(Reading time: 8 - 15 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

காயங்களும் இல்லைன்னு குறிப்பு சொல்லுது... ஸோ சிறைக்குள்ளதான் ஏதோ நடந்திருக்கு.... வேற ஏதாவது அந்த ரிப்போர்ட்ல இருக்குதா...”

“உடம்புல சில இடங்கள்ல காயம் இருக்கறதா குறிப்பு இருக்கு... அப்பறம் வலது கைல எலும்பு முறிவு இருந்து இருக்கு....”

“ச்சே எத்தனை விஷயத்தை மறைச்சிருக்காங்க.... அவனை அடிச்சு குற்றத்தை ஒத்துக்கொள்ள வைக்க முயற்சி பண்ணி இருக்காங்கன்னு நினைக்கிறேன்... மதி சார் அங்க அவன் இறந்த நேரத்துல என்ன நடந்ததுன்னு உண்மை தெரிய யாரையாவது பிடிக்க முடியுமா....”

“அந்த நேரத்துல அங்க இன்பெக்டர், ரெண்டு கான்ஸ்டபிள்ஸ்தான் இருந்து இருக்காங்க.... அவங்கதான் அந்த போலி ரிப்போர்ட் வாங்கினது... ஸோ அவங்கக்கிட்ட உண்மை வாங்கறது கஷ்டம்தான்...”

“சந்தோஷ்  நீங்க  மணி விஷயத்துல வேற ஏதோ மர்மம் இருக்கறதா சந்தேகப்படீங்க இல்லை... அதுவும் என்னன்னு பார்க்கணும்...”

“மதி சார் அந்த கான்ஸ்டபிள்ல யாரானும் ஒருத்தரை நம்ம பக்கம் இழுக்க முடியுமா?”

“ஹ்ம்ம் அதுல ரெண்டு பேருல ஒருத்தர் பதினைந்து நாள் லீவ்ல இருக்கார்... சபரி மலைக்கு போறார் போல.... நாளைக்கு காலைல கிளம்பறார்....”

“சூப்பர் சார்... அவரோட அட்ரஸ் கொடுங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல   அவரை நம்ம கஸ்டடிக்கு கொண்டு வந்துடலாம்...”

“இல்லை சந்தோஷ் நீங்க போக வேண்டாம்... நான் அவரை வேற ஒருத்தர் மூலமா இங்க வரவைக்கிறேன்... நாம மத்த விஷயங்கள் பேசி முடிச்சுடலாம்...”

மதி அந்த வேலையை முடிக்க அதற்குள் சந்திரன் தற்கொலை செய்த பெண்ணின் அறிக்கையை படிக்க ஆரம்பித்திருந்தார்...

“என்ன சீனியர் இதுல என்ன குண்டு வச்சிருக்காங்க...”

“சந்தியா உங்கிட்ட அந்த பையன் முதல்ல மயக்க மருந்து கொடுத்த பிறகுதான் கை நரம்பை கட் பண்ணியதா சொன்னான் இல்லையா... அது உண்மைதான்... அவளோட ரத்தத்துல மயக்க மருந்து கலந்து இருந்த குறிப்பு இருக்கு.... மனசாட்சின்னு ஒண்ணு இல்லாம எப்படி எல்லாம் தகிடு தத்தம் பண்ணி இருக்காங்க... இதுக்கு எத்தனை பேர் துணை போய் இருக்காங்க.... நாம எடுத்த இந்த மூணு வழக்குலையே இத்தனை பொய், பித்தலாட்டம்... அவனுக்கு தாளம் போட்டு அரசாங்க ஊழியர்கள் தவறா வேலை செய்திருக்காங்க..... இதை போல இன்னும் எத்தனையோ குற்றச்சாட்டு அவன் மேல இருக்கு.... அதையெல்லாம் தோண்டினா மொத்த அரசாங்க ஊழியர்களையும் உள்ளதான் போடணும் போல....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.