(Reading time: 8 - 15 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 28 - ஜெய்

காலையில் மதி வீட்டில் அனைவரும் குழும தங்கள் கைகளில் இருந்த டாகுமென்ட்கள் மற்றும் காணொளி காட்சிகளை மதியிடம் ஒப்படைத்தனர்... மதி அவை அனைத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்பில் வருமாறு அடுக்கி, காணொளி காட்சியையும் அனைவரும் பெரிய திரையில் காணுமாறு ஆயத்தம் செய்தான்..  சிறிது நேரத்தில் வக்கீல் சந்திரனும் வந்து இணைந்து கொண்டார்....

“எல்லாரும் வந்தாச்சு இல்லையா.... இப்போ ஆரம்பிக்கலாமா.... தனித் தனி வழக்கா ஆரம்பிச்சு இப்போ எல்லா வழக்கும் வந்து நிக்கற ஒரே இடம் மருத்துவக் கல்லூரியும் அதன் தாளாளரிடமும்..... திரு. நரேந்திரன்....  இவரோட லிங்க் பெரிய அளவுல இருக்கு.... அதுவும் நாடு தாண்டி... அதே மாதிரி இவரை பிடிப்பதும் அத்தனை சுலபமான காரியமா இருக்கப் போவதில்லை.... இவரை சுற்றி பெரிய பாதுகாப்பு வளையமே இருக்கு.... கட்சி மேலிடத்திலிருந்து வெளிநாட்டு தொழிலதிபர்கள் வரை.... இது அத்தனையும் தாண்டி அவனை நெருங்கணும்.... அவனை மட்டும் இல்லாம அத்தனை பேரையும் ஒரே சமயத்துல தூக்கணும்...”

“ஹ்ம்ம் ஆமாம் மதி சார்... தமிழ்நாடை பொறுத்த வரை பிரச்சனை இல்லை... இந்திய அளவுல கூட ஓரளவு பண்ணிடலாம்... மற்ற நாடுகள்தான் இப்போ பிரச்சனை... எந்த அளவு அவங்க ஒத்துழைப்பு இருக்குன்னு பார்க்கணும்...”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு கான்ஸ்டபிள் வந்து மதியிடம் ஏதோ ஒரு காகிதத்தை கொடுத்துவிட்டு சென்றார்...

“என்ன பேப்பர் சார் அது....”, சந்திரன் கேட்க மதி அவரிடம் அதை தந்தார்...

மற்றவர்களும் அது என்ன என்பது போல் பார்க்க...

“மணி மற்றும் அந்த தற்கொலை பண்ணின பொண்ணோட ஒரிஜினல் மெடிக்கல் ரிப்போர்ட்....”

“ஓ சூப்பர்.... வந்துடுச்சா... என்ன வந்திருக்கு சீனியர்....”, பாரதி கேட்க

“முழுப் பூசணியை சோத்துல மறைச்சிருக்காங்க பாரதி... மணியோட பின் தலைல பட்ட அடியாலதான் மரணம் நிகழ்ந்திருக்குன்னு ஒரிஜினல் ரிப்போர்ட் சொல்லுது... அதை எப்படி தற்கொலையா மாத்தி இருக்காங்க பாரு....”

“ஓ அது எப்படி அவன் தலைல அடிப்பட்டதை யாரும் கவனிக்கலை சீனியர் சார்....”

“பின் தலை அப்படிங்கறதால டக்குன்னு தெரிஞ்சிருக்காது சாரங்கா... போஸ்ட்மார்ட்டம் முடிஞ்ச பிறகுதான் அவங்க பெற்றோர் அவனோட உடலை பார்த்திருக்காங்க... அப்போ தலை முழுக்க கட்டு போட்டு வச்சிருந்ததால அவங்களுக்கு அதன் பிறகும் விஷயம் தெரிய வாய்ப்பில்லாம போயிருக்கும்....”

“ஹ்ம்ம் அப்படித்தான் இருக்கணும் சீனியர்... அவன் சிறைக்குள்ள போகும்போது எந்த விதமான

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.