(Reading time: 13 - 25 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

சற்று  நேரத்தில் அவனுக்கு விழிப்பு தட்டியது.  அதே எச்சரிக்கை உணர்வு! அசையாமல் கண்களை மட்டும் பாதி திறந்து அதிதியின் அறையை பார்த்தான்.

மை காட்! முந்திய நாள் அவன் பார்த்தது போலவே ஒரு புகை உருவம் அதிதியின் தலைமாட்டில் அமர்ந்திருந்தது. மெல்ல கண்களை மூடி திறந்து மீண்டும் பார்த்தான். அந்த உருவம் தெளிவில்லாமல் தெரிந்தது.

அவன் படக்கென்று எழுந்தான். ஓ.. ஹோவ்.. அதை காணவில்லை. ம்ஹூம் இனி விடக் கூடாது! டெய்லி வந்து வந்து பயமுறுத்துகிறது. அது என்னவென்று பார்த்துவிட வேண்டுமென்று துள்ளி எழுந்தான்.

அதிதியின் அறைக்கு வெளியே நின்று எட்டி பார்த்தான். ஒன்றும் கண்ணிற்கு தெரியவில்லை! அவன் அறைக்குள்  நுழைந்து ஆராய ஆரம்பித்தான்.

ஆவியாவது மண்ணாவது. அது ஏதோ ஒரு உருவம்! அருகில் சென்று பார்த்தால் ஒருவேளை அதற்கு அறிவியல் விளக்கம் கிடைக்கலாம். ஆனால் அந்த அறைக்குள் எதுவுமே இல்லையே?

அறைக்குள் ஏதாவது லாஃப்ட் இருக்கிறதா… இல்லை…!

ஏதாவது டேபிள் பின் ஒளிந்திருக்கிறதா… இல்லை..!

அறையின் மூலையில் புகைபோல இருளில் பொதிந்திருக்கிறதா… இல்லை!

ஓருவேளை கட்டில் அடியில்?

கரெக்ட்… நொடியில் அந்த உருவம் தன்னை மறைத்துக் கொள்ளக் கூடிய இடம் அதுதான். அவன் அதிதி உறங்கிக் கொண்டிருந்த கட்டிலின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான். குனிந்து கட்டிலின் அடியில் பார்த்தான்.

ப்ச்… அங்கே சில பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதற்குபின் ஒளிந்திருக்குமோ? அவன் மண்டியிட்டவாறே நகர்ந்தான்…

கட்டில் அடியில் இருந்த பெட்டிகளை கூர்ந்து பார்த்தான். அவன் கவனிக்கத் தவறிய விசயம் என்னவென்றால்…

கட்டில் ஓரத்தின் தலை சரிந்து உறங்கிய அதிதியின் முகத்தின் அருகில் அவன் நெருங்கியதுதான். அதாவது கட்டிலின் அடியில் ஆராய்ந்து கொண்டே நிமிர்ந்தவனின் தலை சரியாக அதிதியின் முகத்திற்கு அருகில் இருந்தது.

தான் இருக்கும் நிலையை உணர்ந்து சுதாரிக்கும் முன்… கண் விழித்த அதிதி அவனை பார்த்து விட்டாள்.

“ஓஓஓஓஓஓ… ஊஊஊ..” என்று விதமான உயிர் எழுத்துக்களை உச்சரித்து அவள் அலற

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.