(Reading time: 9 - 18 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“இருந்தது சக்தி... எல்லாம் இங்க வா அங்க வா... நான் இத்தனை மணிக்கு வரேன்... இதுப் போலத்தான்.... வேற எதுவும் அந்தரங்கமா இல்லை...”

“ஹ்ம்ம் பய ரொம்ப உஷார் பார்ட்டியாத்தான் இருந்திருக்கான்.... இதுல இருந்தே ஏதோ திருட்டுத்தனம் தெரியுது....”

“சார் மணிதும், அந்த சாந்தியோடதும் ஒரிஜினல் death certificate நமக்கு கிடைச்சா நல்லா இருக்கும்....”

“ஹ்ம்ம் அதுக்கு நான் GHல ஒரு ஆளை பிடிச்சிருக்கேன் சக்தி... பார்க்கலாம் அவரால தேத்த முடியுதான்னு....”

“ஹ்ம்ம் சக்தி, சந்தோஷ் நீங்க காலேஜ் போனீங்களே.... ஏதாவது விஷயம் தேத்த முடிஞ்சுதா....”

“விஷயமா.... பெரிய புதையலே கிடைச்சிருக்கு சார்...”, என்று அவர்கள் அன்று இரவில் கல்லூரியில் கண்ட அனைத்தையும் விவரித்தனர்....

“இது நாம நினைச்சதை விட பெரிய விஷயமா இருக்கும் போலவே... அண்ட் இதுக்கு பின்னால பெரிய நெட்வொர்க் இல்லாம இப்படி எல்லாம் பண்ண முடியாது.... அங்க இருக்கற விஷயங்களை ரெகார்ட் பண்ண முடிஞ்சுதா சக்தி....”

“பண்ணினேன் சார்... ஆனா அத்தனை தெளிவா என்னோட பென் காமெரால பதிவு பண்ண முடியலை... தூர நின்னு எடுத்ததால கொஞ்சம் ப்ளர்ரா இருக்கு...”, சக்தி தான் எடுத்து வந்திருந்ததை அங்கிருந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பினான்... தெளிவில்லாமல் இருந்தாலும் அங்கிருப்பது என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது....

“சக்தி நீங்க இது ரெகார்ட் பண்ணி எத்தனை நாள் இருக்கும்....”

“அது இப்போதான் ரெண்டு நாள் ஆச்சு....”

“அந்த டாக்டர்ஸ் காணாம போனது இந்நேரம் அங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்... மதி சார் இப்போ உடனடியா நாம எதுனாச்சும் பண்ணியாகணும்.... இல்லன்னா இதுல சம்மந்தப்பட்டிருக்கறவங்க உஷாராகிடுவாங்க....”

“இல்லை பாரதி மேடம்... அவங்க காணாம போனது அங்க யாருக்கும் தெரிய வராது... வேற ஒரு டீம் டாக்டர்ஸ் வச்சு அந்த ஷேக் ஆபரேஷன் முடிச்சாச்சு... அவர் ரெண்டு நாள் ICU-ல இவங்க கண்காணிப்புல இருக்கப் போகறதாத்தான் முன்னாடியே சொல்லி இருந்தாங்க.... அதே மாதிரி ரெண்டு நாளைக்கு அவங்களோட மத்த appointments எல்லாம் கான்செல் பண்ணிட்டாங்க,,,, ஷேக்கூட அவர் PA மட்டும்தான் வந்திருக்காரு.... அவரை நம்ம டீம் டாக்டர்ஸ் பார்த்து அப்டேட் பண்ணிட்டாங்க... So இன்னும் ரெண்டு நாளைக்கு பிரச்சனை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.