அதிதியின் தலைமாட்டில் பார்த்த உருவம் இல்யூசனா? ஹாலுசினேஸனா?... அதிரதன் குழம்பினான்.
இல்யூசன் எனும் மாயத்தோற்றம் உருவாக காரணமே இல்லை… அவனுக்கு பார்வை நன்றாக தெரியும். மேலும் அந்த இடம் அவ்வளவு தொலைவிலும் இல்லை. அவனுடைய மனம் ஒரு மாய காட்சியை கற்பனை செய்யும் அளவிற்கு சூழலும் இல்லை.
ஓகே… ஹாலுசினேஷனா… இருக்கலாம். அவன் நினைத்தவுடன் துளசி அத்தை வந்து விளக்கம் சொல்லலாம் என்ற கற்பனை அவனுள் உதித்ததால் இருக்கலாம். அவனுக்கு துளசி அத்தை மீது பரிவு உண்டு. ஏனெனில் அவரை அவனுக்கு முன்பே தெரியும். முன்பே என்றால் அவன் சிறு பிள்ளையாக இருந்தபோது… பத்து வயதிருக்கும்போது அவரை சந்தித்திருக்கிறான். எப்படி?
அதிரதனுடைய பிறந்த நாளின்போது வந்திருந்தார். அவர் தன் குழந்தைகளுடன் வரவில்லை. கணக்கிட்டு பார்த்தால் அப்போது அதிதிக்கு நான்கு வயதாக இருந்திருக்கும். அவனுக்கு பிறந்த வாழ்த்து சொன்ன புது ‘ஆன்டி’யின் கள்ளமில்லாத முகம் அவனுக்கு பிடித்து போயிற்று. மனதிலும் பதிந்து விட்டது.
அதிதியுடன் அவனுக்கு திருமணம் நடந்தபோதுகூட அவனுக்கு இந்த விசயம் தெரியாது, ஏனெனில் துளசி அத்தையின் புகைப்படம் எதுவும் அதிதி வீட்டில் இல்லை. அவளுக்கு பெற்றோர் இல்லை என்பது மட்டும் தெரியும்.
இங்கு வரும் முன் அம்மாவிடம் சில விசயங்களை கேட்டான். ‘யார் இந்த அதிதி? அவளை ஏன் எனக்கு கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்தீர்கள்?. நான் சரி செய்ய வேண்டிய விசயம் இருக்கிறது என்று அப்பா எதை சொன்னார்?’
அதற்கு அம்மா சொன்ன பதில் பாதி உண்மையைதான் சொன்னது.
அதாவது அதிதியின் அம்மா துளசி அவருடைய உயிர் தோழி.. அவர் இறந்து போகும் முன் அதிதியை நன்றாக பார்த்துக் கொள்வதாக வாக்கு தந்திருந்தாராம். அவளுடைய தாத்தா கவனித்துக் கொண்டதால் இதுவரை அதிதி பற்றி கவலைபடவில்லையாம். அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால் கொடுத்த வாக்கை காப்பாற்றும் பொருட்டு மருமகளாக்கிக் கொண்டதாக சொன்னார்.
அத்துடன் நில்லாமல் துளசியும் அவரும் இருந்த சிறு வயது புகைபடத்தை காட்டினார். அதில் இருந்த துளசி அத்தையின் முகம் அதிதியை நினைவூட்டியது. சிறு வயதில் அவரை சந்தித்த நினைவும் வந்தது. அந்த நட்பின் ஆழத்தை அதிரதனும் புரிந்து கொண்டு அன்னையின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
ஓகே… ரைட்… அன்னையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தாதிபட்டிக்கும் வந்து விட்டான். இங்கே
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Ha ha athi nala samalicha...
Adhi awesome
First epi la vara lawyer vs Rathan and AA thee thee oda scene was superb
Dr sema lucky thaan aa thee thee pole ponnu kedika mattum ala post wedding ivalo periya vacation chance kedika
Enakku enamo epi 5 la vandha indha last scene vs thulasi aunty oda fb scene which has been misunderstood by athithi's family might have some connection ah nu thonnudhunga
BTW ninga indha athame-kalai vachiye oru imaginary full length story eluthi engalai entertain seyalam pola
Okay let us move to kadu pagudhi weapons ellam reay...indha trip ku route potukudutha appa kum lawyer kum oru "o" podunga