(Reading time: 16 - 32 minutes)
Kaarigai
Kaarigai

தமிழ்நாட்டுல கடந்த ஒரு வருஷத்துல பதினைந்து வயசுல இருந்து இருபது வயசுக்கு உட்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பொண்ணுகளை தேடி நீங்க இது வரைக்கும் வந்துருக்கீங்க. உங்களுக்கு எல்லா உதவியும் பண்ண சொல்லி ஐஜி ஆர்டர்" பம்பாயின் அந்த பகுதி இன்ஸ்பெக்டர் சொல்ல,

"தேங்க்ஸ் மிஸ்டர் சர்மா. அந்த பெண்களை எல்லாம் கடத்தி வித்தவனை கைது பண்ணிட்டோம். அவன் மூலமா இங்க இருக்குற பிரபலமான ஒரு இடத்துல இது போன்ற பெண்களை எல்லாம் வைத்து தவறான தொழில் பண்றது தெரிஞ்சுது. அவங்களை இங்க இருந்து மீட்டு திரும்ப அவங்கவங்க ஊருக்கு அனுப்பி வெக்கணும்." -சுந்தரம் விளக்கினார்.

"ஹ்ம்ம்...ஆனா இந்த இடம் ரொம்ப பெருசு.இன்னும் சொல்ல போனா இது அனுமதியோடு இந்த மாதிரி தொழில் பண்ணும் இடம்னு கூட சொல்லலாம். இங்க உள்ள போயி செர்ச் பண்றது அவ்ளோ சுலபம் இல்லை. ஆனா ஒன்னு பண்ணலாம். அங்க இருக்கற ஒரு ஆளு மூலமா அவங்க தொழில் எதுவும் கெடாம நமக்கு கூட்டிட்டு போக வேண்டிய ஆட்களை மட்டும் கூட்டிட்டு போக அனுமதிக்க சொல்லலாம். அதுவே கஷ்டம் தான். ஆனா வேற வழி இல்லை" அந்த இன்ஸ்பெக்டர் சொல்லவும் சுந்தரத்திற்கு கோவம் வந்தது.

"அது எப்படி சார், அங்க இருக்குற யாரும் விருப்ப பட்டு இப்படி ஒரு தொழிலுக்கு போயிருக்க மாட்டாங்க. அப்படி இருக்கையிலே ஏதோ அவங்க கிட்ட கெஞ்சி கூத்தாடி கூட்டிட்டு வரணும்னு சொல்றது நம்ம டிபார்ட்மென்ட்க்கே அசிங்கம்." கோவத்தில் முகம் சிவக்க சொன்னார் சுந்தரம்.

"நீங்க சொல்றது உண்மை தான். நாம முயற்சி பண்ணலாம். ஆனா கடைசியில நீங்க வந்த காரியம் கூட நடக்காம போகலாம்" அந்த இன்ஸ்பெக்டர் சொல்லியும் சுந்தரம் உறுதியுடன் இருக்க, வேறு வழியின்றி அன்று மாலையே அந்த இடத்தை நோக்கி போலீஸ் படையுடன் கிளம்பினர்.

கட்டிலின் ஒரு ஓரத்தில் குறுகி படுத்திருந்தாள் லட்சுமி. அந்த கிழவன் வந்த வேலை முடிந்தது என கிளம்பி கொண்டிருந்தான்.வெளியே திடீரென ஏதோ சத்தம்.எல்லாரும் அங்கும் இங்கும் ஓடுவது போல.

அந்த கிழவன் ஹிந்தியில் ஏதோ அவளை உலுக்கி வெளியே வரும் சத்தத்தை காட்டி சொன்னான். அவன் சொன்னது புரியவில்லை என்பதை விட லக்ஷ்மியின் கவனம் அங்கு இல்லை. அவனே ஜன்னலை திறந்து பார்த்து ஏதோ சொல்லி கத்தி விட்டு அங்கிருந்த கதவை திறந்து கொண்டு ஓடினான். லட்சுமி அப்படியே அசைவின்றி படுத்திருந்தாள்.

பூகம்பம் வந்ததா இல்லை தீ பற்றி விட்டதா? நடக்கட்டும்...அப்படி ஏதாவது வரட்டும்...இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.