(Reading time: 13 - 25 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

ஆரம்பிக்க, அதிரதன் பாய்ந்து அவளுடைய வாயை பொத்தினான்.

“கத்தாதே அதிதி… நான்தான் அதிரதன்” என்றான். வேறு யாரோ அறைக்குள் இருப்பதாக நினைத்து அவள் கத்துகிறாள் என்று நினைத்து அவண் விளக்கம் சொன்னான்.

அவனுடைய கையை பிடித்து தள்ளிய அதிதி ரொம்பவும் வேகமக எழுந்து அமர்ந்தாள்.

“அதிரதன்னா…  பெரிய இவரா… என்னோட ரூம்க்குள்ள வர்ற கேட் பாஸ் தந்திருக்கேனா? நீங்கதானு விளக்கம் வேற தர்றீங்க… எனக்கு கண்ணு தெரியாதுன்னு நினைச்சீங்களா? இந்த துள்ளுகிற ஹேர்கட்… சீரான முக அமைப்பு… கூரான மூக்கு… இருட்டுலேயும் அது நீங்கதான் தெரிஞ்சிட்டது. கொஞ்சம் தயக்கமில்லாமல் முகம் பார்த்து பேசினால் இங்கே வந்துடுவீங்களா? ”

இவள் அவனை திட்டுகிறாளா… புகழ்கிறாளா?

உண்மையில் அவன் நினைத்தது என்னவென்றால்… அதிதியும் அந்த உருவத்தை பார்த்து பயந்திருக்கலாம். எனவே அவளை சமாதானப்படுத்தும் விதமாக அவ்வாறு கூறினான். அதற்கு எவ்வளவு ரியாக்ஸன் தருகிறாள்! அவன் திகைக்க,

“அறைக்குள் அனுமதி இல்லாமல் வருவது தப்பில்லையா?”

'எக்ஸ்யூஸ் மீ! மே ஐ கமின்! ' அப்படின்னு கேட்டுட்டு வர்ற நிலையிலா அவன் இருந்தான். அவனை குற்றவாளிபோல கேள்வி கேட்கிறாளே?

“நீதான் தூங்கிட்டு இருந்தியே. அனுமதி எப்படி கேட்பது?”

“ நான் அதை கேட்கவில்லை. தனியாக படுத்திருக்கும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண் அருகில் எதுக்கு வந்தீங்க?”

ஓஹோ… விசாரணை அப்படி போகுதா? அதிதிக்கு ஏதோ ஆபத்து என்று அவன் நினைத்து செயல்பட… அவள் அவனை எப்படி நினைத்திருக்கிறாள்? சுருசுருவென கோபம் வந்தது.

“எதுக்கு வந்தீ…..தீங்க?” அவள் குரலை உயர்த்தினாள்.

“ஸ்டாப் இட்… ரப்பிஷா பேசாதே….”

“ஹாங்… குப்பை மாதிரி பேசறேனா. எதுக்காக வந்தீங்கன்னு என்னால் ஊகிக்க முடியாதா என்ன?”

“ஸ்டுப்பிட்… உன்னோட கற்பனையை இத்தோட நிறுத்தும்மா!. நான் எதுக்கு வந்தேன்னா…” அவளிடம் என்னவென்று விளக்குவான்?  ஒன்றுமே இல்லாமல்போன ஒரு விசயத்தை என்னவென்று சொல்வான்?

அவள் பதிலுக்காக காத்திருக்க,

“காட்டுக்கு போறோமே சாப்பிட எதுவும் கிடைக்குமா? அப்படி கிடைக்கலேன்னா கடிச்சு திங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.