(Reading time: 16 - 32 minutes)
Kaarigai
Kaarigai

ஐயோ கடவுளே நான் எப்படி தப்பித்து போவேன்....அந்த அறையின் கதவு அடைத்திருந்தது. சிறிது நேரத்தில் அதே பெண் உணவோடு உள்ளே நுழைந்தாள்.

அவளை பார்க்கவே பிடிக்கவில்லை லக்ஷ்மிக்கு. லக்ஷ்மியின் பார்வையில் அவளும் அதை உணர்ந்து கொண்டாள்.

"இந்தா சாப்டு..." அவள் முன் அந்த தட்டை வைத்தவள் அவள் சாப்பிடாமல் அந்த புறமாக திரும்பி நிற்பதை பார்த்து அவளின் தோள் மேல் கையை வைத்தாள்.

"லட்சுமி இங்க யாரும் ஆசைப்பட்டு வரல. என்னை என் புருஷனே கொண்டு வந்து வித்துட்டு போயிட்டான்.குடிக்க காசு இல்லைனு...பத்து வருஷம் ஆயிடுச்சு. உடம்போட மனசும் ரணம் ஆயிடுச்சு. தப்பிச்சு போகணும்னு நெனைச்சு ஓடி இதோ பாரு" என தன் கணுக்கா  காண்பித்தாள்.

வரி வரியாக சூடு வைத்த அடையாளங்கள்.

"இது தான் மிச்சம். நீயும் ஓடி போக நினைக்காத. உன்னால அது முடியவும் முடியாது. நம்மை எல்லாம் காப்பாத்த யாரவது ஒரு ரட்சகன் வருவான்னு நானும் காத்திருந்து காத்திருந்து இப்போ அபப்டி ஒரு நம்பிக்கையையே விட்டுட்டேன்." என்றவள் அங்கிருந்து வெளியே சென்றாள்.அவளுக்கு கொடுக்கப்பட்ட உணவு அப்படியே கிடந்தது.

"இங்கே இருப்பதை விட சாவதே மேல்..." அதுவே சரியான முடிவாக தோன்றியது. ஒரு முடிவுக்கு வந்தவளாக வெளியே தாழிடப்பட்டு இருந்த அந்த அறையின் கதவை உள்ளேயும் தாளிட்டாள்.

அங்கிருந்த ஸ்டூலை எடுத்து போட்டாள்.  அந்த அறையின் மூலையில் சிதறிக்கிடந்த புடவைகளில் இருந்து ஒன்றை உருவினாள். அந்த ஸ்டூலின் மேல் ஏறி அங்கு இருந்த விட்டத்தில் அதை கட்டியவள் இன்னொரு முனையில் சுருக்கை மாட்டி கொண்டு அதை தன் தலையின் அருகே கொண்டு போனாள்.

அம்மா, தங்கைகள் நினைவு வந்தது. நான் எங்கே இருக்கிறேன், உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்று கூட அவர்களுக்கு தெரியப்போவது இல்லை என்ற எண்ணமே கண்களை கரித்தது. கண்ணை துடைத்து கொண்டு அதை கழுத்தில் மாட்டி கொண்டு காலால் அந்த ஸ்டூலை உதைக்கவும் அந்த அறையின் கதவு வெளியே திறக்கப்பட்டு, உள்ளே தாழிடப்பட்டதால் வெளியே இருந்து பலமாக தட்டப்படும் சத்தமும் கேட்டது. அதற்குள் யாரோ ஓடி வந்து கதவை உடைக்க முயல, இங்கு லக்ஷ்மியின் கழுத்தில் அந்த சுருக்கு இறுக தொடங்கியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.