(Reading time: 16 - 32 minutes)
Kaarigai
Kaarigai

தொடர்கதை - காரிகை - 18 - அமுதினி

"ங்க பாரும்மா...அஞ்சு பொட்டபுள்ளைங்களை வெச்சுட்டு வீட்டு வேலை பார்த்து எப்போ கரை சேர்க்க போற சொல்லு...நான் சொல்றதை கேளு...பெரியவளை என் கூட அனுப்பி வையி. மெட்ராஸ்ல பெரிய பெரிய பணக்காரங்க வீட்ல வேலைக்கு ஆளு அனுப்பறது தான் என் சோலி...நல்ல காசு வரும். சாப்பாடு, வருஷத்துக்கு ரெண்டு தரம் புது துணி எல்லாம் தருவாங்க. சம்பள பணத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பலாம். ஒரு ரெண்டு வருஷம் வேலை செஞ்சா எல்லாருக்கும் ஒரு வழி பண்ணலாம். இப்போ என்ன உன் பொண்ணுக்கு பதினெட்டு வயசு தான ஆகுது. ரெண்டு வருஷம் முடிஞ்சு வந்தா அழகா கல்யாணம் பண்ணி அனுப்பப்போற. இங்க உன் கூட இருந்து அஞ்சுக்கும் பத்துக்கும் கூலி வேலை செஞ்சா என்ன பிரயோஜனம்..." நல்ல மைனர் போல சிலுசிலு சட்டையும் பேண்டும் கழுத்தில் தங்க செயினும் மின்ன சொன்ன அந்த ஆளிடம் என்ன சொல்வது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்த அம்மாவிடம் லட்சுமியே சொன்னாள்.

"அம்மா நான் அந்த சார் கூட போறேனம்மா. இங்க செய்ற வேலையே தான...ஆனா பணம் கூட கிடைக்கும்ல..." லட்சுமி சொல்லவும், நண்டு சிண்டுகளாக இருக்கும் மற்ற பெண்பிள்ளைகளை பார்த்த அவள் அம்மா, இரண்டு மனதாக சரி என்றார்.

ஒரு சிறிய பையில் அவளுக்கு வேண்டிய உடைகளை மட்டும் எடுத்து கொண்டு அந்த ஆள் வந்த காரில் ஏறி கிளம்பினாள் லட்சுமி. அந்த ஊரின் வறண்ட மண்ணில் புழுதியை கிளப்பி கொண்டு பறந்தது அந்த கார்.

"பாப்பா பயப்படாத. நம்ம இந்த கார்ல பக்கத்து ஊருக்கு போயி அங்க இருந்து ட்ரெயின்ல மெட்ராஸ் போயிடுவோம். நான் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைச்சா நல்ல காசு கிடைக்கும்" காவி நிறமேறிய அவன் பற்களை காட்டி சிரிக்கையில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது லக்ஷ்மிக்கு.

செல்லும் வழியில் காரை நிறுத்த சொல்லி அவளுக்கு இரவு உணவு வாங்கி கொடுத்தான். சிறிது நேரத்தில் அவளுக்கு உறக்கம் வரவே அப்படியே அந்த காரின் இருக்கையில் சாய்ந்து உறங்கியும் போனாள்.

குப்பென ஏதோ ஒரு நாற்றம் அவளின் நாசியை துளைத்தது. யாரோ பேசும் குரல் ஆனால் என்ன பேசுகிறார்கள் என புரியவில்லை லக்ஷ்மிக்கு.

அம்மா எங்கே போனார்கள், தங்கைகள் குரல் போல இல்லையே...ஏதேதோ யோசனையுடன் கண்களை திறக்க முயன்றாள். சில நிமிட முயற்சிகளுக்கு பின் மெல்ல கண்களை திறந்தாள். அந்த இடத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தது. அந்த அறையின் மூலையில் பெண்களுக்கான உடைகள் சிதறிக்கிடந்தது. அந்த சிறிய அறையை அங்கிருந்த ஒரு உடைந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.