்கு சுத்தி போடணும்....”

“ஹே சப்பாணி மாமா... எப்பி இக்க நீ.... தம்பி பாப்பாவ ஏன் கூட்டு வல்ல....”

“வாடி... வாடி... என் செல்லாக்குட்டி.... தம்பி பாப்பா தூங்கிட்டாண்டா.... நாளைக்கு கூட்டிட்டு வரேன்... சரியா....”

“சரி நாங்க கிளம்பறோம்.... பாரதி எல்லாருக்கும் ஸ்நாக்ஸ் வாங்கி வச்சிருக்கேன்... குடு.... வரேன் சாரங்கா... நாங்க வந்த பிறகு நீ கிளம்பு சரியா...”, ராஜா தன் மகளுடனும், அன்னையுடனும் கிளம்ப அடுத்த ஐந்து நிமிடங்களில் சக்தி, சந்தோஷ், மதி மூவரும் அங்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.