(Reading time: 5 - 9 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

அப்படி எந்த விதத்திலும் குறைவில்லாமல் அனைத்தும் நிறைவாய் இருந்தது.

எல்லார் மனதிலும் மகிழ்ச்சி, நிலாவின் மனதைத் தவிர. தன் பெற்றோருக்காகச் சிரித்த படி ரகுவின் அருகில் நின்றிருந்தாள். ரகுவின் முகத்தைக் கூட அவள் சரியாகப் பார்க்கவில்லை.

ரகு மிக சிறந்த போட்டோகாரன் தான், பல modelகள், heroகள் என எல்லோரையும் தன் cameraவில் படம் பிடித்திருக்கிறான். ஆனால் இன்று, அவன் கல்யாணத்த அவனல படம் பிடிக்க முடியவில்லை பாருங்க. அதுதான் கடவுளோட விளையாட்டு. (..…)

கவல படாதீங்க, அவனுக்கு உதவத்தான், அவனோட நண்பன், நம்ம முன்னால் hero விஷ்ணு இருக்கானே. ஆமாங்க, விஷ்ணுதான் இந்த கல்யாணத்தோட full photo coverage. விஷ்ணு வந்த அவன் மனைவி அனு இல்லமலா, அனுவும் தான் இந்த கல்யாணத்துக்கு வந்திருக்காங்க. (விஷ்ணு அனுவை பற்றி தெரிந்துக் கொள்ள, உனக்காக மண்ணில் வந்தேன் கதை பார்க்கவும்).

அன்று இரவு கல்யாண receiption வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. ரகுவையும் நிலாவையும் வித விதமான pose கொடுத்து photoகளை எடுத்துத் தள்ளினான் விஷ்ணு.

விருப்பம் இல்லை என்றாலும் தன் பெற்றோருக்காக தன் விதி என்று ஏற்றுக் கொண்டு அதற்கு ஒத்துழைப்பும் கொடுத்தாள் நிலா.

மறுநாள் காலை பெற்றோர், உறவினர், நண்பர்கள் என அனைவரின் ஆசிர்வாததோடு, நிலாவின் கழுத்தில் தாலிக் கட்டினான் ரகு.

அதன் பின் நடை பெறவேண்டிய சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இனிதாய் முடிந்தது.

கல்யாணம் முடிந்து அனைவரும் காலை உணவு உண்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப காரில் ஏறினர்.

ரகு, நிலாவிற்கு அலங்கரிக்கப் பட்ட வண்டி. அதில் இருவரும் பின்னால் இருக்கையில் அமர, ரகு நண்பன் வினோத் முன் இருக்கையில் அமர்ந்தான். வண்டி கிளம்பியது.

ரகு நிலா ஆளுக்கு ஒரு புறம் பார்த்த வாரு காரில் அமைதியாக அமர்ந்து வந்தனர். அவர்களின் நிலையைப் பற்றி அறிந்த வினோத்தும் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் driverக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அது தன் வீட்டிற்கான வழி இல்லை என்று ரகுவிற்கு புரிய “டேய் எங்க ட இந்த பக்கம் போர. இது நம்ம வீட்டுக்கான வழி இல்லையே.” என்று கேட்டுவிட்டுஎன்ன இவங்க வீட்டுக்கு போறோமாஎன்று நிலாவை கை காட்டி கேட்டான்.

அவன் பேசுவதை அதுவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த நிலா, கடைசி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.