(Reading time: 8 - 15 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“சந்திரன் சார் அங்கயும் மதி சார் மாதிரியும், உங்களை மாதிரியும் உண்மையா வேலை செய்யுறவங்க ஒரு இருவது சதவிகிதமானும் இருப்பாங்க... அதுனாலத்தான நமக்கு இந்த ஒரிஜினல் ரிப்போர்ட் கிடைச்சிருக்கு...”

“அதுவும் சரிதான்.... மணி வழக்கு, அந்த பொண்ணு தற்கொலை வழக்கு ரெண்டையும் டீல் பண்ணினது ஒரே இன்ஸ்பெக்டர்தானே மதி சார்.... ஆளு எப்படி...”

“ஆமாம் சந்தோஷ்... சாரங்கந்தான் அவரோட ஆத்மார்த்த நண்பன்.... அங்க கேளு.... மொத்த விஷயமும் வெளிய வரும்...”

“அந்தாள் பணக்காரங்களுக்குனே வேலை செய்யறவன் சந்தோஷ்... லஞ்சம் வாங்கினதா அவன மேல வழக்கு வேற இருந்தது.... அவனோட மாமா ஏதோ கட்சில இருந்ததால அதை அப்படியே அமுக்கிட்டான்... எல்லா கட்சி ஆட்களோடையும் சுமுகமா இருப்பான்... அவங்க பண்ற எந்த இல்லீகல் விஷயத்தையும் கண்டுக்கமாட்டான்... அவங்களும் அவங்க பண்ற வேலைக்கு தகுந்தா மாதிரி நல்ல முறைல கவனிச்சுடுவாங்க.... மொத்ததுல ராஜபோகமா வாழுறான்.....”

“என்ன மதி சார்... இந்த மாதிரி ஒருத்தனை எப்படி இன்னும் சஸ்பென்ஷன் பண்ணாம வச்சிருக்கீங்க...”

“எனக்கும் மேல இருக்குற இடத்துல இருந்து வர்ற பிரஷர் சந்தோஷ்... போதிய ஆதாரம் இல்லை... இந்த வழக்குல அவனையும் எப்படியாவது சிக்க வைக்கணும்ன்னுதான் காத்துட்டு இருக்கேன்....”

“சார் நீங்க கான்ஸ்டபிள தூக்க சொன்னதுக்கு பதிலா அந்த இன்ஸ்பெக்டரை தூக்க சொல்லி இருக்கலாம்... நரேந்திரன் பத்தி மொத்த விஷயமும் தெரிஞ்சிருக்கும்...”

“அவன் இங்க இல்லை சக்தி... கேஸ் விஷயமா மதுரை போய் இருக்கான்... நாளைக்குதான் வர்றான்... வந்தவுடனே பார்த்துக்கலாம்.... இப்போ அந்த கான்ஸ்டபிள் வர்றதுக்குள்ள நாம வீடியோஸ் பார்த்துடலாம்....”, மதி கூற அனைவரும் சக்தி எடுத்த காணொளியை பார்க்க ஆரம்பித்தார்கள்....

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த கான்ஸ்டபிளை மதி சொன்ன இடத்திற்கு அழைத்து வந்துவிட்டதாக தகவல் வர சாரங்கனுடன் அவரை சந்திக்க மதி கிளம்ப மற்றவர்களிடம் சக்தி லேபில் எடுத்த காணொளி பற்றி விளக்க ஆரம்பித்தான்....

“சார் என்ன சார் இது... எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க... கோவிலுக்கு போயிட்டு இருந்தவனை நம்ம இன்ஸ்பெக்டர் அவசரமா வர சொன்னார்ன்னு சொல்லிட்டு இங்க வந்து பார்த்தா யாரையும் காணும்.. போலீஸ்காரன்கிட்டே உங்க வேலையை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.