(Reading time: 13 - 25 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

வந்தால்தான் மீதி கதை தெரிகிறது. துளசி அத்தையின் சோகமான முடிவை அவனுக்கு ஏன் அம்மா சொல்லவில்லை என்று யோசித்தான். ஒருவேளை சினேகிதியை பற்றி அவதூறு பேச விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

அது சரி… அதிதி சொன்ன கதையின்படி துளசி அத்தையின் இறப்பு சட்டென சம்பவித்திருக்கிறது. அந்த இடைபட்ட வேளையில் அம்மாவிடம் எப்படி அதிதியை காக்கும்படி சத்தியம் வாங்கியிருப்பார்கள். மோர் ஓவர்… அதிதியின் அக்காவைபற்றி துளசி அத்தை சத்தியம் கேட்கவில்லையா? ஏதோ குழப்பம் உள்ளதே!

இந்த கதையில் அவனுக்கு என்னதான் பொறுப்பு…? அதிதியை காத்து ரட்சிக்கும் கணவன் ரோலா? அப்படி ஒன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய அபலைபோல அவள் இல்லையே? கொஞ்சம் சான்ஸ் கிடைத்தாலும் அவனை வாரி விடுவதில் திறமையாக இருக்கிறாள். நாட்டை கைபற்ற வந்த எதிரியை பார்ப்பதுபோல பார்க்கிறாள். ‘அதிரதனே வெளியேறு’ என்று கோஷம் போடாத குறைதான்.

இவளை கன்வின்ஸ் செய்து வாழ்வாங்கு வாழ்ந்தால் அவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகூட தரப்படலாம.  இத்தனையையும் நினைத்துக் கொண்டு அவன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.   

விடிந்து சில மணி  நேரம் ஆகியும் அவனால் கண் விழிக்க முடியவில்லை. இரவு தூக்கம் இன்றி நெடு நேரம் விழித்திருந்ததன் விளைவு! எழ விருப்பம் இல்லாமல் குழந்தைபோல உறங்க அடம் பிடித்த மனதை ஒரு மாதிரி சமாளித்து எழுந்தான்.

அதிதி சமயலறையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த சப்தம் கேட்டது. காலை டிபன் ரெடியாகிறதுபோல! தாளிக்கும் ஓசையும் வாசமும் காதுக்கும் மூக்கிற்கும் வேலை வைக்க அவன் குளித்து தயாரானான்.

“என்ன டிபன் அதிதி?” என்று கேட்டபடி சமையலறையினுள் எட்டி பார்த்தான்.

“எழுந்திட்டீங்களா?” என்று அவனை திரும்பி பார்த்த அதிதி, “குளிச்சிட்டீங்க போல. காபி குடிக்கவில்லையா?”

“அதெல்லாம் கட்டாயம் தேவை என்று இல்லை”

“அப்ப நேரா டிபன் சாப்பிட்றலாம். “

“ஆவ்… இதென்ன அதிதி. சாப்பிட்டு தூங்கி… கொஞ்சம்போல பேசி… பெரிய சோதனையாக இருக்கு. போரடிக்குது. பேசாமல் விவாகரத்து வேண்டாம்னு சொல்லிடலாமா?”

“இரண்டாம் நாளேவா? சம்பத் அண்ணா வந்திடுவார். அவர் உங்களுக்கு பேச்சு துணைக்கு இருப்பார். ஊரை பற்றி புதிதாக  நிறைய தெரிஞ்சிக்கலாம்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.