(Reading time: 10 - 20 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

கண்டுப்பிடிச்சாச்சு," என்று தெளிவாக நடந்ததை கூற,

"நம்ம முருகன் நமக்கு துணையா இருக்கும் போது, நமக்கு ஒன்னும் பெருசா ஆகிடாது. அவரோட அருள் நமக்கு இருக்கு." என்று உருகி பேசிய குறிஞ்சியம்மாள் பூஜை அறைக்குச் சென்றார்.

இத்தனை விவாதங்கள் நடைப்பெற்றும் நித்யா அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளை கவனித்த கார்த்திக், "நித்தி வா கொஞ்ச நேரம் ரூம்ல வந்து ரெஸ்ட் எடு," என்று அழைத்தான்.

"இல்ல நான் இங்கேயே இருக்கேன்." என்று அவள் மறுக்க,

"கொஞ்சம் பேச வேண்டியிருக்கு, வா." என்றான். அவள் விவாகரத்து பற்றி பேசியதை அவனால் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு தீர்வு இருக்கும், நேற்று நடந்ததில் அவளது தவறு இருக்கிறது. அதுபோல் இனி தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்காமல், அவனிடமிருந்து விலக நினைக்கிறாளே, அப்படியென்றால் அவள் மனதில் இருப்பதை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளாமல் குழம்பி இப்படி ஒரு முடிவுக்கு சென்றிருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன், அந்த குழப்பத்தை போக்க வேண்டுமென்று நினைத்தான்.

பெரியவர்கள் முன்பு அதை பேசாமல் தனியாக தங்கள் அறைக்கு சென்று அவளிடம் பேச வேண்டுமென்று நினைத்து கூப்பிட, அவளோ வரமாட்டேன் என்பது போல் பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.

"ஹே உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லித்தானே கார்த்திக் கூப்பிட்றான், நீ இப்படி பிடிவாதமா உட்கார்ந்திருக்க, என்னை உன்னை திட்டினதுக்கு கார்த்திக் மேல கோபத்தை காட்றீயா? நீ செஞ்சதுக்கு கார்த்திக் இவ்வளவு தூரம் இறங்கி வருவதே பெரிய விஷயம், அதை புரிஞ்சு நட," என்று மீண்டும் வஞ்சி அவளை திட்டினார்.

"அய்யோ அத்தை எதுக்கு இப்போ அவளை திட்டிட்டே இருக்கீங்க, பேசாம விடுங்க அத்தை." என்று கார்த்திக் சொல்ல,

"ரொம்ப தான் ஓவரா போறா, என்னாச்சுன்னு தெரியல இவளுக்கு, பிள்ளையை திட்டிட்டே இருக்கா, போ போய் ஏதாச்சும் வேலையிருந்தா பாரு," என்று பூஜை அறையிலிருந்து வந்த குறிஞ்சியம்மாள்  வஞ்சியை பார்த்து சொல்லி அவரை முறைத்தவர்,

"கார்த்தி, வேணும்னா நித்தி இன்னைக்கு என்னோட படுத்துக்கட்டும், ஏதோ மனக்கஷ்டம் போல, நாளைக்கு சரியாகிடுவா," என்று கார்த்திக்கிடம் கூறினார்.

அப்பப்போ மனக்கசப்பை அப்பப்போ தீர்த்துக்கணும் பாட்டி, அதை ஆறப் போட நினைச்சா, அது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.