இல்லை பிச்சை எடுத்து வாழும் மக்களை... அதிலும் இள வயதுள்ளர்வர்களைத்தான் அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.... அதே போல் பரிசோதனை எலிகளாக அனுப்ப அவர்கள் தேர்ந்தெடுப்பது அனாதை இல்லத்தில் வளரும் பிள்ளைகளை... இந்த முறைதான் அவர்களுக்கு உடனே தேவைப்பட்டதால் மாணவர்களை கடத்தும் நிலைக்கு சென்றுவிட்டார்கள்....”, மதி கூற என்ன மாணவர்கள் காணாமல் போனதற்கு காரணமும் இவர்களா என்று அதிர்ந்தார்கள் பத்திரிக்கையாளர்கள்...
“இங்கு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக சொல்லி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டியது... அங்கு சென்றவுடன் அவர்கள் செய்யும் வேலையோ பரிசோதனை எலிகளாக.... ஒரு முறை அப்படி போகிறவர்கள் திரும்பி வந்ததாக சரித்திரமே இல்லை... தேர்ந்தெடுக்கும் இளைஞனும் உறவென்று சொல்ல யாரும் இல்லாமல் இருப்பதால் அவன் மறைந்தாலும் தெரியவருவதில்லை.... இதை இவர்கள் பல வருடங்களாக செய்து வருகிறார்கள்..... ஆனால் கடைசியாக மாணவர்களை கடத்திய பொழுதுதான் இந்த விஷயமே எங்களுக்கு தெரிந்தது.... அத்தனை லாவகமாக இவர்கள் வேலை செய்கிறார்கள்.....
அது தவிர அந்த ஆராய்ச்சி கூடத்தில் மேலும் பல சோதனைகளும் நடைபெற்று வந்தன... இதற்கு எல்லாம் தலைமை ஏற்று நடத்துவது கைதான அந்த மூன்று விஞ்ஞானிகள்தான்....
விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசுத்துறை பணியாளர்கள் என்று மிகப் பெரிய விங் ஒன்று இவர்களுக்கு கீழே செயல்பட்டு வருகிறது... மிகப் பெரிய பலம் பொருந்திய நெட்வொர்க்.... எந்த இடத்திலும் சிறு ஓட்டை கூட விடாமல் வேலை செய்யும் ஆட்கள்...
எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்த விஷயம்... கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இந்த வழக்கிற்காக நாங்கள் செலவழித்திருக்கிறோம்.... அத்தனைக்கும் சாட்சிகள் கிடைத்தது சமீபத்தில்தான்.. இப்பொழுது உங்கள் கேள்விகளை கேட்க ஆரம்பிக்கலாம்....”, சந்திரன் கூற பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கணைகளை தொடுக்க தயாரானார்கள்....
தொடரும்
Next episode will be published on 20th May. This series is updated fortnightly on Wednesday mornings.
Go to Gayathri manthirathai story main page
{kunena_discuss:1216}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.