(Reading time: 11 - 21 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 31 - சாகம்பரி குமார்

திதி வைத்தியருக்கு உதவியாக இருந்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து மூலிகை மருந்தை தயார் செய்தனர்.

"இரண்டு வகையான மருந்து தயார் செய்கிறீர்கள்அவற்றை என்ன செய்ய வேண்டும்?" அதிதி கேட்டாள்.

' இரண்டு வகையான மருந்துகளில்  ஒன்று அபியுடைய உடல் முழுவதுமாக தடவி ஒரு துணி இழைகளை வைத்து இறுக்கமாக சுற்றிவிட வேண்டும் "

"பேண்டேஜ் மாதிரியா?'

" ஆமாம். முகத்தை தவிர உடல் முழுவதும் சுற்றிவிட்டு பிறகு இன்னொரு மருந்தை எடுத்து குளியல் மூலிகை நீர் தயாரிக்க வேண்டும் அபியை  குளியல் மூலிகை நீரில் ஊறவிட வேண்டும். மூன்று நாட்கள் அந்த நீரில் இருக்கும் வேண்டும்" என்றார். தொடர்ந்து,

"அதற்கு அடுத்து அபியை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும் இந்த மருத்துவத்தால் அவருடைய உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு மாற்றம் ஏற்படுகிறதா?. ரத்த அழுத்தம், இதய துடிப்புசுவாசம் அனைத்தையும் நாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருக்கணும்"

அவர்கள் பேசிக் கொண்டு இருந்தபோது…  மருத்துவத்திற்காக ஒதுக்கப்பட்ட அறையில் குளியல் தொட்டியை வைத்து அதிரதனும் வினயும் அனைத்து வகையான உபகரணங்களையும் இணைப்பதற்காக தயார் செய்து வைத்தனர். அந்த இடத்தை கிருபா பார்வையிட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி கொண்டிருந்தார்.

அபியின் வசதிக்காக அந்த அறையும் சூரிய வெளிச்சம் இல்லாமல் தடுக்கப்பட்டிருந்தது. மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டுமே அங்கு பரவி இருந்தது அந்த இருளில் அபி வீல் சேரில் உள்ளே வந்தாள். இருளில் அவளுடைய சில்-அவுட் தோற்றம் தெரிந்தது.

அந்த குளியல் தொட்டியில் வைத்து அனைத்து உபகரணங்களையும் இணைக்க வேண்டும்.

"அதிதிமுதல் கட்டமாக அபியின் இப்போதைய மெடிக்கல் பாராமீட்டர்ஸை அளந்து கொள்கிறோம்கைகளிலும் கால்களிலும்  அதற்கான சென்சர்களை 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.