(Reading time: 5 - 9 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 02 - ரவை

ம், பரமசிவன், பெண் உருவில், மாம்பலம் சங்கரன் தெரு 18ஆம் எண், பழைய ஓட்டு வீட்டின் கதவை தட்டினார்.

 ஒரு முதியவர் தள்ளாடி நடந்துவந்து, கதவை திறந்தார்.

 " நமஸ்காரம், தாத்தா! சௌக்கியமா?"

 " யாரும்மா நீ? தெரியலையே!"

 " உள்ளே வந்து உட்கார்ந்து பேசலாமா?"

 முதியவர் நகர்ந்து வழிவிட்டதும், அவள் உள்ளே வந்து அமர்ந்தாள்.

 " நானும் உங்களை முதல் முறையாகத்தான் சந்திக்கிறேன், நீங்க மறையூர் விசுவநாதன்தானே? மறையூரிலே உங்க பக்கத்து வீட்டு நடராசனை ஞாபகம் இருக்கா? நான் அவர் பேத்தி!அவர்தான், என்னை கட்டாயமாக உங்களை பார்த்துவரும்படி சொன்னார்.........."

 " அப்படியா? ரொம்ப சந்ந்தோஷம்மா! நடராசன் எப்படிம்மா இருக்கான்? அவனும் நானும் ஒரே வயசு! ஒரே பள்ளிக்கூடத்திலே படிச்சோம். அதேபோல, அவன் பிள்ளையும் என் பிள்ளையும் ஒரே பள்ளியிலே படித்து சேர்ந்து வளர்ந்தவங்க! என் பிள்ளை காலேஜ் படிக்க, சென்னை வந்தபோது நானும் அவனுடன் வந்துவிட்டேன். இப்போ, என் பிள்ளைக்கு அமெரிக்காவிலே வேலை கிடைத்து அவன் அங்கேயே செட்டிலாயிட்டான். என் சம்சாரம் காலமாகி ஐந்து வருஷமாயிட்டது. இப்ப இந்த வீட்டிலே நான் மட்டும்தான் இருக்கேன், மேலே இருக்கிற அந்த பரமசிவன் எப்ப கூப்பிடுவான்னு காத்துண்டிருக்கேன்!"

 அந்தப் பெண் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

 " தாத்தா! சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?"

 " எனக்கு சமைக்கத் தெரியும், அதோட எனக்கென்ன ரெண்டு கூட்டு, சாம்பார், ரசமா தேவை? சாதம் வடித்து, ரெண்டு வேளையும், தயிர் கலந்து ஒரு பிடி சாப்பிடுவேன், அவ்வளவுதான்! அதுசரி, நீ நடராசனோட பிள்ளையின் மகளா?"

 "ஆமாம் தாத்தா! என் பேரு, வசந்தா! சென்னையிலே ஒரு வேலையா வந்திருக்கேன், ரெண்டு வாரம் இருப்பேன், உங்களுக்கு தொந்தரவா இல்லேன்னா, இங்கேயே உங்களோட தங்கட்டுமா?"

 " தாராளமா! இத்தனை பெரிய வீட்டிலே உனக்கில்லாத இடமா? சாப்பாட்டுக்கு என்ன செய்வே?"

 " இந்த ரெண்டு வாரம், நான் சமைத்து ரெண்டு பேரும் சாப்பிடுவோம். எனக்கு அந்த புண்ணியம் சேரட்டும்! ஆமாம், உங்க பிள்ளைக்கு கல்யாணமாயிடுத்தா?"

 "ஓ! கல்யாணமாகி குழந்தைகுட்டிகளோட அமெரிக்காவிலே சௌக்கியமா இருக்கான்...."

 " உங்களை வயதான காலத்திலே இங்கே தனியா விட்டுட்டு அவராலே எப்படி நிம்மதியா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.