Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pottu vaitha oru vatta nila

“உன் அண்ணா?”

“அதுவும் லேட் ஆகும்...”

“ம்ம்ம்... நீ சின்ன பொண்ணு இருந்தாலும் பொதுவா சொல்லேன்... மஞ்சு எப்படி நல்லப் பொண்ணு தானே? உனக்கு அவ தங்கையை பத்தி தெரியுமா? நல்ல மரியாதை தெரிஞ்ச பொண்ணுன்னு சொன்னாங்க அது நிஜமா?”

ஜோதியினுள் சுழற்காற்றை போல பல விஷயங்கள் ஒரே நேரத்தில் சுழன்றன...

கார்த்திக் – சாதனா – மஞ்சு... என நடந்த சம்பவங்களும் இப்போது இவர் பேசுவதும் எப்படி பொறுந்திப் போகும் என்று யோசித்தவளுக்கு உள்ளுக்குள் திகு, திகு என எரிந்தது...

இது தானா கார்த்திக் அன்று சாதனாவை அப்படி தேடிச் சென்று பேசியதன் பின்னிருக்கும் காரணம்??? அவளினுள் ஏற்கனவே இலை மறை காயாக கனன்றுக் கொண்டிருந்த பொறாமை இப்போது கொழுந்து விட்டு எரியும் தீயாக மாறிப் போனது...

கார்த்திக்கை அவள் அந்த சாதனாவிற்கு விட்டுத் தர வேண்டுமா???

“என்னம்மா அமைதியா இருக்க? “ மீண்டும் கேட்டார் பார்த்தசாரதி!

வளர்ச்சியும் அழிவும் வார்த்தையால் வருவதால் நிதானித்துப் பேச வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு.

பாடத்தில் படிப்பதில் பத்து சதவிகிதம் நிஜ வாழ்க்கையில் பின்பற்றினால் கூட உலகில் இருக்கும் எத்தனையோ பிரச்சனைகளை எளிதாக தீர்த்து விடலாம்!

இங்கே ஜோதியும் மனதில் இருந்த கண்மூடித்தனமான கோபத்தால் நிதானத்தை இழந்தாள். தான் சொல்லப் போகும் வார்த்தைகளால் வரக் கூடிய விளைவுகளை பற்றி யோசிக்காமல் சட்டென்று பதில் சொன்னாள்!

“அவ நல்லப் பொண்ணே இல்லை! அவ குணம் சரி இல்லை... ரொம்ப ஒரு மாதிரியான கேரக்டர்... யாரைக் கேட்டாலும் அவளைப் பத்தி நல்லதா எதுவும் சொல்ல மாட்டாங்க”

அமர்ந்திருந்தவர் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திராதவர் போல கேள்வியாக அவளைப் பார்த்தார்.

“நீங்க நினைக்குற மாதிரி மரியாதை கொடுக்க தெரிஞ்ச பொண்ணெல்லாம் அவ இல்லை... அவங்க குடும்பமே கொஞ்சம் ஒரு மாதிரி... என் அண்ணா லவ் செய்து கல்யாணம் செய்துக்கிட்டான். அதனால நாங்க வேற வழி இல்லாம ஏமாந்துப் போய் மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு இருக்கோம். நீங்க அப்படி இல்லையே! பொறுமையா எதுவா இருந்தாலும் செய்ங்க. என்னைக் கேட்டா இந்த குடும்பத்தோட சம்மந்தமே வச்சுக்காதீங்கன்னு தான் சொல்லுவேன்!”

பார்த்தசாரதி கிளம்பிச் சென்றப் பிறகும் அதே இடத்தில் அசையாமல் நின்றாள் ஜோதி.

அவள் இப்போது சொன்னதால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை...

கோபம், வெறுப்பு, பொறாமை என புடைச் சூழ பேசியவள்.. இப்போது யோசித்தாள்!

தொடரும்...

Episode # 24

Episode # 26

Go to Pottu vaitha oru vatta nila story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]Srivi 2019-10-15 06:11
Aathira karanakku budhi mattu.. paavam ellorum.. ellarukum idhanala enna issues Vara pogudho..
Belated wishes Sissie..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]Thenmozhi 2019-10-14 20:13
History re-defined. Intha life-la Binds ezhuthi ipadi oru SIL situation nan paarpenu ninaikave illai. Bad gal Binds :P :P

Villi-ku ivalavu polish koduthu justify seira ore oruthar ningala than irupinganu ninaikiren :-)

Ithula Manoj enge varar. avarai yen Manju thita poranga? Jothiyai thituna ok :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]madhumathi9 2019-10-14 18:57
facepalm ohoh kobaththinaal evvalavu peria thappu seithu irukkirom endru eppothu unarvaal jothi :Q: nice epi.eagarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]NSK 2019-10-14 18:11
Evvalavu kobam irunthalum or whatever may be the rsn Jothi seithathu thappu.
Manju Jothi sister in laws sandai potta sari. Sathana mele Jothi koba pada base ellame avaloda thapana assumptions.
Athai mattum vachu ipadi oru third person kitta pesinathu by all means thappu.

Intha incidentku appuramum epadi Manju Jothi rasi ananga :o
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]Anu_sh 2019-10-14 17:13
Award vangitu mike pidichu pesina stylea irukku Binds.
Vara poguthu vara poguthunu sonna puli veliye vanthachu. Whats next.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]Vanaja 2019-10-14 14:48
steam steam steam
:angry:
Yenma jothi intha ketta puthi 3:)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]saju 2019-10-14 12:29
HAYOOOOOO YEN IPDI JOTHY NEE UN PERAI KEDUTHU KEETAAAA
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 15 Oct 2019 05:05
காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள் ஜோதி. கதவைத் திறந்த நிர்மலா மகளுக்காக கதவை நன்றாக திறந்து விட்டு, அவள் உள்ளே வந்த உடன் மீண்டும் சாத்தி தாளிட்டாள்.

“பயங்கர வெயில்ம்மா.. லெமன் ஜூஸ் போட்டுத் தரீங்களா?” என்று கொஞ்சலாக கேட்டப் படி தன் அறையை நோக்கிச் சென்றாள் ஜோதி.

இப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் போது அந்த ‘மஞ்சுவை’ப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதில் ஜோதிக்கு நிம்மதியாக இருந்தது.

அவளும்... அவளுடைய சிரிப்பும்...

ஜோதிக்கு வெறுப்பாக இருந்தது...
***
Don't miss it!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 16 Sep 2019 18:32
“இந்த சாரீ நல்லா இருக்குமா மனோஜ்?”

மஞ்சு காட்டிய 105வது புடவையை அலுப்புடன் பார்த்தான் மனோஜ்.

“மஞ்சு!”

“கல்யாணத்துக்கு அப்புறம் முதல் நாள் ஆபீஸ் போறேன்... நல்ல சாரீயா செலக்ட் செய்து கட்டிட்டு போக வேண்டாமா??”

“உனக்கு எல்லா சாரீயும் நல்லா தான் இருக்கும்”

“இருந்தாலும் பெஸ்ட் சாரீ செலக்ட் செய்யனும்...”

****************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 10 Sep 2019 06:28
ஜோதி, நமக்கு நன்கு பரிச்சயமான பலரைப் போல சராசரியான ஒரு டீன்-ஏஜ் பெண் தான்!

அவளின் உலகம் அம்மா மற்றும் அண்ணன்கள் மட்டுமே.

மூன்று பேருமே அவளை சீராட்டி, பாராட்டி வளர்த்தார்கள்...

பள்ளி, கல்லூரி என நட்பு வட்டம் இருந்தாலும் அவளைப் பொறுத்த வரை எல்லாமே அம்மா, அண்ணன்களுக்குப் பிறகு தான்!

முதல் முதல் அவளின் இந்த வட்டத்தில் எக்ஸ்ட்ராவாக உள்ளே வந்தவள் வினோதினி.

ஆனால் வீட்டில் எல்லோருமே கலந்துப் பேசி முடிவெடுத்து நடந்த திருமணம் என்பதால் ஜோதிக்கு அதில் கூடுதல் மகிழ்ச்சியும் இல்லை...

****************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-23
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 19 Aug 2019 17:27
“பார்த்து போங்க... பை...”

1005வது முறையாக சொல்லி விட்டு... மனமில்லாமல் திரும்பி பார்த்தப் படி சென்ற மனோஜிற்கு புன்சிரிப்புடன் கை அசைத்து விடைக் கொடுத்தாள் மஞ்சு.

அவளின் மனமெல்லாம் பட்டாம்பூச்சி கலர் கலராக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தது...

மனோஜ்... அவள் மீதான அவனின் காதல்... அவன் மீது அவளுக்கு ஏற்பட்டிருக்கும் புரிதல்... யாருக்குமே இல்லாமல் அவனுக்கு மட்டும் அவளிடம் இருக்கும் அதீத உரிமை... அதில் மயங்கும் அவளின் பெண்மை...

***********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-22
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 12 Aug 2019 17:42
ஞாயிற்றுக்கிழமை மாலை!

ஆங்கில பத்திரிகையில் இருந்த குறுக்கெழுத்து போட்டி கட்டங்களைப் பென்சிலால் நிரப்பிக் கொண்டிருந்தாள் மஞ்சு. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் யோசித்து கட்டங்களில் நிரப்ப நிரப்ப அவளின் உற்சாகம் அதிகமாகி கொண்டே சென்றது!

பொதுவாக எப்போதுமே ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் குறுக்கெழுத்து போட்டியின் பதில்களை கண்டுபிடிக்க முயல்வாள். ஆனால் சில குறிப்புகளுக்கான விடைகள் தெரியாமல் இருக்கும்... ஆனால் இன்று மற்ற வாரங்களை விட கேள்விகள் சுலபமானதாக இருந்தது.

ஒரு ஃப்ளோவில் பதில்களை எழுதிக் கொண்டே சென்றவளின் கையில் இருந்த பென்சில் ஊக்கு உடைந்துப் போனது. இன்னும் இரண்டே

***********

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-21
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top