(Reading time: 16 - 32 minutes)
Kaarigai
Kaarigai

பூமி பிளந்து என்னை உள்ளே இழுத்து கொள்ளட்டும்...இல்லை அந்த நெருப்பு கனல் என்னை விழுங்கட்டும் என்று கிடந்தாள்.

கூச்சல்...தடதடவென ஓடும் சத்தம்...எல்லாம் லக்ஷ்மியின் காதுகளில் விழுந்தும் விழாமல் இருந்தது. அந்த அறைக்குள் யாரோ நுழைந்தது உணர முடிந்தது அவளுக்கு. ஓடிய கிழவன் மறுபடியும் வந்துவிட்டானா என விரக்தி சிரிப்பு அவள் உதடுகளில்.

"பொண்ணு எழுந்திரு" ஹிந்தியில் பேசும் குரல் அந்த கிழவனது இல்லை. ஆனாலும் லக்ஷ்மிக்கு திரும்பி பார்க்க தோன்றவில்லை.

"எழுந்திரும்மா..." தமிழில் கூற இம்முறை எழுந்து நின்று திரும்பி பார்த்தாள் லட்சுமி.

சுந்தரத்திற்கு அவள் முகத்தில் இருந்து பார்வையை அகற்ற முடியவே இல்லை. அத்தனை அழகு...ஆனால் அவரை அவள் முகத்தில் நிலை கொள்ள வைத்தது அந்த அதீத அலங்காரத்திலும் அவள் கண்களில் தெரிந்த விரக்தியும் முகத்தில் இருந்த பிள்ளைத்தனமும். போலீஸ் உடையில் இருந்த சுந்தரத்தை பார்த்த லக்ஷ்மியின் கண்களில் பயம் இல்லை மாறாக ஒரு நம்பிக்கை தெரிந்தது. அதிலேயே புரிந்தது சுந்தரத்துக்கு அவள் காப்பாற்ற பட வேண்டிய பெண்களில் ஒருவள் என.

"வாம்மா..." என அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தார். வெளியே அந்த தடியர்கள் எல்லாம் ஒரு புறம் வீழ்ந்து கிடைக்க, போலீஸ் அங்கிருந்த ஒவ்வொரு அறையாக ஆணும் பெண்ணுமாக பலரை வெளியேற்றி கொண்டிருந்தது.

"சார் பாதி பேரு இன்போர்மஷன் கிடைச்சு ஓடிட்டாங்க. இப்போ சிக்குவது ஒரு நூறு பொண்ணுங்க தான். அவங்க எல்லாம் புதுசுனு நினைக்கிறோம்.அதன் எங்க ஓடணும்னு தெரியாம மாட்டிக்கிட்டாங்க..." ஒரு போலீஸ் காரர் சொல்ல தலை அசைத்த சுந்தரம் இந்த பெண்களை எல்லாம் வேன்ல ஏத்திட்டு அந்த பெண்கள் காப்பகத்துல தங்க வை. அந்த தடியனுகளை ஸ்டேஷன் கூட்டிட்டு போ. நாளைக்கு இவங்க கிட்ட எல்லாம் விவரம் கேட்டு அவங்கவங்க வீட்டுக்கு சொல்லி அனுப்பலாம்." என்றவர் தன் அருகே அமைதியாக நின்றிருந்த லட்சுமியிடம், "போம்மா பயப்படாத. இனி உனக்கு இந்த நரகத்துல வேலை இல்லை" என்று சொல்லி வேனில் ஏற்றி அனுப்பினார். அந்த வேனின் ஜன்னல் வழி அவளின் பார்வை அவரையே பார்த்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றது.

மற்ற மாநில பெண்களை எல்லாம் அந்தந்த மாநில அரசாங்கம் வசம் ஒப்படைக்க சொல்லிவிட்டு தமிழ்நாட்டை சேர்ந்த பெண்களுடன் சென்னை வந்ததும் அவர்களை எல்லாம் அங்கிருந்த ஒரு காப்பகத்தில் தங்க வைத்து அவர்களின் ஊர் விவரங்கள் எல்லாம் வாங்கி கொண்டு தொடர்பு கொள்ள துடங்கியிருந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.