(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 09 - ஆர்த்தி N

maraveno ninnai

வாரத்தின் முதல் நாள் ஆதலால் மிகவும் பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த நான்கு மாடி நவீன கட்டிடம். . எம்.ஆரில் இருக்கும் ஏராளமான ஐ.டி நிறுவன்ஙகளில் ரிஷியின் ஹை-டெக் ஐ.டி நெட்வெர்க் இந்த ஆறு வருடங்களில் அசூர வளர்ச்சியை அடைந்தது.  அவனது அறையில் மடிக்கணினியின் முன் தீவிரமான முகத்துடன் அமர்ந்திருந்தான்அப்போது அவனது கதவை ஆர்பாட்டமாக திறந்துக் கொண்டு அவனது உயிர் நண்பர்கள் மற்றும் இக்கம்பனியின் பங்குதாரர்களான வினய் மற்றும் வேந்தன் நுழைந்தனர்.

டேய் மச்சான் வி மேட் இட் டா..” என உற்சாகமாக வந்து அவனை இருவரும் கட்டிக் கொண்டனர். லேசான புன்னகையுடன் இருவரையும் அனைத்து விடுவித்தான்

ரிஷி என்னடா.. இவ்ளோ தான் உன் ரியாக்ஷனாஎன வேந்தன் ஏம்மாற்றமாக கூற.. அதற்கு ரிஷி ஏதோ கூற வருமுன்,

டேய் அவன பத்தி தெரியாதா.. இப்போவே சந்தோஷப்பட்டோம்னா இதோட த்ருப்தி ஆயிறுவோம்.. இன்னும் இன்னும் மேல போகமாட்டோம் நு ப்லேட்(blade nga) போட ஆரம்ச்சிருவான்.. சோ வந்த வேலைய பாருஎன வினய் சிரிப்புடன் முடித்தான்.

ஹேய் மச்சிஸ் அப்படி இல்ல டா.. இனி தான் நம்ம இன்னும் கேர்ஃபுல்லா வொர்க் செய்யனும்.. மார்க்கெட்டிங்க் டீம் கூட கோ-ஆப்பரேட் செஞ்சு முதல்ல க்ளைன்ட் கிட்ட இருந்து பிஸ்னெஸ் ரிக்கொயர்மென்ட்ஸ் வாங்கிட்டு நம்ம ஒரு டீம் ரெடி பண்ணனும்..” என அடுத்து என்ன செய்யவேண்டும் என மற்ற இருவருடன் கலந்தாலோசிக்க ஆரம்பித்தான்.

இது தான் ரிஷி.. வெற்றிக் களிப்பில் திளைக்காமல் எந்நேரமும் ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரகம்.. அதனால் தான் அவனால் இவ்வளவு உயரத்தை இச்சிறு வயதில் அடைய முடிந்தது.

பின் அம்மூவரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று விவாதித்து  தத்தமது வேலைகளில் மூழ்கினர். மதியம்வரை இப்புதிய ப்ராஜெக்ட்டில் தங்களை தொலைத்திருந்தவர்கள் நெட்டி முறித்துக் கொண்டு லன்ச்சிற்கு வெளியில் செல்லலாம் என முடிவெடுக்க, “டேய் நீங்க ரெண்டுப் பேறும் முன்னாடிப் போங்க நா பின்னாடி வந்து ஜாயின் பண்ணிக்கறேன்என அவர்கள் இருவரையும் முன்னே அனுப்பி வைத்தான்.

அப்போழுது அவனது கேபின் கதவை யாரோ தட்டவும், “யெஸ், கம் இன்என உள்ளே அழைக்க.. உள்ளே வந்தவளைப் பார்த்து இமைக்கவும் மறந்து பார்த்தது பார்த்தபடியே இருந்தான்.

ஹலோ சார், ஐயம் ப்ரியா ஃப்ரம் *****xxxxxxx****** ஸ்கூல், டூ டேஸ் பேக் உங்களுக்கு மேய்ல் பண்ணியிருந்தேனே ரிகார்டிங்க் டொனேஷன்..” என அவள் கோடிட்டு காமிக்க..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.