(Reading time: 11 - 21 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அதற்காக இப்படி நீ கடினமாக நடந்து கொண்டால் எங்களால் உனக்கு சிகிச்சை தர முடியாது எனவே பொறுமையாக இரு" என்றான்.

அதன் பிறகு அபி பொறுமையாக இருந்தாள். காலை இறுக கட்டியபின்...

 'இப்பொழுது நீ இந்த மூலிகை நீருக்குள் மூழ்கி போகிறாய். இந்த சுவாசிக்கும் கருவியை மட்டும் வைத்துக் கொள்உனக்கு சுவாசிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. இந்த மூலிகையில் மூன்று நாட்கள் வரைக்கும் நீ இருக்க வேண்டும். பிறகு புதிதாக மருந்து வைத்து மூன்று நாட்கள். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும். அப்போது தான் உன்னுடைய கால்கள் பலம் பெற்று நீட்ட முடியும். எங்களைப்போல் நிற்கவும் நடக்கவும் முடியும் . அது கொஞ்சம் வேதனை மிகுந்த சிகிச்சைதான். அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். புரிகிறதா?" வைத்தியர் விளக்கவும் அதிரதன் பேசினான்.

"இது ஒரு அளவுக்கு உனக்கு உதவும்உன்னுடைய தோலின் நிறத்தை மாற்றவும் முன்னால் எழுந்து நிற்கவும் நடக்கவும் இது உதவும். ஆனால் உன்னுடைய உடலில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளை சரிசெய்ய மரபணு சிகிச்சை தர வேண்டும். அது இந்த சிகிச்சை முடிந்த பிறகுதான் நான் செய்வேன

 "அது என்ன டெக்னிக்…" அதிதி கேட்க,

" நீ பயப்படத் தேவையில்லை. இப்பொழுது புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதனால் உனக்கு எந்த சிக்கலும் வராது" என்று சொன்னான்.

அவன் சொன்னது முழுவதும் புரிந்து கொண்டது போலவே சுவாச கருவியை இணைத்துக் கொண்டு அபி அந்த தொட்டியில் உள்ள நீரில் மூழ்க ஆரம்பித்தாள். அவளுடைய இதயத்துடிப்பை கவனிப்பதற்காக இதயத்துடிப்பு மானிட்டர் அவளுடன் இணைக்கப்பட்டது. தட தட தட வென்று அது ஓட ஆரம்பித்தது

"அதனை யாராவது ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நாடித்துடிப்பு சரியாக இருக்கிறதா... குறைந்தாலோ கூடினாலோ உடனே தெரிவிக்க வேண்டும்" என்ற வைத்தியர் சொன்னார்.

"அதிதி, வினய், அங்கிள்  மூன்று பேரும் மாற்றி மாற்றி ஷிப்ட் போல இந்த விஷயத்தை கவனித்து கொள்வார்கள்.' என்று அதிரதன் சொல்ல,

 "நான் இங்கே இருக்கிறேன். நீங்கள் வேறு உங்களுக்கு எதுவும் வேலை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.