(Reading time: 10 - 20 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

போது 24 வயசு, அப்போ நீ விவரமா இருந்தீயா? அப்படியிருந்திருந்தா உன்னோட புருஷன் கூட்டாளிங்க கூட சேர்ந்து கெட்டுப் போனத தடுத்து இருக்க மாட்டீயா? அவர் ஊரை விட்டுப் போலாம்னு சொன்னப்போ, இல்லங்க இங்க இருந்து பிழைச்சுக்கலாம், நான் பதமா பேசி எங்க அண்ணன்க்கிட்ட காசு வாங்கி தரேன்னு சொன்னீயா? அப்படியெல்லாம் விவரமா இருந்திருந்தா, இப்படி ஏன் கஷ்டப்பட்ருக்க போற, ஆனா புருஷன் சரியில்லன்னு தெரிஞ்சதும் நீ தெளிவா ஆகலையா? குடும்பத்தை பார்க்கலையா?

உன்னை சொல்றேனே, நான் எப்போ தெளிவா, விவரமா ஆனேன். உன்னோட அப்பா இருந்த வரை அவர் என்ன சொல்றாரோ, செய்றாரோ அது தானே எனக்கு வேதவாக்கா இருந்துச்சு, அதை தானே நானும் செய்தேன். அவர் போனதுக்கு பிறகு செல்வம் தொழிலைப் பார்க்க, நான் வீட்டை பார்க்க தடுமாறி தான் போனேன். அப்புறமா தானே கொஞ்சம் தெளிவு வந்துச்சு.

நம்மளை வச்சு பார்த்தா, இவளுக்கு சின்ன வயசு தானே, அதுவும் ஸ்கூல் படிப்போட நிறுத்தி வீட்டுக்குள்ள  வச்சிருந்த, வெளி உலக அனுபவம் இருந்தா தானே, இனி தான் கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு எல்லாம் புரிய வரும், நாம தான் புரிய வைக்கணும், அதை விட்டுட்டு திட்டினா எப்படி?”

“என்னம்மா பேசற, நம்ம காலம் வேற, இப்போ காலம் வேற இல்லையா? இப்போ சின்ன குழந்தைங்களே விவரமா இல்லையா?”

“முன்ன தலைமுறையில் எப்படி இருந்தாங்களோ, அந்த ஜீனோ, ஜூனோ தான் அவங்க பிள்ளைங்களும் இருப்பாங்க, எல்லோரும் ஒரே மாதிரியா இருப்பாங்க, இந்த காலத்து பொண்ணுங்க விவரத்தை தான் பார்க்கிறோமே, படிக்கும் போதே காதலிச்சு விட்டை விட்டு ஒடிப் போறதுல தான் அவங்க திறமையை காட்றாங்க, அந்த வகையில் நம்ம பொன்ணு எவ்வளவோ பரவாயில்லை, நல்லா படிக்க வச்சிருந்தா, அவளும் கொஞ்சம் தெளிவா ஆயிருப்பா, அதைவிட்டுட்டு நீதான் விட்டுட்டன்னா,  நானும் பிள்ளை  படிப்பை பத்தி யோசிக்காம கல்யாணத்தை பத்தி யோசிச்சேன்.

இப்போதும் அதனால ஒன்னும் கெட்டுப் போகல, கொஞ்ச நாளில் அவளும் சரியாகிடுவா, அதைவிட்டுட்டு சும்மா குறை சொல்லி திட்டாத," என்று சொல்ல,

"சரி இதோட இந்த பேச்சை விடுங்க, நேத்து நடந்த விஷயத்தை கண்டுபிடிச்சு சரி செஞ்சாச்சு, அதனால அதைப்பத்தியே பேசிட்டு இருக்க வேண்டாம்," என்று கார்த்திக் கூறினான்.

"வந்தது யாரு கார்த்தி, அவன் என்ன எடுத்துட்டுப் போனான். நஷ்டமெல்லாம் ஒன்னும் ஆகலையே," என்று குறிஞ்சியம்மாள் கேட்க,

"அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி, அவன் எதுக்காக வந்தான். என்ன செய்தான்னு எல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.