(Reading time: 16 - 32 minutes)
Kaarigai
Kaarigai

அதற்குள் கதவை உடைத்து கொண்டு வந்த ஒரு தடித்த உடல் கொண்டவன் அவளை அப்படியே காலோடு தூக்க, இன்னொருவன் ஓடி வந்து கழுத்தில் இருந்த சுருக்கை அகற்றினான்.

கீழே ஒரு மூலையில் அமர்ந்தவள் அருகே வந்து அமர்ந்தாள் அந்த தடித்தபெண்.

"என்னா நீ செத்து போகணுமா? உன்னை வாங்க நான் சொளையா அம்பதனாயிரம் கொடுத்திருக்கு. அதை சம்பாதிச்சு கொடுத்துட்டு செத்து போ. நாளைக்கு அந்த பேப்பர் கம்பெனி காரன் வருவான். உன்னால முடிஞ்சா அவன் கிட்ட வாங்கி கொடுத்துட்டு அவனோட போயிடு. அதை விட்டுட்டு சாகணும்னு நினைச்ச, நீ நெனைச்சு கூட பாக்க முடியாதபடி அசிங்கப்படுத்திடுவேன். ஜாக்ரதை" அவள் மிரட்டி விட்டு செல்ல முழங்காலில் முகம் புதைத்து அழுதாள். அவளின் தோளில் ஆதரவாக காய் விழுந்தது.

நிமிர்ந்து பார்த்தாள். அதே பெண்.

"லட்சுமி, உன்னை தப்பிக்க நினைக்காத தண்டனை கொடுமையா இருக்கும்னு சொன்னேன். ஆனா சாக நினைக்காத தண்டனை அதை விட கேவலமா இருக்கும்னு சொல்ல மறந்துட்டேன். வெளி உலகத்தை மறந்துடு லட்சுமி. அதை கண்ணால பாக்க கூட முடியாது" அந்த பெண் போயி விட்டாள்.

இங்கு வந்து இதோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் நாலு ஜென்மங்களாக நரகத்தில் இருப்பதை போல இருந்தது லக்ஷ்மிக்கு. ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தை பற்றி நினைத்தாலே உடல் நடுங்கியது. அங்கிருந்த கண்ணாடியில் தன் கோலத்தை பார்த்தாலே குமட்டி கொண்டு வந்தது லக்ஷ்மிக்கு. அந்த பேப்பர் கம்பெனி காரன் ஒரு அறுபது வயது கிழவன். அவனுக்கு இவளை பிடித்து போனதால் நிறைய பணத்தை அந்த பெண்மணியிடம் கொடுத்து அவளை அவனுக்காக மட்டும் காத்திருக்க செய்திருந்தான். அந்த கிழவனின் பார்வையும் அவனின் தொடுகையும் நெருப்பில் குளித்தால் கூட அந்த அழுக்கு போகாது என தோன்றியது லக்ஷ்மிக்கு.

"நீ ஒரு வகைல புண்ணியம் பண்ணிருக்க, இல்லைனா ஏதேதோ பிச்சைக்காரனுக்கு பைத்தியங்களுக்கும் உன்னை மாற்றி மாற்றி அனுப்பி வைக்காம ஒருத்தனோட நிறுத்திருக்காளே. ஹ்ம்ம்...அவன் ஆசை தீருற வரைக்கும் கொஞ்சமாவது நிம்மதியா இரு" என அந்த பெண் சொன்னபோது செத்து விடலாம் போல இருந்தது லக்ஷ்மிக்கு.

"வெல்கம் மிஸ்டர் சுந்தரம். உங்களுக்கு எந்த விதமான உதவியும் செய்ய நாங்க தயாரா இருக்கோம். கிரைம் பிரான்ச்ல நீங்க ரொம்ப திறமையான ஆஃபீஸ்ர்னு தெரியும். உங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.