“ஹலோ நிலா, நான் ரகு பேசுறேன்” என்றான் ரகு.
“ம்ம்ம் தெரியுது” என்றாள் நிலா. அவளது தோழி வானர படைகள் முழுவதும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தது.
“நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். Mobileல உங்க message பார்த்தேன். அதுதான் கால் பண்ணேன். ஏதோ முக்கியமான விஷயம் பேசனும் நு message பண்ணிருந்திங்க” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, கல்யாணத்திருக்கு அவனுக்கு எடுத்திருக்கும் வேட்டி சட்டையோடு உள்ளே நுழைந்தனர் நாகராஜனும், ரகுகவின் நண்பர்களும்.
நிலாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சுற்றி இத்தனை பேரை வைத்துக் கொண்டு, அதும் அவள் தாயை வைத்துக் கொண்டு, இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லத்தான் message செய்தேன் என்று எப்படி சொல்வது.
அப்படியே சொன்னாலும், இன்னும் ஒரு வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு என்ன எப்படி நிருத்த முடியும்.
அவனுக்குப் பதில் கூற வேண்டுமே என்பதற்காக “ஒன்னும் இல்ல சும்மா பேசலாமேனு தான் message பண்ணிருந்தேன். Nothing serious” என்று மழுப்பினாள் நிலா.
ரகுவும், நிலாவும் சிறிது நேரம் பேசிவிட்டு, callஐ கட் செய்தனர்.
அன்று முழுவதும் நிலாவை ஓட்டி தள்ளி விட்டனர் அவள் தோழிகள். விதியே என்று அமைதியாக இருந்துவிட்டாள் நிலா.
நாள் நெருங்க நெருங்க நிலாவிற்கு தூக்கம், சாப்பாடு மறத்து போனது. தன் பெற்றோருக்காக வெளியே சிரித்தாளும் தன் நிலையைக் கண்டு உள்ளே அழுதுக் கொண்டாள்.
நேரமும், அலையும் தான் யாருக்காகவும் நிற்க போவது இல்லையே. அது நம்ம நிலாவிற்காக மட்டுமா நிற்கப் போகிறது. நாட்கள் நகர்ந்து, கல்யாண reception அன்று வந்து நின்றது.
(இன்னைக்கு, நம்ம ரகு-நிலா கல்யாணம், chillzee வாசகர்கள் அனைவரும் உங்க குடும்பத்தோட வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும்).
உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என அனைவராலும் அந்த திருமண மண்டபம் முழுவதுமாக நிறைந்திருந்தது.
ரகுவிற்கு நெருக்கமான திரைத் துறை பிரபலங்களும் வந்திருந்தார்கள். Director சங்கர் சார் கூட வருவதாகப் பேச்சு (selfie எடுக்கனுனு நினைக்கிறவங்க கல்யாணத்திற்கு வாங்க).
1 மாதத்திற்குள்ளே ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Thanks for your comments Abi...
Thanks for your valuable comments...
Thanks for your good comments...
nice epi 👏👏👏 thank you and.keep.rocking.
thanks for your good feedback