கார்த்திகேயனும் நித்யாவும் வீட்டுக்குள் நுழைந்ததும், அவர்களை முதலில் கண்ட குறிஞ்சியம்மாளோ, "எங்க போயிட்ட டா நித்தி, உன்னை காணலன்னதும் பதறிட்டேன் தெரியுமா?" என்று அவளை பார்த்து கூறியவர்,
"எங்க இருந்தா கார்த்தி, ஒன்னும் பிரச்சனையில்லையே," என்று கேட்க,
"என்னம்மா நித்தி, எங்க போறதா இருந்தாலும் சொல்லிட்டு போறதில்லையா?" என்று ஞானசெல்வம் கேட்டார்.
அவர்களின் பேச்சுக்கு எந்த பதிலும் கூறாமல் நித்யா அமைதியாக இருக்க, "என்ன நீங்க, இவக்கிட்ட பொறுமையா பேசிக்கிட்டு இருக்கீங்க, இவளையெல்லாம்.." என்று அவளை முறைத்த வஞ்சியோ,
"ஏன் டீ, உனக்கு இவ்வளவு ஆகிப் போச்சா, எங்க இருந்து இந்த தைரியம் உனக்கு வந்துச்சு, வீட்டை விட்டு போறீயா, உன்னை நினைச்சு கவலைப்படுவோம்னு உனக்கு கொஞ்சம் கூட நினைப்பில்லையா? ஏன் டீ இப்படி செய்ற?" என்று சொல்லி அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அதுவரை மௌனமாக இருந்த கார்த்திக்கோ, "அத்தை என்ன இது சின்ன பிள்ளையை அடிக்கறது போல அடிக்கிறீங்க, அவ வீட்டை விட்டு போகல, பார்க்ல தான் உட்கார்ந்திருந்தா, கொஞ்ச நேரத்தில் அவளே வந்திருப்பா, அதுக்குள்ள நாம பயந்துட்டோம் அவ்வளவு தான், அதான் பத்திரமா கூட்டிட்டு வந்தாச்சுல்ல விடுங்க," என்று தடுத்தான்.
"வெளிய போகணும்னா சொல்லிட்டு போறதில்லையா? அவ்வளவு திமிரா ஆயிடுச்சா அவளுக்கு, எங்கேயும் தனியா போகாதவ இப்படி போனா என்னன்னு நினைப்பாங்க," என்று அவர் கேட்க,
"ஆமாம் நேத்து அவளை பேசினதுக்கு அவ என்ன செய்வா, மனசு வருத்தத்துல பார்க்ல போய் உட்கார்ந்திருக்கா, நேத்து செஞ்ச காரியத்துக்கு இது கூட தெரியலையான்னு கேட்கிறது, இன்னைக்கு உனக்கு இவ்வளவு தைரியம் வந்துடுச்சான்னு கேட்கிறது, இப்படி மாத்தி மாத்தி பேசினா, பாவம் பிள்ளை என்ன செய்யும்? நீ கொஞ்ச நேரம் சும்மா இரு" என்று குறிஞ்சியம்மாள் அவளை அடக்கினார்.
"பின்ன நேத்து செஞ்ச காரியத்துக்கு இவளை கொஞ்சுவாங்களா ம்மா, இவ வயசு பிள்ளைங்க எவ்வளவு விவரமா இருக்குங்க, இவ ஏன்ம்மா இப்படி இருக்கா, இவ நேத்து செஞ்ச தப்பால என்ன நடக்க இருக்கோ, என்ன நஷ்டம் ஏற்படுமோன்னு எத்தனை பிரச்சனை? இன்னும் கூட அது சரியாச்சான்னு தெரியல, அப்படியிருக்க விவரம் பத்தலன்னு தானே சொல்வாங்க," என்று சொல்ல,
"என்னடி விவரம் பத்தல, உனக்கு 22 வயசுல தான் கல்யாணம் செஞ்சு வச்சேன். இவ பிறக்கும்
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.