ஆசை பயம் நம்பிக்கை ஏமாற்றம் என பல உணர்வுகளை அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மனதில் தேங்கிக் கிடந்தன.
எதிர்கால இந்தியா இளைய சமுதாயத்தினர் கையில். இவர்களில் எத்தனைப் பேர் சிறந்த குடிமக்களாக இருக்கிறார்கள்? சிலர் பணம் மது மாது போதை வஸ்துகள் போன்றவைகளுக்கு அடிமையாகி. அவற்றிற்காக தீயவர்களின் கைபாவையாகி உள்ளனர்.
அது ஒர் பெரிய நிறுவனம் நடத்தும் வாக்இன் இன்டர்வியூ. குளிரூட்டபட்ட அறையில் வந்தவர்கள் வரிசையாக போடபட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் பெரிய மீன் தொட்டி அதில் பலவகையான மீன்கள் நிம்மதியாக உலவிக் கொண்டிருந்தன.
அதற்கு சற்றே மேலே நிறுவனம் வாங்கிய கேடயங்களும் பரிசு சான்றிதழ்களும் கம்பீரமாய் அலங்கரித்தது.. அருகாமையில் அழகான ரிசப்ஷனிஸ்ட் தன் வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தாள்.
அத்தனை ஆண் கண்களும் அவளின் அழகிய மேனியை பலமுறை தழுவியதை அவள் அறியாமல் இல்லை. இருப்பினும் வேலை என்று வீட்டைவிட்டு வெளியே வந்தபின் இவற்றை தவிர்க்க இயலாது. தங்கள் வீட்டு பெண்களும் வெளியே பணிக்காக சென்றுள்ளனர் என்பதை அவர்கள் கண்டிப்பாக உணரவில்லை என்பது நன்கு புரிகிறது.
அவர்களில் ஒருவனாய் நேர்காணலுக்காக திலக் காத்திருந்தான். அவனுக்கு அங்கிருக்க விருப்பமில்லாத்தை அவன் உடல்மொழி நன்கு உணர்த்தியது. பெரியப்பா சிவராமன் அந்த கொடிய நிகழ்விற்கு பின்னர் வீட்டிலேயே முடங்கிவிட்டார். இவனும் தன் படிப்பை எல்லை மதிப்பெண்களோடு முடித்துவிட்டான். இனி முன்னர் போல் ஊர் சுற்ற முடியாது. வேலைக்கு செல்ல வேண்டும்.
என்னதான் பணம் இருந்தாலும் ஆண் வீட்டில் இருக்க முடியாது. அது புருஷ லட்சணம் அல்லவே.
அறிவு என்பதற்பும் படிப்பு என்பதற்கும் ஆயிரம் வேறுபாடுகள் உள்ளதை வாழ்க்கை பாடம் அவனுக்கு கற்று தர தொடங்கியது. சூழ்நிலை அவனை கைதியாக்கி அங்கே அமர்த்தியுள்ளது.
அந்த பெரிய கண்ணாடி கதவு கணேஷ் வந்ததும் சென்ஸார் மூலம் உணர்ந்து தானாக வழி விட்டது.
உள்ளே நுழைந்தவன் ரிசப்ஷெனில் விசாரித்தான். லிப்ஸ்டிக் பெண் ஒரு அப்ளிகேஷன் பார்மை நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டவன் திலக் அருகில் இருந்த காலி சேரில் அமர்ந்தான். அது அவன் அதிர்ஷடமா அல்லது திலக் துரதிஷ்டமா தெரியவில்லை. அந்த பார்மை படிப்பதைப் போல பாவணையில் திலக்கை படித்தான்.
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Bharath move kalaikal
and interesting
Eppadi kidnap Panna poranga
athuvum police ambulance and
Doc emathi ...
Eagerly waiting sissy
Plan pottu moonu peraum thookrathu
Semma
They deserve these kind of treatment
WHo is this Bharath? Yen ivangalodu kuttani seruraru?? Is he also victim of these three