நினைக்க.. அதற்குள் அவனது செல்ஃபோன் அலற.. அதில் வினய் அதற்கு மேல் அலற.. ‘ஐய்யோ இவனுங்களை மறந்துட்டேனே..’ என அவனது நண்பர்களை தேடி விரைந்தான்..
‘வெரி குட் ஷைலாரண்யா அன்ட் ப்ரியா.. எனக்கும் இந்த ஐடியாப் பிடிச்சிற்கு.. கொடேஷன் ரெடி பண்ணிட்டு ப்ரொசீட் பண்ணலாம்.. ரிஷி சார்க்கு இன்ஃபார்ம் செஞ்சிருங்க..” என தனது மூக்கு கண்ணாடியை சரி செய்துக் கொண்டே உறைத்தார் அப்பள்ளி ப்ரின்சிபாலான நித்யா.
ஷைலுவும் ப்ரியாவும் தலையசைத்து அவரிடம் விடைப்பெற்று வெளியே வந்தனர்.. ஷைலு வேலை செய்யும் இப்பள்ளி.. அரசுப் பள்ளியும் அல்ல.. தனியார் பள்ளியும் அல்ல.. கவர்ன்மென்ட் எயிடெட் என்பார்கள் அல்லவா.. அது மாதிரியானப் பள்ளி.. அங்கு படிக்கும் பிள்ளைகள் நடுத்தர அல்லது அதற்கும் கீழே இருக்கும் குடும்பங்களிலிருந்து வருவோர் ஆவர். அரசு சலுகைகள் தந்தாலும் போதிய அளவு தரத்துடன் இல்லாமல் இருக்க.. இப்பள்ளி ப்ரின்சிபாலான நித்யா மேம் தனது முயற்சியால், அல்லது தனது ஸ்டஃப்ஸின் முயற்சியால் பள்ளிக்கு நன்கொடை ஈட்டுவர்.. அதுப் போல படிப்பின் தரமும் மற்றும் கற்பிக்கும் தரமும் குறையாதவாறு மிக கவனமுடன் பார்த்துக் கொள்வார்..
“ரொம்ப தேங்க்ஸ் ஷைலு நான் கூப்பிட்ட உடன் வந்ததுக்கு.. அவரு அந்த ரிஷி கொஞ்சம் முசுடு’நு என் அண்ணன் சொன்னான்.. லைட்டா பயம்மா இருந்திச்சு.. அதான் உன்ன அழைச்சேன்.. வந்து சூப்பர் ஐடியா வேறக் கொடுத்து கலக்கிட்ட.. ஆனா அவரு அண்ணா சொன்ன மாதிரி இல்லாம நல்ல ஸ்வீட்டா பேசினார்’ல” என ப்ரியா கூற..
ப்ரியாவின் அண்ணன் ரிஷியின் கம்பனியில் அக்கௌன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட்டில் வேலை செய்ய.. அவனது ரெஃபரென்ஸில் தான் நன்கொடை குறித்து இவர்கள் ரிஷியை அனுகியது..
“ஹேய் கம்மான் ப்ரியா.. இட்ஸ் ஒகே.. இது குறிச்சு என்ன ஹெல்ப்னாலும் யூ கேன் அப்ரோச் மீ..” என கள்ளப் புன்னகையுடன் ஷைலு கூறி ப்ரியா கூறிய கடைசிப்பாகத்தை காற்றில் பறக்கவிட்டாள்.. அவளது கள்ளத்தனம் தெரியாமல். மீண்டும் ஒரு முறை நன்றி உறைத்து ப்ரியா விடைப்பெற்றாள்.
மதியம் ப்ரியா அழைத்தப் பொழுது.. மிகவும் பிகு செய்யாமல் அவளுடன் சென்றாள்.. கதவைத் தட்டி விட்டு இவர்கள் காத்திருந்தப் பொழுது ஒரு கம்பீர குறல் உள்ளே அழைக்க.. உள்ளே சென்று பார்த்தால் அந்த பைக் பார்ட்டி.. ஷைலுவுக்கு குப்பென்று ஆனது.. அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை அவனை திரும்பி பார்ப்பாள் என.. இருந்தும் வந்த வேலை கருத்தில் கொண்டு முகத்தில் எதையும் காட்டாமல் கவனமாக இருந்தாள்..
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து அம்மா அப்பா இருவருடன் டைம் ஸ்பென்ட் பண்ணிவிட்டு தன் அறை வந்தவள்.. மீண்டும் ஒரு முறை அவனை இன்று சந்தித்ததை மனதில் ஓட்டிப் பார்த்து..அவளிடம் அவன் தந்த விசிட்டிங்க் கார்டை எடுத்து.. அதிலிருந்த அவனது பெயரை வருடி ‘ரிஷி வந்தியத்’ என மெல்ல உச்சரித்துப் பார்த்தாள்!!!!!!!!!
தொடரும்
Go to Maravenaa ninnai story main page
Next episode will be published as soon as the writer shares her next episode.
{kunena_discuss:1161}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.