(Reading time: 10 - 19 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“தளபதி , நிலவரம் என்ன?”

தலையைக் குனிந்தபடி “மகராஜ், நாம் எண்ணாத அளவில் இருந்த படைப் பலத்தால் நம்மால் தாக்கு பிடிக்க இயலவில்லை. இயன்ற வரைப் போராடினோம். இறுதிக் கட்டத்தில் தளபதி பிரிதிவிராஜ் எங்களைப் பின் வாங்கச் சொல்லித் தங்களோடு இணைந்துக் கொள்ளச் சொன்னார்.” என்றார்.

“எதிர்பார்த்தது தான். ப்ரித்விராஜ் எங்கே?”

அத்தனைப் பேரும் மௌனம் சாதிக்க, மீண்டும் வினவினார்.

“போரில் அக்பரின் தளபதி அப்துல் ரஹீமால் கொல்லப் பட்டு விட்டார். “

கேட்ட நொடி ராணாவின்  கண்கள் கலங்க, மேலும் கூறினர் வீரர்கள்.

“தங்கள் சகோதரர் மான் சிங்கை தாங்கள் என்று எண்ணிக் கொன்று விட்டனர்” என்றும் கூற, ராணாவின் மனம் அதிக வேதனைக்குள்ளானது.

“பவானித் தாயே. என் ஒருவனின் பொருட்டு எத்தனை இழப்புகள்? ஏன் எங்களைச் சோதனை செய்கிறாய்? எங்கள் உரிமைக்காக நாங்கள் போராடுவது தவறா? அடுத்தவனின் இடத்தை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லையே? எங்கள் பூமி தானே இது? இன்னும் எத்தனைக் காலம் இந்தச் சோதனைகளை நாங்கள் தாங்க வேண்டும்? எப்போது எங்களுக்கு விடிவு பிறக்கும்? “ என்று சத்தமாக பேசினார்.

அவரின் பேச்சைக் கேட்ட அத்தனை வீரர்களின் உணர்வுகளும் பொங்கியது. ஆனால் தற்போதைய நிலைமை எண்ணித் தங்களைக் கட்டுப் படுத்திக் கொண்டனர்.

ராணா தன் வீரர்களில் ஒருவனிடம்

“சேட்டக்கை அடக்கம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்” என்றார். தயார் செய்ததும் தன் நண்பன் போல் இருந்த அந்தப் புரவியை தகுந்த முறையில் அடக்கம் செய்து, அதன் நினைவாக சிறு தூண் ஒன்றும் நிர்மாணம் செய்தார் ராணா.

அதே போல் ப்ரித்வி, மான் சிங் இருவரின் சடலத்திற்கும் இறுதி மரியாதை செய்தார்.

மான் சிங் வாள் மற்றும் உடைகளை அவரின் அஸ்தியோடு அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வீரர்களை அனுப்பினார்.

அதே போல் ப்ரித்வியின் வாள், அவனின் உடமைகளோடு அஸ்தியையும் சேர்த்து எடுத்துக் கொண்டு பிகானர் நோக்கிப் புறப்பட்டார் ராணா.

ப்ரித்வியின் முடிவைக் அவன்  குடும்பத்தாரிடம் சேர்ப்பிப்பது மட்டுமில்லாமல், தன் ஆசை மகளான கிரண் தேவியிடம் எடுத்துச் சொல்லி ஆறுதல் அளிக்கும் கடமையும் அவருக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.