(Reading time: 11 - 21 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அபிக்கு எந்த ஆபத்தும் வராமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற பழமையான மருத்துவ சிகிச்சை முறைகளை தடுப்பதற்கு என்றே சிலர் இருக்கின்றனர். " சற்று தயங்கி தொடர்ந்தான்.

"மெடிகல் மாபியா!. நாம் இந்த முறைகளை கையாளும் பொழுது பழமையான மருத்துவ முறைகளை கையாண்டு வெற்றி அடைந்துவிட்டால் நாம் நவீன மருத்துவத்தை தேடி போக மாட்டோம். அதனால் மருத்துவத் துறைக்கு பெரிய நஷ்டம் ஏற்படும். அதனை வியாபாரமாக நடத்திக்கொண்டு இருப்பவர்களால் லாபம் சம்பாதிக்க முடியாது. இப்பொழுதெல்லாம் சிறிய வியாதிக்காக மருத்துவமனைக்கு சென்றால் கூட மெடிகல் செக்கப் என்று ஆரம்பித்து நமக்கு இருக்கிற வியாதிகள் இல்லாத வியாதிகள் எல்லாத்தையும் பட்டியலிட்டு நம்மை ஒரு பெரிய நோயாளி ஆக்கி விடுவார்கள். நாம் அவர்களுடைய கஸ்டமர் ஆகிவிடுவோம். இதில் சில உண்மைகள் இருந்தாலும் சில வியாதிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை. உடனடியாக பெரிய அளவில் சிகிச்சை செய்ய வேண்டா ம். சில பாதுகாப்பு முறைகளை எடுத்துக் கொண்டாலே குணமாகி கூட போகின்ற வியாதிகளை கூட அவர்கள் பெரிய அளவில் சிகிச்சை செய்து வியாபாரிகள் ஆகி விடுகிறார்கள்."

"புரிகிறது ரதன்! இந்த மாதிரி பழைய மருத்துவ சிகிச்சை முறைகளில் அவ்வளவாக செலவு செய்யவும் தேவையில்லை  என்ன கொஞ்சம் பொறுமை அவசியம். அவ்வளவுதான்...  குணமாக நாட்கள் எடுக்கும். ஆனாலும் சரியான தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறோம். அதனால் மருத்துவ வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். அதனை தடுக்க முயற்சிக்கிறார்கள் சரிதானே

"அப்படித்தான் அங்கிள். நாங்கள் இருவரும் இப்பொழுது கிளம்புகிறோம். நேரம் கிடைக்கும் பொழுது உங்களை தொடர்பு கொள்கிறோம்." என்றவன் அதிதியிடம் திரும்பி,

'அதிதி நீ கவனமாக பார்த்துக் கொள் வினய் உனக்கு துணையாக இருப்பான்" என்றான்.

"நீ கவலைப்படாதே ரதன்!.  நான் அபிக்கு ஒரு ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வேன். ஏனெனில் இந்த இப்பொழுது நடைபெறுவது என்னுடைய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.