(Reading time: 10 - 19 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

கொண்டு பதேபூர் சிக்கிரி சென்று அடைந்த சற்று நேரத்தில், அவரின் தனி அறைக் கதவு தட்டப்பட்டது.

கோபம் கலந்தக் குரலில்,

“யார் ? “எனக் கேட்டார்.

“பஹீர் “ எனப் பதில் வர, உள்ளே வர அனுமதித்தார்.

“வணங்குகிறேன் மன்னரே” என்றுக் கூற, அமைதியாக அவரை ஆசனத்தில் அமரச் செய்தார்.

ஆனால் அக்பரின் மனமோ கிரண் தேவியின் மரணத்திலே உழன்றுக் கொண்டு இருந்தது. சற்று நேரம் பொறுத்த பஹீர், தன் தொண்டையைக் கணைத்தார்,

அந்தச் சத்தத்தில் திரும்பிய அக்பரிடம்,

“போரில் வெற்றி நம்மப் பக்கம் தான் அரசே. ரானா தன் படைகளோடு பின் வாங்கி விட்டார். நம் தளபதியின் கட்டளைப் படி போரிட்ட ஒவ்வொருவரையும் முற்றிலும் அழித்தோம். ஆனால் ராணாவை நெருங்க முடியவில்லை” என்றுக் கூறி முடிக்க,

“எதிர்பார்த்தேன், ராணா அத்தனைச் சீக்கிரம் பிடிபட்டுவிடுவாரோ? “ என்றுக் கேட்டு இடியெனச் சிரித்தார்.

பின் “அப்துல் ரஹீம் எங்கே?” என்று வினவ, பஹீர் தலைக் குனிந்துக் கொண்டார்.

“அப்துல் ப்ரித்வியால் வீழத்தபட்டார்” என்றுக் கூற, அப்படியே திகைத்து நின்றார்.

“மேலும் நம் ஜோதா ராணியின் தந்தை மான் சிங் தன் தமையன் போல் வேடமணிந்து வந்து, ரானாவிற்குப் பதிலாக இறந்து விட்டார்” என்றும் கூறவும், அக்பரின் திகைப்பிற்கு அளவில்லாமல் போயிற்று.

“எப்படி மான் சிங் நமக்கு எதிரியானார்?”

“அவர் சிலக் காலமாகவே நம்மோடு இணக்கமாக இல்லை. ஜோதா ராணிக்காக மட்டுமே நம் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். இந்த முறை தாங்கள் போரை அப்துலை நடத்தச் சொன்னதில், அவர் மன வருத்தம் கொண்டு இருந்தார். தன் சகோதரனைப் போரில் கண்டதும், அவரின் மேல் பாசம் பெருகி, ரானாவிற்குப் பதிலாக போர்க்களத்தில் உயிர் துறந்தான்” என்றுக் கூறவும்,

“ஹ்ம்ம். துணிச்சல் மிக்கவர்கள் இந்த தேசத்தவர்கள். ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் மிகவும் துணிச்சலானவர்கள். இவர்களை ஒன்று சேர முடியாமல் வைக்கும் வரைக்குமே இனிமேல் இங்கே நம் ஆட்சித் தொடர முடியும். இல்லையேல் நாம் வந்த வழியேப் போக வேண்டும்” என்றுக் கூறி அடுத்தடுத்தத் திட்டங்களைத் தீட்டினர.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.